சதுரகிரி மலைக்கு செல்லும் பக்தர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி...
சதுரகிரி மலைக்கு செல்லும் பக்தர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி...
சதுரகிரி மலை
sathuragiri sundara magalingam temple | சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு வருகிற 27ஆம் தேதி வெள்ளிக்கிழமை முதல் 31ஆம் தேதி செவ்வாய்க்கிழமை வரை 5 நாட்களுக்கு பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது . இந்தக் கோவில் சுமார் 4,500 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்து ஒவ்வொரு மாதமும் பிரதோஷம், பெளவுர்ணமி, அமாவாசை நாட்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்.
சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு வைகாசி பிரதோஷம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு வருகிற 27ஆம் தேதி வெள்ளிக்கிழமை முதல் 31ஆம் தேதி செவ்வாய்க்கிழமை வரை 5 நாட்களுக்கு பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதில் பக்தர்கள் காலை 7 மணி முதல் மதியம் 11 மணி வரை மட்டுமே கோவிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அனுமதி அளிக்கப்பட்ட நாட்களில் மழை பெய்தால் மலையேற பக்தர்களுக்கு தடை விதிக்கப்படும்.
மேலும் பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை, கோவில் நிர்வாகம் செய்து வருகிறது. தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால் வனப்பகுதியில் எளிதில் தீப்பற்றும் பொருட்களைக் கொண்டுச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் இரவு நேரங்களில் மலைப்பகுதியில் தங்குவதற்கு கோவில் நிர்வாகம் தடை விதித்துள்ளது.
மேலும் கோவிலுக்கு செல்லும் மலைப்பாதைகளில் உள்ள நீரோடை பகுதிகளில் பக்தர்கள் இறங்கி குளிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் முகக்கவசம் அணிந்து தமிழக அரசின் கட்டுப்பாட்டு வழிமுறைகளை பின்பற்றி கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
சதுரகிரிமலை ஏறுவதால் கிடைக்கும் பலன்கள்
சதுரகிரி மலையில் ஓடுகின்ற தீர்த்தங்களும், மூலிகைகளும் பல நோய்களை தீர்க்க வல்லது. இந்த மலை ஏறி இறங்கினால் உடலில் உள்ள வியர்வை வெளியேறி, மூலிகை கலந்த காற்று பட்டு பல நோய்கள் குணமாவதாகச் சொல்கிறார்கள். இதனால் மாதந்தோறும் ஏராளமான பக்தர்கள் சதுரகிரி மலையேறி சாமி தரிசனம் செய்கின்றனர்.
Published by:Vaijayanthi S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.