• HOME
  • »
  • NEWS
  • »
  • spiritual
  • »
  • சனி பகவானால் உண்டான தோஷங்களை தீர்க்க எளிய பரிகாரங்கள்!

சனி பகவானால் உண்டான தோஷங்களை தீர்க்க எளிய பரிகாரங்கள்!

தோஷங்களை தீர்க்க எளிய பரிகாரங்கள்

தோஷங்களை தீர்க்க எளிய பரிகாரங்கள்

பச்சரிசிப் பொடியை எறும்புகள் தூக்கிச் சென்றாலே உங்களுடைய பல பாவங்கள், நீங்கள் அறிந்தும் அறியாமலும் செய்த பாவங்கள் நீங்கிவிடும் என்பது ஐதீகம்...

  • Share this:
    சனிக்கிழமையன்று பச்சரிசியை ஒரு கைப்பிடி அளவு எடுத்து பொடியாக்கிக் கொள்ளுங்கள். அதனை கையில் வைத்துக்கொண்டு சூரிய நமஸ்காரம் செய்ய வேண்டும். அப்படி செய்வதினால் நாம் செய்த பாவங்களை போக்கி நமக்கு நன்மை நடக்கும் ந்ன்பது ஐதீகம்..

    உங்கள் அருகில் உள்ள விநாயகர் கோயிலுக்கு சென்று மரத்தடி விநாயகர் அல்லது தெருமுனை விநாயகரை மனதார வேண்டி, தரிசித்து பிரார்த்தனை செய்யுங்கள். அதன் பின்னர் மூன்று முறை வலம் வந்து விநாயகரைச் சுற்றிலும் பச்சரிசிப் பொடியைத் தூவிவிடுங்கள்.

    அந்த பச்சரிசிப் பொடியை எறும்புகள் தூக்கிச் சென்றாலே உங்களுடைய பல பாவங்கள், நீங்கள் அறிந்தும் அறியாமலும் செய்த பாவங்கள் நீங்கிவிடும். அதுமட்டுமல்லாமல் அப்படி தூக்கிச் சென்ற பச்சரிசிப் பொடியை, எறும்புகள் முழுவதுமாக சாப்பிட்டு தீர்த்துவிடாது. மழைக்காலத்திற்கு உணவு வேண்டுமே என்று தன் புற்றுக்குள் சேமித்துவைத்துக் கொள்ளும்.

    இப்படி எறும்புகள் எடுத்து வந்த பொடியை, புற்றுக்குள் இருக்கும் பொடியை, இரண்டே கால் வருடங்களாக இருக்கும் பொடியை முப்பத்து முக்கோடி தேவர்களும் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். இரண்டரை ஆண்டுக்கு ஒருமுறை கிரக நிலை மாறும். அப்போது அரிசிப் பொடியின் குணமும் மாறிவிடும். இதனால்தான், எறும்புக்கு அடிக்கடி பச்சரிசி பொடி இடவேண்டும் என்கிறது சாஸ்திரம்.

    நாளை ஐப்பசி ஞாயிற்று கிழமை.. சூரிய வழிபாடு செய்ய உகந்தநாள்...

    பலன்கள்:

    ஒரேயொரு எறும்பு நாம் இடுகிற ஒரேயொரு துளி பச்சரிசிப் பொடியைச் சாப்பிட்டால், அது நூறு அந்தணர்களுக்கு உணவிட்டதற்குச் சமம். மேலும் சனி பகவானின் தொல்லையில் இருந்தும் விடுபடலாம். ஏழரைச் சனி, அஷ்டமச் சனி, கண்டச்சனி, அர்த்தாஷ்டமச் சனி முதலான சனிதோஷமும் பெரிய தாக்கத்தையோ கெடு பலனையோ உண்டாக்காது. அதனால்தான், அரிசிமாவில் கோலமிடுவது வழக்கமாகவே இருக்கிறது. அந்த அரிசிமாவு எறும்புக்கும் பூச்சிகளுக்கும் உணவாகின்றன.

    சில மலைக் கோவிகளில் குரங்குகள் நிறைய இருக்கும் . அதற்கு வாழைப்பழம் கொடுக்க வேண்டும். ஊனமுற்றவர்களுக்கு உணவு , உடை அளிக்க வேண்டும். அரச மரத்திற்கு நீர் ஊற்றுதல் . அன்ன தானம் , நீர் பந்தல் போன்றவைகளை செய்தல் வேண்டும்."நிழலின் அருமை வெயிலில் தெரியும்" என்பது போல ஒருவனுக்கு வயிறார உணவு கொடுப்பதும் , தாகம் என்று வருபவர்களுக்கு குடிக்க தண்ணீர் கொடுப்பதும் எல்லாவற்றையும் விட மிகச் சிறந்தது.

    மேலும் படிக்க... நவகிரக பாதிப்புகளிலிருந்து விடுபட எளிய பரிகாரங்கள்

    ஏழு ஜென்ம பாவங்களை போக்க வேண்டுமா? அப்போ உடனே இதை செய்யுங்கள்!

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: