ஆஞ்சநேயரை எல்லா நாட்களிலும் வழிபடலாம். அதற்கு வசதிப்படாதவர்கள் புதன், வியாழன், சனி இம்மூன்று கிழமைகளில் வழிபடலாம். ஸ்ரீஆஞ்சநேயரின் திருவுருவப் படத்தையோ அல்லது ராமர் பட்டாபிஷேக படத்தையோ பூஜையில் வைத்து, அவருக்கு நைவேத்தியமாக அவரவர் வசதிக்கேற்ப பழங்களையும், வடை போன்ற இன்ன பிறவற்றையும் சமர்ப்பிக்கலாம்.
துளசி மாலையும், வெற்றிலைச்சுருள் மாலையும் ஆஞ்சநேயருக்கு விசேஷமானவை. பூஜையை ஆரம்பிக்கும்போது ‘ஸ்ரீராமஜெயம்’ அல்லது ஸ்ரீராம ஜெயராம ஜெய ஜெய ராம என்ற மந்திரத்தை 54 முறை அல்லது 108 முறை தியானிக்க வேண்டும். அதன்பிறகு தமது பிரார்த்தனையைச் சொல்லி நாமாவளி மற்றும் மலர் வழிபாட்டினால் அர்ச்சனை செய்ய வேண்டும். கவசம் மற்றும் ஸ்தோத்திரங்களைப் பாராயணம் செய்ய வேண்டும்.
ஆஞ்சநேயரை வணங்கி வந்தால், ஜாதக தோஷம், கிரக பீடைகள், கிரக பெயர்ச்சி கெடுபலன்கள், கெட்ட கனவுகள் என பல்வேறு துன்பங்களிலிருந்து உங்களை காத்து அனைத்து வகை நன்மைகளைப் பெற்று இனிய வாழ்வும், ஆரோக்கியமும் பெற்று வாழலாம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Hindu Temple