தமிழக திருக்கோவில்களில் நடைபெறும் நிகழ்வுகளை ஒளிபரப்ப தனி டி.வி சேனல்

திருக்கோவில் தொலைக்காட்சிக்காக 8.77 கோடி ரூபாய் ஒதுக்கி தமிழக அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது

தமிழக திருக்கோவில்களில் நடைபெறும் நிகழ்வுகளை ஒளிபரப்ப தனி டி.வி சேனல்
கோப்புப் படம்
  • Share this:
தமிழகத்தில் உள்ள அனைத்து திருக்கோவில்களிலும் நடைபெறும் முக்கியமான நிகழ்வுகளை ஒளிபரப்ப ’திருக்கோவில்’ எனும் பெயரில் தொலைக்காட்சி தொடங்குவதற்கான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

நடைபெற்று முடிந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பின் படி இந்து சமய அறநிலையத்துறை சார்பில் சமய கொள்கைகளை பரப்பிட ’திருக்கோவில்’ எனும் பெயரில் தொலைக்காட்சி தொடங்க 8.77 கோடி ரூபாய் ஒதுக்கி தமிழக அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக திருக்கோவில் தொலைக்காட்சி ஒளிபரப்புக்கான முன்னேற்பாடு பணிகள் தொடந்து நடைபெற்று வருவதாகவும், தமிழகத்தில் உள்ள அனைத்து திருக்கோவில்களிலும் நடைபெறும் முக்கியமான நிகழ்வுகளும் ஒளிப்பதிவு செய்யும் பணிகள் தொடங்கியிருப்பதாகவும் இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.



Also read... பிரதமரின் குடியிருப்பு திட்டத்தில் மோசடி - மனநலம் பாதித்த பெண்ணுக்கு வரவேண்டிய பணம் கையாடல்

திருக்கோவில் தொலைக்காட்சியில் நாள் முழுவதும் ஒளிபரப்பு செய்யும் வகையில் அதிக படக்காட்சிகள் தேவைப்படுவதால் ஒவ்வொரு கோவில்களிலும் நடைபெறும் பிரசித்தி பெற்ற அனைத்து நிகழ்ச்சிகளையும் ஒளிப்பதிவு செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.அவ்வாறு படம்பிடிக்கும் போது கடைபிடிப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் தமிழக அரசு விரிவாக வெளியிட்டுள்ளது.
First published: July 6, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading