ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

30 ஆண்டுகளுக்குப் பிறகு கும்ப ராசியில் சனி..! பெயர்ச்சி தேதி, ஏழரைச் சனி தொடக்கம் முடிவு, முன்னோட்டம்.!

30 ஆண்டுகளுக்குப் பிறகு கும்ப ராசியில் சனி..! பெயர்ச்சி தேதி, ஏழரைச் சனி தொடக்கம் முடிவு, முன்னோட்டம்.!

சனி பெயர்ச்சி

சனி பெயர்ச்சி

Sani Peyarchi Palangal Tamil 2023 | தனது ஆட்சி வீடான மகரத்தில் கடந்த இரண்டரை ஆண்டுகளாக சஞ்சரித்து வரும் சனி, ஜனவரி மாதம் 17 ஆம் தேதி கும்ப ராசிக்கு பெயர்ச்சியாகிறது. பெயர்ச்சி தேதி, வக்கிரம் மற்றும் அதிசார காலம், எந்த ராசிகளுக்கு ஏழரை சனி தொடக்கம் மற்றும் முடிவு ஆகியவற்றைப் பற்றி பார்க்கலாம்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஒவ்வொரு கிரகமும் ஒவ்வொரு ராசியில், குறிப்பிட்ட காலம் வரை சஞ்சரிக்கும். அதில் ஒரு ராசியில் அதிகமாக சஞ்சரிக்கும் கிரகம் சனி. சனியைப் பொறுத்தவரை, இரண்டரை முதல் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை, ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி ஆகும். எனவே நீண்ட காலத்துக்கு ஒரு ராசியில் சனி இருப்பதால் இது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். தனது ஆட்சி வீடான மகரத்தில் கடந்த இரண்டரை ஆண்டுகளாக சஞ்சரித்து வரும் சனி, ஜனவரி மாதம் 17 ஆம் தேதி கும்ப ராசிக்கு பெயர்ச்சியாகிறது. பெயர்ச்சி தேதி, வக்கிரம் மற்றும் அதிசார காலம், எந்த ராசிகளுக்கு ஏழரை சனி தொடக்கம் மற்றும் முடிவு ஆகியவற்றைப் பற்றி பார்க்கலாம்.

சனியின் ஆட்சி வீடுகள் மகரம் மற்றும் கும்பம்

12 ராசிகளில் மகரம் மற்றும் கும்பம் என்ற இரண்டு ராசிகளுமே சனியின் ஆட்சி வீடாகும். இரண்டுமே ஆட்சி ராசியாக இருந்தாலுமே, இரண்டின் தன்மையும் வேறுபடும்.

மகரம் என்பது நில ராசி ஸ்திரத்தன்மை கொண்டது. எனவே எல்லா விஷயங்களுமே நிதானமாக இருக்கும்.

கும்பம் என்பது காற்று ராசி; எனவே கும்பத்தில் சனியின் செயல்பாடுகள் மற்றும் தன்மை துரிதமாக, மகரத்தை விட வித்தியாசமாக இருக்கும்.

மகர ராசியில் சூரியன், சந்திரன் மற்றும் செவ்வாய் நட்சத்திரங்கள் அமர்ந்திருக்கும்.

கும்ப ராசியில் செவ்வாய், ராகு மற்றும் குருவின் நட்சத்திரங்கள் அமர்ந்திருக்கும்.

மகரத்தை விட கும்பத்தில் மாறுதல்கள் விரைவாக நிகழும்

இந்த மாறுதல்களால் கும்ப ராசியில் சனி செயல்பாடு மகராசியை விட வேறாக இருக்கும். மகர ராசியில் இருந்து சனியால் ஏற்பட்ட நன்மையோ அல்லது தீமையோ எதுவாக இருந்தாலும் அவை மெதுவாகத்தான் இருந்திருக்கும். குறிப்பாக, மகர ராசியில் சனி பெயர்ச்சி காலத்தில் நன்மை பெற்ற ராசியினருக்கு நிதானமாகத் தான் மாறுதல்கள் ஏற்பட்டிருக்கும். வரும் ஆண்டு வரக்கூடிய சனிப்பெயர்ச்சியில், கும்பராசியில் சனி அமர்ந்திருப்பது மூலம் நன்மை பெறும் ராசியினர், அவர்களுக்கான நல்ல பலன்கள் விரைவாகவே பெறுவார்கள்.

கும்ப ராசியில் சனி – பொதுவான அமைப்புகள்

ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு தன்மைகள், அமைப்புகள் ஆகியவை இருக்கும். ஜாதகக் கட்டத்தில், 11வது ராசி கும்பம். கும்பம் என்பது மூத்த சகோதரர்கள், குழுவாக இணைந்து செயல்படுவது, கூட்டு முயற்சி, மூத்தோர், லாபம், வணிக வளர்ச்சி, சமூகத்தில் முன்னேற்றம், காதல், காதல் திருமணம், மறுமணம் ஆகியவற்றைக் குறிக்கும் ராசியாகும். கும்பத்தில் சனி பெயர்ச்சியாகும் போது, இது சார்ந்த பல விஷயங்களில் நேர்மையாக நடப்பது அவசியம்.

