• HOME
  • »
  • NEWS
  • »
  • spiritual
  • »
  • saraswathi pooja : சரஸ்வதி பூஜை அன்று இந்த கோயில்களுக்கு சென்றால் அவ்வளவு பலன் கிடைக்குமாம்!

saraswathi pooja : சரஸ்வதி பூஜை அன்று இந்த கோயில்களுக்கு சென்றால் அவ்வளவு பலன் கிடைக்குமாம்!

சரஸ்வதி பூஜை

சரஸ்வதி பூஜை

சரஸ்வதி பூஜை : பாயசத்தைப் பெற்றுச் சாப்பிட்டால், விரைவில் குழந்தைப்பேறு கிடைக்கும் என்பது நம்பிக்கையாக இருக்கிறது.

  • Share this:
    கல்வி, தொழில் சிறக்கவும், தொழில் வெற்றிக்காகவும் சரஸ்வதி அன்னையை வழிபடுவதே சரஸ்வதி பூஜையாகும்.

    9 நாட்கள் கொண்டாடப்படும் நவராத்திரி பண்டிகையின் கடைசி மூன்று நாட்கள் முக்கியமானது. துர்காஷ்டமி, சரஸ்வதிபூஜை, ஆயுதபூஜை, விஜயதசமி ஆகியவை அடுத்தடுத்து கொண்டாடப்படுகின்றன. இந்த ஆண்டு சரஸ்வதி பூஜை அக்டோபர் 14ஆம் தேதி (நாளை) கொண்டாடப்படுகிறது. பூஜை செய்ய நல்ல நேரம்: காலை 9 மணி முதல் 10.30 மணிவரை பிற்பகல் 1 மணி முதல் 1.30 வரை மாலை 04.30 மணிவரை 6.50 மணிவரை என கணிக்கப்பட்டுள்ளது. வீட்டில் முறைப்படி பூஜை செய்து முடித்த பின்பு நேரம் இருந்தால் கட்டாயம் இந்த கோயில்களுக்கு சென்று வாருங்கள். பலன் கிட்டும். அதிலும் விசேஷமான சரஸ்வதி பூஜை நாளன்று சரஸ்வதி கோயிலுக்கு செல்வது மிகவும் நல்லது.

    திருவாரூர் மாவட்டம் கூத்தனூர் அருகே பூந்தோட்டம் கிராமத்தில் அமைந்திருக்கும் சரஸ்வதி கோயில் மிகவும் பிரபலமான ஒரு திருத்தலமாகும். இந்த கோயிலை இரண்டாம் ராஜராஜசோழன் ஒட்டக் கூத்தருக்கு தானமாக வழங்கியதாக வரலாறு மரபும் உள்ளது. இந்த ஆலயத்தில் வெகு விமரிசையாக சரஸ்வதி பூஜை ஆண்டுந்தோறும் கொண்டாடப்படுகிறது. அதே போல் வாணியம்பாடியில் உள்ள ஸ்ரீ அதிதீஸ்வரர் சரஸ்வதி கோயிலும் மிகவும் பிரசித்தி பெற திருக்கோயில் ஆகும்.

    சரஸ்வதி பூஜை செய்ய நல்ல நேரம் எது ? எப்படி வழிப்பட வேண்டும் ?

    வேதாரண்யத்தில் உள்ள வீணையில்லாத சரஸ்வதி கோயில் மிக மிக பிரபலமான சரஸ்வதி திருத்தளம் ஆகும். இங்கு சரஸ்வதி வீணை இல்லாமல் இருக்க முக்கிய காரணம் உமையம்மை. தெலுங்கானாவில் உள்ள ஞான சரஸ்வதி கோவில் வித்யாரம்பத்துக்கு பெயர் போனது.கேரளா சரஸ்வதி கோவில் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ளது. குழந்தையில்லாத தம்பதியர்கள் இந்த ஆலயத்திற்கு சென்று பால், சர்க்கரை மற்றும் பச்சரிசி சேர்த்துச் செய்யப்படும் பாயசத்தைப் பெற்றுச் சாப்பிட்டால், விரைவில் குழந்தைப்பேறு கிடைக்கும் என்பது நம்பிக்கையாக இருக்கிறது. எனவே வீட்டில் விடுமுறை நாட்கள் அடுத்தடுத்து வருவதால் வீட்டில் பூஜை முடித்து விட்டு நேரம் இருந்தால் கண்டிப்பாக இந்த கோயில்களுக்கு சென்று வாருங்கள்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: