பாவங்களையெல்லாம் போக்கி அருளும் சனி பிரதோஷ நாளில், சிவாலயம் சென்று சிவ தரிசனம் செய்து வந்தால் சிறப்பு. அத்துடன் நந்திதேவருக்கு நடைபெறும் அபிஷேகத்தை கண்ணார தரிசனம் செய்தால், நம் பாவமெல்லாம் பறந்தோடும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள். வருகின்ற பிப்ரவரி 18ஆம் தேதி சனிக்கிழமை, பிரதோஷம். மாசி மாதத்தின் பிரதோஷம் இன்னும் விசேஷமானது. அன்று திருவோணம் மற்றும் சிவராத்திரி கொண்டாடப்படுகிறது.
பிரதோஷ காலம்
ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறை 13ஆம் நாள் திரயோதசி திதி தினங்களில் மாலை 4.30 மணி முதல் 6.00 மணிவரை உள்ள காலம் பிரதோஷ காலம் எனப்படுகிறது. மேலும் பிரதோஷ காலம் என்பது சிவனுக்கு உகந்த காலமாக இருக்கிறது. பிரதோஷ காலத்தில் சிவனை வழிபடுபவர்களுக்கு சகல, சவுபாக்கியங்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. மேலும் நாம் செய்த சகல பாவங்களும் நீங்கி, புண்ணியங்கள் சேர பிரதோஷ வேளையில் சிவனுக்கு வில்வ இலையால் அர்ச்சனை செய்வது சிறப்பு.
தான, தர்மங்களை செய்ய சனி பிரதோஷம் மிகவும் சிறந்த நாளாக கருதப்படுகிறது. இன்றைய நாளில் நீங்கள் செய்யும் சிறு தானம் கூட பெருமளவு பலன்களைக் கொடுக்கக் கூடியது. ரெட்டிப்பு பலன்களைக் கொடுக்கும் இந்த சனி பிரதோஷத்தை தவறவிடாமல் சிவ வழிபாடு மேற்கொண்டு பயனடையுங்கள். பிரதோஷ காலத்தில் சிவன் கோவிலுக்கு சென்று அங்கு நடக்கும் அபிஷேகத்தில் கலந்து கொள்ள வேண்டும்.
Also see... மகா சிவராத்திரி 2023 எப்போது? தேதி, நேரம் குறித்த தகவல்கள்...
சனிக்கிழமை அன்று வருகிற பிரதோஷத்தை மகா பிரதோஷம் என்று கூறுவார்கள். இந்தநாளில், சிவனாருக்கும் நந்திதேவருக்கும் விசேஷமான பூஜைகள் நடைபெறும். அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். அப்போது 16 வகையான அபிஷேகப் பொருட்களைக் கொண்டு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். பால், தயிர், சந்தனம், தேன், திரவியப்பொடி முதலான பொருட்களைக் கொண்டு அபிஷேகம் செய்வார்கள். பிரதோஷ அபிஷேகத்துக்கு, பொருட்கள் வழங்கினால், 108 பிரதோஷம் தரிசனம் செய்த புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Maha Shivaratri, Sivan