கும்ப ராசியில் சனி பெயர்ச்சியால் ஏழரை சனி பாதிப்புகள்

சனி என்பவர் நீதி, நியாயம், தர்மம், பொய் சொல்லாமல் இருப்பது, கடின உழைப்பு, தாமதம் ஆகியவற்றை குறிக்கும் கிரகம். எனவே சனி பெயர்ச்சி ஒரு சிலருக்கு மிகவும் கடினமான காலமாகவே இருக்கும். பல சோதனைகளை எதிர்கொள்ள வைக்கும். அந்த வகையில், ஒவ்வொரு சனி பெயர்ச்சியிலும், மூன்று ராசிகள் ஏழரைச் சனியை எதிர்கொள்கின்றன.

2023 ஆம் ஆண்டின் சனி பெயர்ச்சியால் ஏழரை சனி எந்த ராசிக்கு

தற்போது உள்ள சனியின் மகர ராசி சஞ்சாரத்தால், தனுசு ராசி, மகர ராசி மற்றும் கும்ப ராசிக்கு ஏழரை சனி நடைபெற்று வருகிறது.

தனுசு ராசிக்கு ஏழரை சனி முடிவடைகிறது

மகர ராசிக்கு ஜென்ம சனி முடிந்து, 7.5 சனியின் கடைசி பகுதி தொடங்க இருக்கிறது

கும்ப ராசிக்கு, விரைய சனி முடிந்து, ஜென்ம சனி தொடங்குகிறது

மீன ராசிக்கு லாப சனி முடிந்து, விரைய சனி தொடங்குகிறது

தனுசு ராசிக்கு இது மிகப் பெரிய மாற்றம் அளிக்கும் காலமாகவும், வளர்ச்சிக்கான காலமாகவும் இருக்கும் என்று கூறலாம். இரண்டாவது ஸ்தானத்தில் சனி அமர்ந்து இருந்து மூன்றாவது ஸ்தானமான கும்பத்திற்கு செல்கிறார். தனுசு ராசிக்கு மிகப்பெரிய யோகமும் சாதகமான வாய்ப்புகளும் காத்திருக்கின்றன.

அஷ்டம சனி விலகும் மிதுனம்

மிதுன ராசிக்கு அஷ்டம சனியால்பல்வேறு சிக்கல்கள், உடல்நல தொந்தரவுகள், பின்னடைவுகள் ஆகியவற்றை எதிர்கொண்ட காலம் முடிவடையப் போகிறது. வரப்போகும் 2023 ஆம் ஆண்டு கும்ப ராசிக்கு சனி பெயர்ச்சியாவது, அதுவும் காற்று ராசியில் ஆட்சி பெற்று அமர்ந்திருப்பது மிதுன ராசிக்கு மிகப்பெரிய விடுதலை உணர்வை தரும். இதுநாள் வரை மனதில் இருந்த கவலைகள் நீங்கி நிம்மதி பெறுவார்கள்.

சனியால் பொதுவாக எந்த ராசியினருக்கு நன்மை கிடைக்கும்

பொதுவாகவே, உங்கள் ராசியிலிருந்து சனி 3, 6 மற்றும் 11 ஆகிய வீடுகளில் பெயர்ச்சி ஆகும் போது அது யோகமான காலமாகக் கூறப்படுகிறது. அந்த அடிப்படையில் வரும் சனிப்பெயர்ச்சி மேஷ ராசி, கன்னி ராசி மற்றும் தனுசு ராசிக்கு மிகவும் யோகமான காலமாக அமையும்.

சனியின் பார்வை படும் ராசிகள்:

சனி 3ஆம் பார்வையாக தன்னுடைய நீச வீடான மேஷ ராசியை பார்க்கிறார். அதேபோல ஏழாம் பார்வையாக தன்னுடைய பகை வீடான சிம்ம ராசியை பார்கிறார். அடுத்ததாக, 10 ஆம் பார்வையாக விருச்சிகராசியை பார்க்கிறார்.

சனி பெயர்ச்சி தேதிகள்:

திருக்கணிதப்படி ஜனவரி 17, 2023 அன்று சனி மகரத்தில் இருந்து கும்பத்தில் பெயர்ச்சி ஆகிறார். இந்த பெயர்ச்சி மார்ச் 29, 2025 வரை நீடிக்கும்.

வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி மார்ச் 14, 2023 அன்று சனி மகரத்தில் இருந்து கும்பத்தில் பெயர்ச்சி ஆகிறார்.

Published by:Selvi M
First published:

Tags: Astrology, Sani Peyarchi, Tamil News