Home /News /spiritual /

சங்கடங்களை நீக்கும் சங்கடஹர சதுர்த்தி விரதம் அனுஷ்டிக்கும் முறை...

சங்கடங்களை நீக்கும் சங்கடஹர சதுர்த்தி விரதம் அனுஷ்டிக்கும் முறை...

பிள்ளையார்

பிள்ளையார்

சனி தோஷத்திற்கு உள்ளாகிறவர்கள் இவ்விரதத்தை அனுஷ்டித்தால், சனியின் தாக்கம் குறையும் என்பது நம்பிக்கை.

    விநாயகப் பெருமானை வழிபாடு செய்வதற்கு பல விரத தினங்கள் இருந்தாலும், விரதத்தில் மிகச் சிறந்ததும், சங்கடங்கள் அனைத்தையும் தீர்க்கக்கூடிய சங்கடஹர சதுர்த்தியில் விரதம் இருந்தால் அளவுக்கடந்த ஆனந்தத்தை அடையலாம். சகல சௌபாக்கியங்களையும் பெறலாம் என்பது ஐதீகம். வணங்குவதற்கு எளியராகவும், வாழ்வில் எல்லா வளங்களையும் தருபவராகவும் இருப்பவர் விநாயகப்பெருமான். அவரை எண்ணி வணங்கும் எல்லா நேரமும் விசேஷமானவைதான். எனினும் சதுர்த்தி நாளில் மேற்கொள்ளப்படும் சங்கடஹர சதுர்த்தி விரதம் கணபதிக்கு என்றே உருவான அருமையான விரதம். இதை மேற்கொண்டு கணபதியை பூஜிக்கும் பக்தர்களுக்கு எந்தக் குறையும் இருப்பதில்லை என்றே சொல்லப்படுகிறது.

    சதுர்த்தி என்றால் என்ன?

    பௌர்ணமிக்கு அடுத்து வரும் நான்காம் நாள் சங்கடஹர சதுர்த்தி. சங்கட என்றால் துன்பம், ஹர என்றால் அழித்தல். துன்பங்களை அழிக்கும் விரதமே சங்கடஹர சதுர்த்தி. ஒவ்வொரு மாதமும் வரும் சங்கடஹர சதுர்த்தி நாளில் விரதம் இருந்தால் குடும்பத்தில் சுபிட்சமும், தடைகளின்றி எல்லா காரியங்களும் வெற்றியடையும். இந்த சதுர்த்தி திதியானது விநாயகப் பெருமானை வேண்டி விரதம் இருக்க உகந்த நாள் ஆகும். எண்ணியது யாவற்றையும் அளிக்கும் இந்த சங்கடஹர சதுர்த்தி ஒரு எளிமையான விரதமாகும்.

    விரதம் அனுஷ்டிக்கும் முறை

    சங்கடஹர சதுர்த்தி வரும் அதிகாலையில் எழுந்து வீட்டில் உள்ள விநாயகரை முதலில் தரிசித்து விட வேண்டும். பின்னர் குளித்து முடித்து விநாயகருக்கு விளக்கேற்றி, அருகம்புல் அல்லது கிடைத்த மலர்களை வைத்து பூஜிக்கலாம். தூப தீப, நைவேத்தியம் செய்வது சிறப்பானது. அன்று முழுவதும் அதாவது மாலை வரை உபவாசம் இருப்பது நல்லது. மாலை வேளையில் அருகில் உள்ள கணபதி கோயிலுக்குச் சென்று சங்கடஹர சதுர்த்தி பூஜையில் கலந்து கொள்ள வேண்டும். வசதி இருந்தால் அபிஷேகம், அர்ச்சனை செய்யலாம். பிரசாதமும் அளிக்கலாம்.

    மேலும் படிக்க...  தடைகள் நீங்கி அனைத்து காரியங்களும் சித்தி பெற இந்த ஸ்லோகத்தை சொல்லுங்கள்....

    வழிபட்டு வீடு திரும்பும்போது அந்த நாளைய சந்திரனை தரிசித்து வேண்ட வேண்டும். அதன்பிறகு உணவு முடித்து விரதத்தை பூர்த்தி செய்யலாம். முடியாதவர்கள் பால், பழங்கள் போன்றவற்றை உட்கொள்ளலாம். தேய்பிறை செவ்வாய்க்கிழமை அன்று வரும் சதுர்த்தி திதியில் துவங்கி ஓர் ஆண்டு முழுமையாக இந்த விரதம் இருந்தால் எண்ணியது எண்ணியவாறே நடக்கும். எல்லா காரியமும் தடையின்றி நடக்கும் என்று சொல்லப்படுகிறது.

