• HOME
  • »
  • NEWS
  • »
  • spiritual
  • »
  • பிரம்ம மூகூர்த்தத்தின் ரகசியம் தெரியுமா?

பிரம்ம மூகூர்த்தத்தின் ரகசியம் தெரியுமா?

பிரம்ம மூகூர்த்தம்

பிரம்ம மூகூர்த்தம்

பிரம்மமுகூர்த்தத்தில் எழுந்து செயற்படும்போது மனநிலையானது ஒரு நிலைப்படுகின்றது. அதற்கு ஏற்ற காலமாக இது விளங்குகின்றது. அதிகாலையில் சூரிய  வெப்பம் கிடையாது. சந்திரனுடைய வெப்பதிட்ப குளுமையும் கிடையாது.

  • Share this:
    ஒவ்வொரு நாளும் பொழுது விடியும் அதிகாலையான 4.30 மணி முதல் 6 மணி வரையான காலநேரத்தை, படைப்புக் கடவுளான பிரம்மாவுடன் ஒப்பிட்டு ‘பிரம்ம முகூர்த்தம்’ என்று அழைக்கிறோம். மேலும் மாற்றத்தை ஏற்படுத்த நினைத்த காரியங்களை நிறைவேற்ற, லட்சுமி கடாட்சம் நிறைந்த இந்த பிரம்ம முகூர்த்த நேரத்தைப் பயன்படுத்தலாம். பிரம்ம முகூர்த்தத்தில் திதி வார நட்சத்திர யோக தோஷங்கள் கிடையாது. அந்த நேரம் எப்போதுமே சுபவேளைதான். இந்நேரத்தில் எழுந்து குளித்து இறை வழிபாட்டைச் செய்து நமது வேலையை செய்ய துவங்கினால் அன்று முழுவதும் வெற்றிதான். பிரம்ம முகூர்த்தத்தில் வீட்டில் விளக்கேற்றி வழிபடுவதன் மூலம், சகல சௌபாக்கியங்களையும் பெறலாம் என்பது ஐதீகம்.

    மேலும் இந்த பிரம்ம மூகூர்த்தத்தில் கண்டிப்பாக தூங்கக்கூடாது. தியானம், வழிபாடு போன்ற பயனுள்ள பணிகளைச் செய்யவேண்டும். இந்த நேரத்தில் செய்யும் வழிபாடு பலமடங்கு புண்ணியத்தை தரும் என்பது நம்பிக்கை. சிலர் இந்த நேரத்தில்தான் திருமணம் போன்ற சுப காரியங்களை நடத்திவார்கள்.இந்த நேரத்தில் நடத்தும் சுபகாரியங்கள் அனைத்தும் சிறப்பாகவும் நீடித்து நிலைத்து நிற்கும் என்பது நம்பிக்கை.

     

    பிரம்ம மூகூர்த்தத்தில் எழுந்தால் கிடைக்கும் பலன்கள் என்னென்ன?

    1. பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்தால் பல அற்புத நன்மைகள் நிகழ்வதாக சாஸ்திரங்களும், விஞ்ஞானமும் கூறுகின்றன. வைகறைப் பொழுதில் சூரியனிடம் இருந்து பூமியை வந்தடையும் ஒளிக்கதிர்கள் சக்தி வாய்ந்தவை. இவை நம் உடலில் படும்போது நரம்புகளுக்கு புத்துயிர் கிடைக்கின்றது. உற்சாகத்தையும், சுறுசுறுப்பையும் வழங்குகின்றது. கண்கள் -ஆரோக்கியத்தையும், உடல் - வலிமையும் பெறுகின்றன. அதனால்தான் சூரிய நமஸ்காரம் செய்வது மிகச் சிறந்த வழிபாடு என்று நம் முன்னோர்கள் கூறினார்கள்.

    2. அதிகாலையில் பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்திருக்க வேண்டும் என்று சாஸ்திரங்கள் தெரிவிக்கின்றன. எல்லாருமே ஒரு குறிப்பிட்ட நேரத்தில், வீட்டில் வேலை செய்ய வேண்டும். பின்பு குறிப்பிட்ட நேரத்தில் ஓய்வு எடுக்க வேண்டும். உறங்க வேண்டிய நேரத்தில் விழித்திருந்தால், நோய்கள் எல்லாம் நம்மை நோக்கி வரும். அதனால்தான் நமது பெரியோர்கள் அதிகாலையில் எழ வேண்டும் என்றார்கள். அந்த நேரத்தில் இறைவனிடம் வைக்கின்ற அனைத்துவித பிரார்த்தனைகள் கண்கூடாகவே நிறைவேறும்.

