முகப்பு /செய்தி /ஆன்மிகம் / சகல சங்கடங்களையும் நீக்கும் சங்கடஹர சதுர்த்தி விரதம் இன்று...

சகல சங்கடங்களையும் நீக்கும் சங்கடஹர சதுர்த்தி விரதம் இன்று...

பிள்ளையார்

பிள்ளையார்

விநாயகப் பெருமானை வழிபாடு செய்வதற்கு பல விரத தினங்கள் இருந்தாலும், விரதத்தில் மிகச் சிறந்ததும், சங்கடங்கள் அனைத்தையும் தீர்க்கக்கூடிய சங்கடஹர சதுர்த்தியில் விரதம் இருந்தால் அளவுக்கடந்த ஆனந்தத்தை அடையலாம். சகல சௌபாக்கியங்களையும் பெறலாம் என்பது ஐதீகம்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

வணங்குவதற்கு எளியராகவும், வாழ்வில் எல்லா வளங்களையும் தருபவராகவும் இருப்பவர் விநாயகப்பெருமான். அவரை எண்ணி வணங்கும் எல்லா நேரமும் விசேஷமானவைதான். எனினும் சதுர்த்தி நாளில் மேற்கொள்ளப்படும் சங்கடஹர சதுர்த்தி விரதம் கணபதிக்கு என்றே உருவான அருமையான விரதம். 'சங்கஷ்டம்' என்றால், கஷ்டங்கள் சேருதல் என்று பொருள். வாழ்வில் சேரும் சகல சங்கடங்களையும் நீக்கும் சதுர்த்தி விரதம் இன்று கடைப்பிடிக்கப்படவிருக்கிறது. பௌர்ணமியை அடுத்த நான்காம் நாள், சங்கடஹர சதுர்த்தி தினம். அன்றைக்கு மாலையும் இரவும் சேரும் நேரத்தில் விநாயகருக்கு வழிபாடு செய்யப்படுகிறது.

சதுர்த்தி என்றால் என்ன?

பௌர்ணமிக்கு அடுத்து வரும் நான்காம் நாள் சங்கடஹர சதுர்த்தி. சங்கட என்றால் துன்பம், ஹர என்றால் அழித்தல். துன்பங்களை அழிக்கும் விரதமே சங்கடஹர சதுர்த்தி. ஒவ்வொரு மாதமும் வரும் சங்கடஹர சதுர்த்தி நாளில் விரதம் இருந்தால் குடும்பத்தில் சுபிட்சமும், தடைகளின்றி எல்லா காரியங்களும் வெற்றியடையும். இந்த சதுர்த்தி திதியானது விநாயகப் பெருமானை வேண்டி விரதம் இருக்க உகந்த நாள் ஆகும். எண்ணியது யாவற்றையும் அளிக்கும் இந்த சங்கடஹர சதுர்த்தி ஒரு எளிமையான விரதமாகும்.

சதுர்த்தி தேதி,  நேரம்

சங்கஷ்டி சதுர்த்தி 2021 தேதி: டிசம்பர் 22, புதன்.

சதுர்த்தி திதி தொடங்குகிறது - டிசம்பர் 22, 2021 அன்று மாலை 04:52 .

சதுர்த்தி திதி முடியும் - டிசம்பர் 23, 2021 அன்று மாலை 06:27 .

சங்கஷ்டி சதுர்த்தி நாளில் சந்திர உதய நேரம் - இரவு 08:50 .

விரதம் இருக்கும் முறை

சங்கடஹர சதுர்த்தி அன்று, காலையில் குளித்துவிட்டு, அருகிலுள்ள விநாயகர் ஆலயத்துக்குச் செல்ல வேண்டும். பிள்ளையாரை 11 முறை வலம் வர வேண்டும். அறுகம்புல் கொடுத்து, விநாயகருக்கு அர்ச்சனை செய்தல் நல்லது. பின்னர் தோப்புக்கரணம் போட்டும் விநாயகரை வணங்க வேண்டும்.

மேலும் படிக்க..விநாயகர் சதுர்த்தி வரலாறு...

கோயிலுக்குச் சென்றுவிட்டு வீட்டுக்கு வந்ததும், பச்சரிசியை ஊறவைத்து, அத்துடன் சிறிது வெல்லத்தூளும் ஒரு வாழைப்பழமும் சேர்த்துப் பிசைந்து, பசுவுக்குக் கொடுக்க வேண்டும். கணபதியோடு பசு வழிபாடு செய்வது கூடுதல் நன்மை தரும். வீட்டிலேயே மோதகம், சித்திரான்னங்கள், பால், தேன், கொய்யா, வாழை, நாவல், கொழுக்கட்டை, சுண்டல் என்று தயாரித்து விநாயகருக்கு நைவேத்தியம் செய்து வழிபடலாம்.

விநாயகர்

விநாயகருக்குப் பிடித்த இலை வன்னி இலை. வன்னி இலைகளால் விநாயகரைப் பூஜிப்பது சிறப்பான பலன்களைத் தரும். அதிலும் வன்னி மரத்தடியே உறையும் கணபதி ஆனந்தமயமானவர். நினைத்த காரியம் தடையில்லாமல் நடக்க விரும்புபவர்கள், இந்த வன்னி விநாயகரை வலம் வந்து வேண்டினால், வேண்டியது கிடைக்கும் என்பது ஐதீகம்.

பலன்கள்:

இந்த நாளில் விநாயகப் பெருமானை வழிபட்டால் வளமான வாழ்வு கிடைக்கும் என்பது நம்பிக்கை. குழந்தை இல்லாத தம்பதிகளும் குழந்தை பாக்கியம் பெற சங்கஷ்டி சதுர்த்தி விரதத்தை கடைபிடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க... வெற்றிதரும் வெள்ளேருக்கு விநாயகர் வழிபாடு!

First published:

Tags: Hindu Temple