    சங்கடஹர சதுர்த்தி விரதத்தின் பலன்கள்:

    இந்த சங்கடஹர சதுர்த்தி விரதத்தை கடைபிடிப்பதால் நோய்கள் குணமடைந்து உடல் ஆரோக்கியம் மேம்படும். வாழ்க்கையில் தொடர்ந்து பலவகை துன்பங்களுக்கு உள்ளாகிறவர்கள் நிலையான சந்தோஷத்தை அடைய முடியும். மேலும் சதுர்த்தி தினத்தில் சந்திரனை ஆட்டிப் படைத்தவர் விநாயகப் பெருமான். எனவே சங்கடஹர சதுர்த்தி நாளில் விநாயகரை வணங்குபவர்களுக்கு சந்திர தோஷம் ஏற்படாது என்பது நம்பிக்கை.

    விநாயகர்


    மிகச் சிறப்பான கல்வி அறிவு, புத்திக்கூர்மை, நீண்ட ஆயுள், நிலையான செல்வம் என பலவிதமான நன்மைகளை அடைய முடியும். சனி தோஷத்திற்கு உள்ளாகிறவர்கள் இவ்விரதத்தை அனுஷ்டித்தால், சனியின் தாக்கம் குறையும் என்பது நம்பிக்கை.

    பூஜைக்கான நல்ல நேரம் குறித்த தகவல்

    சதுர்த்தி நாளில் விநாயகப் பெருமானை வழிபட்டு விரதம் கடைப்பிடித்தால் நன்மைகள் பல வந்து சேரும். இன்று சௌபாக்ய யோகம் காலை முதல் மதியம் 03:06 வரை இருக்கும். பின்னர் ஷோபன யோகம் தொடங்கும். சௌபாக்ய யோகத்தில் விநாயகப் பெருமானை வழிபடுவது மகிழ்ச்சியையும், நல்ல அதிர்ஷ்டத்தையும் அதிகரிக்கச் செய்யும்.

    இந்து நாட்காட்டியின்படி, மகம் கிருஷ்ண சதுர்த்தி இன்று காலை 08:51 முதல் நாளை, ஜனவரி 22 காலை 09:14 வரை. ஜனவரி 21-ம் தேதி மகம் நட்சத்திரம் காலை 09:43 வரை. மகா நட்சத்திரம் சுப காரியங்களுக்கு உகந்ததாக கருதப்படுவதில்லை, எனவே நீங்கள் காலை 09:43 மணிக்கு பிறகு கணபதியை வணங்க வேண்டும். அதன் பிறகு செய்யப்படும் வழிபாடு வேண்டுதல்களுக்கு அதிர்ஷ்ட யோகம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

    மேலும் படிக்க...வெற்றிதரும் வெள்ளேருக்கு விநாயகர் வழிபாடு!

    மேலும் இன்று மதியம் 12:11 மணி முதல் 12:54 மணி வரை சுப நேரம். இந்த நேரத்தில் நீங்கள் எந்த சுப காரியத்தையும் தொடங்க விரும்பினால், அதை நீங்கள் செய்யலாம். இன்றைய நாள் மிகவும் நல்ல நாள்.

    சந்திர உதய நேரம்

    இன்று சந்திரன் 09:00 மணிக்கு உதயமாகும். இந்த நேரத்தில் சந்திரனையும் வணங்குவது நன்மையாகும். அதன் பின்னர் உணவு உண்டு விரதத்தை முடிக்கலாம்.

    விநாயகர் மந்திரம்

    விநாயகப் பெருமானை வழிபடும் நேரத்தில், நீங்கள் ஓம் கம் கணபதயே நம, ஸ்ரீ கணேசா நம, ஓம் வக்ரதுண்டாய நம, ஓம் ஏகதந்தாய வித்மஹே வக்ரதுண்டாய தீமஹி தன்னோ தந்திஹ் பிரச்சோதயாத் மற்றும் ஓம் வக்ரதுண்ட மஹாகாய சூரிய கோடி ஸம்ப்ரபாஹ், சர்வ கர்ஸ் கர்வே, நிர்விக் கர்வே. மந்திரங்களைப் சொல்லிக் கொண்டே பூஜை செய்ய வேண்டும்.

    மேலும் படிக்க... Sankashti Chaturthi 2022: சங்கடஹர சதுர்த்தி விரதம் இருந்தால் பித்ருதோஷம் உள்ளிட்ட பல தோஷங்கள் நீங்குமாம்!
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Temple

    அடுத்த செய்தி