    3. பிரம்ம முகூர்த்தத்தில் திதி, வார, நட்சத்திர, யோக தோஷங்கள் கிடையாது. இந்த நேரம் எப்போதுமே சுபவேளை தான் இந்நேரத்தில் எழுந்து குளித்து இறைவழிபாட்டைச் செய்து நமது வேலையை செய்யத் தொடங்கினால் அன்று முழுவதும் வெற்றிதான். பிரம்ம முகூர்த்தத்தில் வீட்டில் விளக்கேற்றி வழிபடுவதன் மூலம் சகல சவுபாக்கியங்களும் பெறலாம் என்பது ஐதீகம்.

    4. தெய்வீகத்தன்மை இருக்கக்கூடிய நேரம், பிரம்ம முகூர்த்தம். அந்த நேரத்தில் எழுந்து, உங்கள் பணிகளைத் தொடங்கினால், வாழ்வில் மாற்றத்தை சந்திக்கலாம். நினைத்த காரியங்கள் நிறைவேறும். லட்சுமி கடாட்சம் இல்லத்தில் குடியேறும்.

    அறிவியல் காரணங்கள்

    உடலுக்கும், உள்ளத்துக்கும், ஊட்டம் தருவது காலையில் கண் விழிப்பதாகும். அதிகாலை நேரத்தில் எழுவதால் உடல் சுறுசுறுப்படையும், ஆரோக்கியமாக இருக்கும். சத்தம் இல்லாமலும், பரபரப்பு இல்லாமலும், காரியங்கள் சிறப்பாக முடியும். சுத்தமான காற்று இருக்கும் அதிகாலைப் பொழுதில் வெளியே நடந்து செல்வதால், சுத்தமான காற்று சுறுசுறுப்பை உண்டாக்கி நல்ல உடல் ஆரோக்கியத்தைக் கொடுக்கும் என்பது அறிவியல் பூர்வமாக நிறுபிக்கப்பட்டுள்ளது.

    மேலும் படிக்க... பெளர்ணமி அன்று கேட்க வேண்டிய ஸ்லோகம்!

    விளக்கு ஏற்ற உகந்த நேரம்

    தீபம் ஏற்றுவதற்கு உகந்த நேரமாக அதிகாலை பிரம்ம முகூர்த்தமான நான்கு மணி முதல் ஆறு மணி வரையும் (சூரிய உதயத்திற்கு முன்) கருதப்படுகிறது. காலையில் விளக்கு ஏற்றி வழிபட்டால் அனைத்து செயல்களும் நன்மையைத் தரும் என்பது ஐதீகம். சனிக்கிழமை பிரம்ம முகூர்த்தத்தில் நல்லெண்ணெய் அகல்விளக்கு ஏற்றி சிவ பெருமானை வழிபட்டு வர சனி தோஷம் தீரும். தரித்திரம் தொலையும்.

    மேலும் படிக்க... குரு பெயர்ச்சி 2021 | ராஜயோகத்தை பெறபோகும் ராசிகாரர்கள் யார் தெரியுமா?
    பிரம்மமுகூர்த்தத்தில் எழுந்து செயற்படும்போது மனநிலையானது ஒரு நிலைப்படுகின்றது. அதற்கு ஏற்ற காலமாக இது விளங்குகின்றது. அதிகாலையில் சூரிய  வெப்பம் கிடையாது. சந்திரனுடைய வெப்பதிட்ப குளுமையும் கிடையாது.


    இவை இரண்டுக்கும் மத்தியில் நிலவுவது பிரம்ம முகூர்த்தம் இந்நேரத்தில் எழுந்து ஜெபிப்பது. தியானம் செய்வது, யோகம் செய்வது, கல்வி கற்பது, வேலைகள் செய்வது சிறந்த பயனைத் தருவதோடு ஞாபக சக்தியும் விருத்தியாகும்.


    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: