Home /News /spiritual /

சனி தோஷம் விலக கால பைரவர் வழிபாடு சிறந்தது....

சனி தோஷம் விலக கால பைரவர் வழிபாடு சிறந்தது....

கால பைரவர்

கால பைரவர்

shani dhosham Remedies | சனியின் தாக்கத்தை நிறுத்திட கால பைரவர் வழிபாடே சிறந்தது ஆகும்.

    கால பைரவரை பற்றிச் சொல்ல வேண்டும் என்றால், காசி மாநகரில் காவல் தெய்வமாகவும் காக்கும் கடவுளாகவும் காலபைரவர் திகழ்கிறார். காசியில் பைரவருக்கு வழிபாடுகள் முடிந்த பிறகு தான் காசி விஸ்வநாதருக்கு வழிபாடுகள் நடைபெறும் வழக்கம் உள்ளது. காசி யாத்திரை செல்பவர்கள் கங்கையில் நீராடி வழிபட்டு இறுதியாக கால பைரவரையும் வழிபட்டால் தான் காசி யாத்திரை செய்ததன் முழுப் பலனும் கிட்டும் என்பது விதியாகும்.

    மேலும் இவர் ஒரு சில சிவன் கோவிலின் வட கிழக்குப் பகுதியில் நின்ற கோலத்தில் காட்சி தருபவர். இவர் சனி பகவானின் குரு ஆவார். அந்த வகையில் இவரை சனிக்கிழமையில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட சனி தோஷம் தீரும். அதிலும், கால பைரவர், காலத்தை கட்டுப்படுத்தும் பைரவர் ஆவார்.

    கால பைரவரை வழிபடும் முறை

    தாமரைப்பூ மாலை, வில்வ மாலை, தும்பைப்பூ மாலை, சந்தன மாலை ஆகியவை பைரவருக்கு உகந்ததாக கூறப்படுகிறது. வாசனைப் பூக்களில் மல்லிகைப்பூவை தவிர்த்து மற்ற அனைத்து பூக்களும் பைரவருக்கு சமர்ப்பிக்கப்படுகின்றன.

    சனி தோஷம் முழுமையாக அகல கால பைரவருக்கு விரதம் இருப்பது விசேஷம். இந்தக் கால பைரவ விரதம் என்பது... அஷ்டமி திதிகளிலும் கொண்டாடப்படுகிறது. அதில் செவ்வாய்க்கிழமை வருகின்ற அஷ்டமியானது சிறப்பு வாய்ந்ததாகும். பைரவ மூர்த்தி விரதத்தினை தொடர்ந்து இருபத்து ஒரு முறை இருப்பது சிறப்பானதாக கருதப்படுகிறது. அந்த சமயத்தில், கால பைரவரின் மந்திரத்தை ஜபித்தால் நன்மைகள் பல செய்யும்.

    மேலும் படிக்க... சித்தர்கள் வணங்கும் நவபாஷாண பைரவர்...

    கால பைரவர் மந்திரம்:

    ”ஓம் சூல ஹஸ்தாய வித்மஹே ஸ்வாந வாஹாய தீமஹி தந்நோ பைரவ: ப்ரசோதயாத்”

    "ஓம் திகம்பராய வித்மஹே தீர்கதிஷணாய தீமஹி தந்நோ பைரவ: ப்ரசோதயாத்"

    மேலும் படிக்க... அஷ்ட பைரவர்களும் அவரை வணங்குவதற்குரிய காயத்ரி மந்திரங்களும்!

    இந்த மந்திரத்தை பக்தி சிரத்தையுடன், 27 முறை கூறி வழிபட வேண்டும். மாலை வேளையில் 6 மணியிலிருந்து 7 மணிக்குள்ளாக சிவன் கோவிலுக்கு சென்று பைரவர் சந்நிதியில் நெய் விளக்கேற்றி, இம்மந்திரத்தை 27 முறை கூறி வழிபட தீவினைகள் நீங்கும். குறிப்பாக மரணத்தை குறித்த பயங்கள் நீங்கும். வறுமை ஏற்படாமல் காக்கும். நவகிரக தோஷங்கள் நீங்கும்.

    மேலும் படிக்க... உங்கள் கடன் தீர வேண்டுமா? அப்போ உடனே இந்த பரிகாரத்தை பைரவருக்கு செய்யுங்கள்...

    அத்துடன் புதிய நீலத்துணியில் கறுப்பு எள்ளை வைத்து அதை நல்லெண்ணெயில் நனைத்து பிறகு அதை இரும்புக்கிண்ணத்தினுள் வைக்க வேண்டும். பின்னர் அந்த இரும்புக்கிண்ணத்தில் நல்லெண்ணெயை ஊற்ற வேண்டும். அந்த நல்லெண்ணெயில் நாம் வைத்த நீலத்துணி நன்றாக மூழ்கியிருக்க வேண்டும். அப்படி மூழ்கியவுடன் அந்த நீலதுணியில் தீபமேற்ற வேண்டும். இப்படி 8 தீபங்களை ஏற்ற வேண்டும். இப்படியே தொடர்ந்து 16 சனிக்கிழமைகளுக்கு கால பைரவரின் சன்னதியில் தீபங்களை ஏற்றிவர சனியின் தாக்கம் நின்றுவிடும் என்பதும் நம்பிக்கை.
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Dhosham | தோஷம்

    அடுத்த செய்தி