சனிப்பெயர்ச்சி என்றாலே அனைவருக்கும் ஒருவித பய உணர்வு ஏற்படும். ஆனால் பயமோ பதற்றமோ தேவையில்லை. அவரவரின் கருமக் காரியங்களை சரிவர கணக்குவைத்து, பாவ புண்ணியங்களின் அடிப்படையில் பலன்களை அளிக்கும் நீதிமான் சனிபகவான். கொடுப்பதானாலும் சரி, எடுப்பதானாலும் சரி, சனி பகவானுக்கு நிகர் அவரே என்கின்றன ஜோதிட நூல்கள். அதேநேரம் தர்ம சிந்தையோடு இருந்து அறநெறியுடனும் நீதி நேர்மையுடனும் வாழ்வோர் சனி பகவான் சஞ்சார நிலைகள் குறித்து பயப்படத் தேவை இல்லை.
சனிபெயர்ச்சியானது, இந்த ஆண்டு திருக்கணித பஞ்சாங்கத்தின் படி ஜனவரி மாதம் 17ம் தேதி, செவ்வாய்க் கிழமை மாலை 6.04 மணிக்கு மகர ராசி அவிட்ட நட்சத்திரம் 2ம் பாதத்திலிருந்து, மற்றொரு சொந்த ராசியான கும்ப ராசி அவிட்ட நட்சத்திரம் 3ம் பாதத்திற்கு பெயர்ச்சி ஆனார். இதனால் சிலருக்கு நன்மையும் சிலருக்கு அவர்கள் செய்த பாவத்திற்கு ஏற்ப கஷ்டத்தையும் கொடுப்பார்.
செய்ய வேண்டிய பரிகாரங்கள்: நின்று நிதானமாக செயல்படுங்கள். சனீஸ்வர பகவான் அனுகூலம் இல்லா நிலைகளில் செய்யும் காரியங்களில் அவசரமில்லாமல் நிதானமாகச் செயல்பட வேண்டியது அவசியம். எனவே, வீட்டிலும் கோயில்களிலும் தியானம் செய்வது நல்லது.
செய்த தவற்றை உணருங்கள்: நாம் செய்த தவறுகளை எண்ணிப்பார்த்து, அவற்றை மீண்டும் செய்யாதவாறு நம்மை நாம் திருத்திக்கொள்ள வேண்டும். அதோடு, செய்த தவறுகளுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும்.
உதவி: ஏழை எளியவர்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் கொடுத்து உதவுதல் போன்ற நற்காரியங்களைச் செய்ய வேண்டும்.
அத்துடன் முதியவர்களுக்கும் ஆதரவற்றவர்களுக்கும் அன்னதானம் செய்யலாம்.
காக்கைக்கு உணவு படைத்தல்: சனி பகவானுடைய வாகனமாகிய காக்கைக்கு எள், மற்றும் நல்லெண்ணெய் கலந்த அன்னத்தைப் படைக்கலாம்.
தசரதர் ஸ்லோகம் சொல்லலாம்: தசரதர் இயற்றிய ஸ்லோகத்தைப் பக்தியோடு சொல்பவர்களை நான் துன்புறுத்தமாட்டேன் என்று சனி பகவானே அருளியதாக ஞான நூல்கள் சொல்கின்றன. எனவே, சனிக்கிழமைகளில் தசரதர் இயற்றிய சனீஸ்வரர் ஸ்தோத்திரத்தைப் பக்தியோடு சொன்னால், சனிப்பெயர்ச்சியால் வரும் பாதிப்புகள் நீங்கும்.
தெய்வ வழிபாடு: சனிக்கிழமைகளில் மகாவிஷ்ணுவை வழிபடுவதாலும், சனிப்பிரதோஷ சிவ தரிசனத்தாலும் சனி பகவானின் திருவருளைப் பெறலாம். மேலும் சனிப்பெயச்சியால் பாதிப்பை சந்திக்கும் ராசிக்காரர்கள் ஆஞ்சநேயரையும் பிள்ளையாரையும் வழிபடலாம்.
எப்படி வழிபாடு செய்வது?: சனிக்கிழமைகளில் உடல் முழுவதும் எண்ணெய்த் தேய்ந்து குளித்து சுத்தமாகிவிட்டு, பூஜை அறையில் சிவபெருமான் அல்லது ஆஞ்சநேயர் அல்லது விநாயகர் படத்துக்கு மலர்மாலை சாற்றி, தீப விளக்கு ஏற்றி வைத்து மனதார இறைவனை நினைத்து வழிபட வேண்டும். இப்படிச் செய்து வருவதால், சனிப்பெயர்ச்சியால் வரும் சங்கடங்கள் நீங்கி, சுபமாக வழலாம். ஆலயங்களுக்குச் சென்று சனி பகவானுக்கு எள் முடிச்சி தீபம் ஏற்றி வைத்து வணங்கி வரலாம்.
பஞ்ச தீப எண்ணெய் ஏற்றுதல் : பஞ்ச தீப எண்ணெய் புகை வெளியிடாமல் நீண்ட நேரம் எரிகிறது. மேலும், எண்ணெய்யில் உள்ள சுகந்த திரவியங்கள் பூஜை அறையெங்கும் சுகந்த மணத்தைப் பாப்ர்ப்பி மனதை அமைதிப்படுத்தும். எனவே தூய்மையான வழிபாட்டுக்குத் தூய்மையான எண்ணெய்யை மட்டுமே தேர்ந்தெடுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Sani Peyarchi