Home /News /spiritual /

Sankashti Chaturthi 2022: சங்கடஹர சதுர்த்தி விரதம் இருந்தால் பித்ருதோஷம் உள்ளிட்ட பல தோஷங்கள் நீங்குமாம்!

Sankashti Chaturthi 2022: சங்கடஹர சதுர்த்தி விரதம் இருந்தால் பித்ருதோஷம் உள்ளிட்ட பல தோஷங்கள் நீங்குமாம்!

Sankashti Chaturthi 2022: வினை தீர்ப்பான் விநாயகர் என்பார்கள். அதிலும் குறிப்பாக நாம் விநாயகருக்குக்கு மிகவும் உகந்த அவர் அவதரித்த சதுர்த்தி திதி நாளில் நாம் விரதமிருந்து வழிபட்டு வர அனைத்து சங்கடங்களும் விலகி நாம் வேண்டக் கூடிய வரங்களை விநாயகர் வாரி வழங்குவார் என்பது நம்பிக்கை.

மேலும் படிக்கவும் ...
    நமக்கு ஏற்படக்கூடிய சங்கடங்கள் அனைத்தையும் போக்கும் சதுர்த்தி சங்கடஹர சதுர்த்தி என்று போற்றுகின்றன ஞானநூல்கள். அன்றைய நாளில் செய்யும் விநாயகர் வழிபாடு நம் சங்கடங்கள் எல்லாவற்றையும் போக்கும் என்பது நம்பிக்கை. சங்கடஹர சதுர்த்திகளில் தலையாயது மகா சங்கடஹர சதுர்த்தி. அன்றைய நாளில் முறையாக விரதம் இருந்து பிள்ளையாரை எவர் ஒருவர் வழிபடுகிறாரோ அவருக்கு பித்ருதோஷம் உள்ளிட்ட பல தோஷங்கள் நீங்கும், கடன் தொல்லையில் இருந்து விடுபடலாம்.

    அதோடு நம் கஷ்டங்கள் அனைத்தும் நீங்கும். சங்கடம் என்றால் கஷ்டம் என்று பொருள் ஹர என்றால் அழிப்பது என்று பொருள். விரதம் இருந்து சங்கடங்களை அழிப்பதற்கான நாளையே சங்கடரஹர சதுர்த்தி என்கிறோம். சங்கடஹர சதுர்த்தி நாளில் கீழே உள்ள பிள்ளையார் மந்திரதை ஜபிப்பதால் நமது கஷ்டங்கள் அனைத்தும் விலகும் என்பது நம்பிக்கை.

    சங்கடஹர சதுர்த்தி மந்திரம்:

    ஓம் ஸ்ரீம் கணாதிபதயே ஏகதந்தாய லம்போதராய
    ஹேரம்பாய நாலிகேர ப்ரியாய மோதபக்ஷணாய
    மமாபீஷ்ட பலம் தேஹி ப்ரதிகூலம் மே நஸ்யது
    அநுகூலம் மே வஸமானய ஸ்வாஹா

    பக்தர்கள் வேண்டிய வரத்தை நல்கும் கணபதியே தங்களை நமஸ்கரிக்கிறேன். முழு முதற் கடவுளாகவும், பூத கணங்களுக்கெல்லாம் தலைவனாகவும் இருப்பவரே. பக்தர்களை துன்பத்தில் இருந்து காத்து இன்பம் அளிப்பவரே. பக்தர்கர்களோடு எப்போதும் நிலைகொள்பவரே. பக்தர்கள் தொடங்கும் எந்த ஒரு செயலையும் வெற்றிகொள்ள செய்பவரே. பக்தர்களை சுற்றியுள்ள எதிர்மறையானவற்றை விலக்கி நன்மைகளைத் தரும் நேர்மறை ஆற்றலை பெற செய்பவரே உங்களை மீண்டும் நமஸ்கரிக்கிறேன் என்று பொருள்படும்.

    மேலும் படிக்க... தடைகள் நீங்கி அனைத்து காரியங்களும் சித்தி பெற இந்த ஸ்லோகத்தை சொல்லுங்கள்....

    பலன்கள்

    சங்கடஹர சதுர்த்தி நாளில் இந்த மந்திரத்தை கூறுவதன் பயனாக காரியம் சித்தி அடையும். திருமண தடை நீங்கும். கடன் தொல்லை தீரும். இப்படி பல நன்மைகள் இந்த மந்திரத்தின் மூலம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

    மேலும் படிக்க... வெற்றிதரும் வெள்ளேருக்கு விநாயகர் வழிபாடு!
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Dhosham | தோஷம், Temple

    அடுத்த செய்தி