Home /News /spiritual /

சனி பிரதோஷம் 2022: பாவங்களும் தோஷங்களும் நீங்க சிவனை தரிசனம் செய்யுங்கள்...

சனி பிரதோஷம் 2022: பாவங்களும் தோஷங்களும் நீங்க சிவனை தரிசனம் செய்யுங்கள்...

சிவன்

சிவன்

திரயோதசி திதி சனிக்கிழமைகளில் வருவதால் சனி மகாபிரதோஷம் என்று அழைக்கப்படுகிறது. சனி மகாபிரதோஷ நாளில் இருக்கும் விரதம் ஆயிரம் சாதாரண தினப் பிரதோஷப் பலனைத் தரும். தேய்பிறை சனிக்கிழமை பிரதோஷ தினமான இன்று ஈசனை தரிசிப்பதால், சகல பாவங்களும் விலகும், திஷங்களும் நீங்கும்.  புண்ணியம் சேரும்.

மேலும் படிக்கவும் ...
    பாவங்களையெல்லாம் போக்கி அருளும் சனி பிரதோஷ நாளில், சிவாலயம் சென்று சிவ தரிசனம் செய்து வந்தால் சிறப்பு. அத்துடன் நந்திதேவருக்கு நடைபெறும் அபிஷேகத்தை கண்ணார தரிசனம் செய்தால், நம் பாவமெல்லாம் பறந்தோடும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள். நாளைய தினம் 29ஆம் தேதி சனிக்கிழமை, பிரதோஷம். தை மாதத்தின் பிரதோஷம் இன்னும் விசேஷமானது. 

    பிரதோஷ காலம்

    ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறை 13ஆம் நாள் திரயோதசி திதி தினங்களில் மாலை 4.30 ம்ணி முதல் ஆறு மணிவரை உள்ள காலம் பிரதோஷ காலம் எனப்படுகிறது.மேலும் பிரதோஷ காலம் என்பது சிவனுக்கு உகந்த காலமாக இருக்கிறது. பிரதோஷ காலத்தில் சிவனை வழிபடுபவர்களுக்கு சகல, சவுபாக்கியங்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. மேலும் நாம் செய்த சகல பாவங்களும் நீங்கி, புண்ணியங்கள் சேர பிரதோஷ வேளையில் சிவனுக்கு வில்வ இலையால் அர்ச்சனை செய்வது சிறப்பு.

    மேலும் படிக்க...Thai Amavasai 2022 : அன்று செய்ய வேண்டிய 3 மிக முக்கிய விசயங்கள் என்னென்ன?

    தான, தர்மங்களை செய்ய சனி பிரதோஷம் மிகவும் சிறந்த நாளாக கருதப்படுகிறது. இன்றைய நாளில் நீங்கள் செய்யும் சிறு தானம் கூட பெருமளவு பலன்களைக் கொடுக்கக் கூடியது. ரெட்டிப்பு பலன்களைக் கொடுக்கும் இந்த சனி பிரதோஷத்தை தவறவிடாமல் சிவ வழிபாடு மேற்கொண்டு பயனடையுங்கள். பிரதோஷ காலத்தில் சிவன் கோவிலுக்கு சென்று அங்கு நடக்கும் அபிஷேகத்தில் கலந்து கொள்ள வேண்டும்.

    மேலும் படிக்க... பாவத்தை போக்கும் தை மாத ஏகாதசி விரதம் இன்று...

    சனிக்கிழமை அன்று வருகிற பிரதோஷத்தை மகா பிரதோஷம் என்று கூறுவார்கள்.இந்தநாளில், சிவனாருக்கும் நந்திதேவருக்கும் விசேஷமான பூஜைகள் நடைபெறும். அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். அப்போது 16 வகையான அபிஷேகப் பொருட்களைக் கொண்டு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். பால், தயிர், சந்தனம், தேன், திரவியப்பொடி முதலான பொருட்களைக் கொண்டு அபிஷேகம் செய்வார்கள். பிரதோஷ அபிஷேகத்துக்கு, பொருட்கள் வழங்கினால், 108 பிரதோஷம் தரிசனம் செய்த புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம்
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Sivan

    அடுத்த செய்தி