ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

சனிபெயர்ச்சி கொடுக்கப்போகும் அதிர்ச்சி.. டல்லடிக்கபோகும் ராசிகள் இதுதான்..

சனிபெயர்ச்சி கொடுக்கப்போகும் அதிர்ச்சி.. டல்லடிக்கபோகும் ராசிகள் இதுதான்..

சனிப்பெயர்ச்சி 2023

சனிப்பெயர்ச்சி 2023

sani peyrchi 2023 | | மகர ராசியில் சனி பகவான் சஞ்சரிக்கும் இந்த இரண்டேகால் வருடத்தில் சுமார் ஒன்பது மாத காலம் சனி பகவான் வக்ர கதியில் இருப்பதால் குருவின் உதவியுடன் எளிமையாக சனி பகவானின் பிடியில் இருந்து விடுபடலாம்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

கிரகங்களில் சனி பகவான் பிரதான கடவுளாக கருதப்படுகிறார். மிகவும் மெதுவாக நகரும் கிரகமான சனியின் பெயர்ச்சி 2.5 முதல் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும். நீண்ட கால பெயர்ச்சியாக, சனி குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும். இந்த ஆண்டு, திருக்கணித பஞ்சாங்கத்தின் படி சனிப்பெயர்ச்சி ஜனவரி மாதம் 17ம் தேதி, செவ்வாய்க் கிழமை மாலை 6.04 மணிக்கு மகர ராசி அவிட்ட நட்சத்திரம் 2ம் பாதத்திலிருந்து, மற்றொரு சொந்த ராசியான கும்ப ராசி அவிட்ட நட்சத்திரம் 3ம் பாதத்திற்க்கு பெயர்ச்சி ஆனார்.

இது மட்டுமின்றி, இதற்குப் பிறகு 2023ஆம் ஆண்டு ஜனவரி 30-ம் தேதி சனி மறைவார். பின்னர் மார்ச் 6, 2023 வரை அதே நிலையில் இருக்கும் சனி பகவான், மீண்டும் நிலை மாறுவார். 15 நாட்களில் 2 முறை சனியின் நிலை மாற்றம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்விலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

அதே சனிப் பெயர்ச்சி வாக்கிய பஞ்சாங்கத்தின் படி வரும் சுபகிருது வருடம் பங்குனி மாதம் 15ம் தேதி (29 மார்ச் 2023) புதன் கிழமை பகல் 1.07 மணிக்கு மகரத்திலிருந்து, கும்ப ராசிக்குப் பெயர்ச்சி ஆவதாக கணிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த 9 ராசியினருக்கும் ( மேஷேம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்) சனிபகவான் சில பிரச்சனைகளை தரப்போகிறார்.

சனிப் பெயர்ச்சி அனைவருக்கும் கெடுபலன் தராது. அவரவரின் சுய ஜாதகத்தில் நடப்பில் உள்ள தசை புத்திக்கு ஏற்ற சுப, அசுப விளைவுகளே நடக்கும். எனவே பரிகார ராசியினர் சுய ஜாதகரீதியான நடப்பு திசை மற்றும் புத்தி அறிந்து அதற்கேற்ப பரிகாரங்கள் மற்றும் இறைவழிபாடுகளை கடைபிடிக்க நல்ல விதமான முன்னேற்றங்கள் உண்டாகும்.

அதே போல் சனிப் பெயர்ச்சி என்றவுடன் யாரும் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. ஏப்ரல் 22, 2023ல் ஏற்படப் போகும் குருப்பெயர்ச்சியால் உலகிற்கு பல்வேறு சுப பலன்களும் உண்டாகும். சில மாதங்கள் ராகு குருவை கிரகணப் படுத்தினாலும் மீதமுள்ள மாதங்களில் நல்ல மாற்றங்கள் நிச்சயம் உண்டு.

மகர ராசியில் சனி பகவான் சஞ்சரிக்கும் இந்த இரண்டேகால் வருடத்தில் சுமார் ஒன்பது மாத காலம் சனி பகவான் வக்ர கதியில் இருப்பதால் குருவின் உதவியுடன் எளிமையாக சனி பகவானின் பிடியில் இருந்து விடுபடலாம் என்பது ஆறுதலான விசயம்.

First published:

Tags: Sani Peyarchi