ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

சனிப்பெயர்ச்சி அள்ளிக்கொடுக்கப்போகுது.. இந்த 3 ராசியும் இனி டாப் லெவல்தான்..

சனிப்பெயர்ச்சி அள்ளிக்கொடுக்கப்போகுது.. இந்த 3 ராசியும் இனி டாப் லெவல்தான்..

சனி பெயர்ச்சி

சனி பெயர்ச்சி

Sani Peyarchi 2023 | ஜனவரி 17 ஆம் தேதி மாலை 6:04 நிமிடங்களுக்கு சனி பகவான் தன்னுடைய ஆட்சி வீடான மகர ராசியில் இருந்து மற்றொரு ஆட்சி வீடான கும்ப ராசிக்கு பெயர்ச்சி ஆனார் |

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

கிரகங்களில் சனி பகவான் பிரதான கடவுளாக கருதப்படுகிறார். மிகவும் மெதுவாக நகரும் கிரகமான சனியின் பெயர்ச்சி 2.5 முதல் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும். நீண்ட கால பெயர்ச்சியாக, சனி குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும். இந்த ஆண்டு, திருக்கணித பஞ்சாங்கத்தின் படி சனிப்பெயர்ச்சி ஜனவரி மாதம் 17ம் தேதி, செவ்வாய்க் கிழமை மாலை 6.04 மணிக்கு மகர ராசி அவிட்ட நட்சத்திரம் 2ம் பாதத்திலிருந்து, மற்றொரு சொந்த ராசியான கும்ப ராசி அவிட்ட நட்சத்திரம் 3ம் பாதத்திற்க்கு பெயர்ச்சி ஆனார்.

இது மட்டுமின்றி, இதற்குப் பிறகு 2023ஆம் ஆண்டு ஜனவரி 30-ம் தேதி சனி மறைவார். பின்னர் மார்ச் 6, 2023 வரை அதே நிலையில் இருக்கும் சனி பகவான், மீண்டும் நிலை மாறுவார். 15 நாட்களில் 2 முறை சனியின் நிலை மாற்றம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்விலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

அதே சனிப் பெயர்ச்சி வாக்கிய பஞ்சாங்கத்தின் படி வரும் சுபகிருது வருடம் பங்குனி மாதம் 15ம் தேதி (29 மார்ச் 2023) புதன் கிழமை பகல் 1.07 மணிக்கு மகரத்திலிருந்து, கும்ப ராசிக்குப் பெயர்ச்சி ஆவதாக கணிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த 3 ராசியினருக்கும் சனிபகவான் நல்ல லாபத்தை தரப்போகிறார்.

ரிஷபம் : 2023 ஜனவரியில் சனியின் சஞ்சாரம் மற்றும் அதன் பிறகு சனியின் அஸ்தமனம் என்பது ரிஷப ராசியினருக்கு மிகவும் நன்மை பயக்கும். இவர்களுக்கு வேலையில் பதவி உயர்வு கிடைக்கும். இதுவரை இருந்த பிரச்சனைகள் நீங்கும். தடைகள் நீங்கும். வெற்றியின் உச்சத்தை தொடும் வாய்ப்பு கிடைக்கும். செல்வாக்கும் மரியாதையும் அதிகரிக்கும். வருமானம் கூடும்.

துலாம்: சனியின் ராசி மாற்றம் துலாம் ராசிக்காரர்களுக்கு பல நன்மைகளைத் தரும். இவர்களும் சனியின் பாதகமான பார்வையில் இருந்து விடுதலை பெற்று வாழ்வில் மகிழ்ச்சி அடைவார்கள். துலாம் ராசிக்காரர்களுக்கு சனியின் சஞ்சாரமும், சனியின் அஸ்தமனமும் அனுகூலமாக இருக்கும். கல்வி மற்றும் தொழிலில் நல்ல பலன்களைப் பெறுவார்கள். புதிய வேலை கிடைக்கும். பதவி உயர்வு பெறலாம். வியாபாரம் வளரும். புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்புகள் உண்டாகும்.

மகரம்: மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு மாறும் சனீஸ்வரர், பிறகு கும்பத்தில் அஸ்தமிப்பார். இதனால் மகர ராசிக்காரர்களுக்கு சுப பலன்கள் கிடைக்கும். இவர்களின் தடைபட்ட பணிகள் வேகமாக நடக்கத் தொடங்கும். வருமானம் அதிகரிக்கும். பொருளாதார நிலை உயரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல ஏற்றம் கிடைக்கும்.

First published:

Tags: Sani Peyarchi