• HOME
  • »
  • NEWS
  • »
  • spiritual
  • »
  • சரஸ்வதி பூஜை : வீட்டில் குழந்தைகளை வைத்திருப்பவர்கள் கட்டாயம் செய்ய வேண்டியது!

சரஸ்வதி பூஜை : வீட்டில் குழந்தைகளை வைத்திருப்பவர்கள் கட்டாயம் செய்ய வேண்டியது!

சரஸ்வதி பூஜை

சரஸ்வதி பூஜை

saraswathi pooja : சரஸ்வதி படத்திற்கு வெள்ளை பூக்களை மாலையாக அணிந்தால் மிகவும் நல்லது.

  • Share this:
    கல்விக்கு அதிபதியான சரஸ்வதியை கொண்டாடும் விதமாக சரஸ்வதி ஆவாஹணம் செய்து வழிபடுவது வழக்கம்.

    கல்வி கடவுளான சரஸ்வதி தேவி தான் ஆயக்கலைகள் அறுபத்து நான்கினிற்கும் தலைவியாகவும், தெய்வமாகவும் திகழ்கிறாள்.ஆலயத்தில் வெகு விமரிசையாக கொண்டாடப்படும் ஒரு மிக முக்கியமான விழா விஜயதசமி. விஜயதசமியன்று காலை ருத்ராபிஷேகம் நடைபெறும். சரஸ்வதி பூஜை கொண்டாடப்படும் இந்த நேரத்தில் வீட்டு பூஜை செய்யும் போது குழந்தைகள் கல்வி அறிவில் சிறக்க நோட்டு புத்தகங்களை வைக்க வேண்டும். குழந்தைகளை அமர வைத்து அன்றைய நாளில் ஓரிரு வரிகளை எழுத வைக்க வேண்டும். நோட்டில் பிள்ளையார் சுழி போட்டு லாபம் என்று எழுத வேண்டும். அந்த நோட்டுப் புத்தகத்தில் குழந்தைகளை எழுத வைப்பது சிறப்பு என்றும் கருதப்படுகிறது. வீட்டிலேயே சரஸ்வதி படத்திற்கு முன்பாகவும் குழந்தைகளை எழுத வைக்கலாம்.

    அரிசியில் எழுதும் குழந்தைகள் தங்களுடைய குழந்தைகளின் கல்வி சிறப்பாக அமைந்திட விரும்பும் பெற்றோர்கள், தங்கள் குழந்தையின் பிறந்த நாளின் போதோ அல்லது குழந்தையைப் பள்ளியில் சேர்ப்பதற்கு முன்பாகவோ, தங்கள் குழந்தையுடன் சரஸ்வதி பூஜையை செய்தால் மிகவும் நல்லது. பஞ்சாமிர்தம், பால்பாயசம் போன்றவற்றைப் படைத்து, தங்கள் குழந்தைகளின் கல்வித் தொடக்கத்திற்கான சிறப்பு வழிபாடுகளை செய்தால் பலன் கிட்டும். சரஸ்வதி தேவிக்கு வெண்ணிறம் மிகவும் உகந்தது. எனவே, வெள்ளை புடவை அணிந்து, வெண்ணிற அன்னப்பறவையை ‘வாகனமாக' கொண்டிருக்கிறார். எனவே வீட்டில் சரஸ்வதி படத்திற்கு வெள்ளை பூக்களை மாலையாக அணிந்தால் மிகவும் நல்லது.

    ஆயுத பூஜைக்கு வெள்ளை மற்றும் கருப்பு கொண்டை கடலை சுண்டல் செய்ய தயாராகிட்டீங்களா..? இதை கொஞ்சம் படிங்க

    கல்வி செல்வம் ஒருவருக்கு கிடைத்தால் போதும் வீரமும், செல்வமும் தானாகவே தேடி வரும். கல்விக்கு அதிபதியான சரஸ்வதியை கொண்டாடும் விதமாக சரஸ்வதி பூஜையை வீடுகளில் வழிபட தவறாதீர்கள். சரஸ்வதி பூஜை செய்யும் போது முதலில் செய்ய வேண்டிய பூஜைகளை வழக்கம் போல் செய்து, புத்தகங்கள் மற்றும் ஆயுதங்களுக்கு சந்தனம், குங்குமம் இட்டு, பூ சார்த்த வேண்டும்.நடுவில் நான்கு இதழ்களும் சுற்றிலும் எட்டு இதழ்களும் கூடிய தாமரைக் கோலமிட்டு அலங்கரிக்கவும். மையத்தில், ஓம் என்றும் எல்லா இதழ்களிலும், ஐம் என்றும் எழுதவும். மையத்தில் திருவிளக்கும் நான்கு மற்றும் எட்டு இதழ்களில் தீபங்கள்
    ஏற்றி வைக்கவும்.இப்படி செய்தால் உங்களுக்கு வேண்டுதலுக்கான பலன் கிட்டும் என்று முன்னோர்களால் குறிப்பிடப்பட்டுள்ளது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: