சனி பகவானின் இந்த காயத்திரி மந்திரத்தை சொல்ல கை மேல் பலன் கிடைக்கும்...
சனி பகவானின் இந்த காயத்திரி மந்திரத்தை சொல்ல கை மேல் பலன் கிடைக்கும்...
சனி பகவான்
Shani Bhagavan | ஒவ்வொரு சனிக்கிழமையும் காலை 8 மணியிலிருந்து 9 மணிக்குள்ளாக சனிஸ்வர பகவானுக்கு சங்கு பூக்கள் சமர்ப்பித்து, கருப்பு எள் சிறிதளவு நிவேதித்து, நல்லெண்ணெய் தீபம் ஏற்றி, சனி மந்திரங்கள் துதித்து வழிபட வேண்டும்.
சூரிய புத்திரனான சனி பகவானை கண்டு பலரும் அஞ்சுவதுண்டு. ஆனால் முற்பிறவியில் நாம் செய்த பாவ புண்ணியங்களுக்கு ஏற்றவாறே அவர் நமக்கு பலன்களை அளிக்கிறார். சனி பகவானின் அருளை பெற்றால் வாழ்வில் வசதிகள் பெருகும், நீண்டகாலம் நோய் நொடி இன்றி வாழலாம் என்பது நம்பிக்கை. இப்படி பல நன்மைகளை தரும் சனிபகவானின் இந்த காயத்திரி மந்திரத்தை சொன்னல் கை மேல் நல்ல பலன்கள் கிடைக்கும் என்பது ஐதீகம்.
காகக் கொடியை உடையவரும், கையில் கமண்டலத்தை கொண்டவரும், மெதுவாக நகரும் தன்மை கொண்டவருமான சனி பகவானை நினைத்து தியானம் செய்வதன் பலனாக அவர் நம்மை காத்து ரட்சிப்பார். இந்த மந்திரத்தை சனிக்கிழமைகளில் 108 முறை ஜெபிப்பதன் பலனாக மேலே கூறிய பலன்கள் அனைத்தையும் பெறலாம் என்பது நம்பிக்கை.
வழிபடும் முறையும் பலன்களும்
சனீஸ்வர பகவான் கோயிலுக்கு செல்ல முடியாதவர்கள் உங்கள் வீட்டிற்கு அருகில் இருக்கும் நவக்கிரக சன்னதியில் இருக்கும் சனி பகவானுக்கு ஒவ்வொரு சனிக்கிழமையும் காலை 8 மணியிலிருந்து 9 மணிக்குள்ளாக சங்கு பூக்கள் சமர்ப்பித்து, கருப்பு எள் சிறிதளவு நிவேதித்து, நல்லெண்ணெய் தீபம் ஏற்றி, சனி மந்திரங்கள் துதித்து வழிபட வேண்டும். இவ்வாறு 9 முதல் 27 வாரங்கள் வரை செய்வது சனி கிரக தோஷங்களை நீக்கி நன்மையான பலன்களை உண்டாக்கும்.
Published by:Vaijayanthi S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.