Home /News /spiritual /

சனி பெயர்ச்சி 2022 : இனி இந்த ராசிக்கு அற்புதமான காலம்தான்!

சனி பெயர்ச்சி 2022 : இனி இந்த ராசிக்கு அற்புதமான காலம்தான்!

சனி பகவான்

சனி பகவான்

Sani Peyarchi 2022 | இந்த ராசியினருக்கு இது அதிர்ஷ்டகரமான சனி பெயர்ச்சி. லாபத்தில் அமர்ந்துள்ள சனிபகவான் அனைத்தையும் அள்ளி வழங்குவார். புதிய சொத்துக்கள் வாங்குவீர்கள். சேமிப்பு உயரும். பெண்களால் லாபம் அதிகரிக்கும்.

    சனி பகவானின் முக்கிய அதிசார பெயர்ச்சியும் அதைத் தொடர்ந்து வக்ர பெயர்ச்சியும் ஏப்ரல் மாதம் இறுதிக்கு தொடங்கி ஜூலை மாதம் வரை நிகழ உள்ளது. 29 ஏப்ரல் 2022 அன்று சனி பகவான் மகரத்திலிருந்து, கும்ப ராசிக்கு பெயர்ச்சியாக உள்ளார். பின்னர் 5 ஜூன் 2022 அன்று வரை சனி பகவான் வக்ர பெயர்ச்சியாக கும்பத்தில் இருப்பார். 30 ஆண்டுகளுக்குப் பிறகு சனி கும்ப ராசிக்கு வருவதால், கும்ப ராசியினர் பெறும் அதிர்ஷ்டத்தை பெற போகிறார்கள்... அதுமட்டுமல்லாமல் இந்த ஒரே ஒரு ராசியினருக்கு மட்டுமே சனி பகவான் அனைத்தையும் அள்ளி தர போகிறார். யார் அந்த ராசியினர் தெரியுமா?

    கும்பம்

    லாப சனியால் தன லாபம், வருமானம் அதிகரிக்கும்.
    தொழில் அபிவிருத்தி அடையும், நண்பர்களால், உறவுகளால் அதிர்ஷ்டம் உண்டாகும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.
    கணவன் மனைவி ஒற்றுமை மேலோங்கும். பதவி உயர்வு கிடைக்கும். பங்கு வர்த்தகத்தில் லாபம் கிடைக்கும்.
    எடுத்த காரியம் வெற்றி கிடைக்கும். தொட்ட காரியங்கள் துலங்கும்.
    கேட்ட இடத்தில் பணம் கடன் கிடைக்கும்.

    மேலும் வேலையின் நிமித்தமாக ஒரு சிலருக்கு இடமாற்றம் ஊர் மாற்றம் அமையும். உங்களின் ராசிக்கு 8வது இடத்தை சனி பார்வையிடுவதால் வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை.
    விலை உயர்ந்த பொருட்களின் மீது கவனம் தேவை.

    மாணவர்களுக்கு

    கல்வி கடன் கிடைக்கும். விளையாட்டுகளில் அதிக எச்சரிக்கை தேவை. நல்ல மதிப்பெண்கள் பெற கடுமையாகப் போராட வேண்டியது வரும். தேவையற்ற விஷயங்களில் மனதை செலுத்தாமல் படிப்பில் செலுத்துங்கள். ஆரோக்கியத்தில் கவனம் தேவை உடல் ஆரோக்யத்தில் சற்று எச்சரிக்கையாக இருத்தல் வேண்டும். உடலில் அடிக்கடி அசதி, சோர்வு மற்றும் அடிக்கடி மறதி ஏற்பட்ட வண்ணம் இருக்கும். சரியான நேரத்திற்கு சாப்பிடுங்கள்.

    உங்களுக்கு நிறைய நன்மைகளைத் தரக்கூடிய சனி பெயர்ச்சி என்பதால் செலவு செய்வதற்கு ஏற்ற வருமானத்தையும் சனி வணங்குவார். தான தர்மம் செய்யுங்கள். பகைவர்களிடத்திலும் அன்பு பாராட்டுங்கள்.

    மேலும் படிக்க... சனி பெயர்ச்சி 2022 எப்போது? சனி பகவானின் ஆசியை பெற போகும் ராசியினர் யார் ?

    மேலும் இது அதிர்ஷ்டகரமான சனி பெயர்ச்சி. லாபத்தில் அமர்ந்துள்ள சனிபகவான் அனைத்தையும் அள்ளி வழங்குவார். புதிய சொத்துக்கள் வாங்குவீர்கள்.சேமிப்பு உயரும். பெண்களால் லாபம் அதிகரிக்கும். வெளியூர், வெளிநாடு செல்ல சந்தர்ப்பங்கள் வந்து சேரும். சனிக்கிழமையன்று அனுமனை வணங்க மேலும் நன்மைகள் நடைபெறும்.
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Sani Peyarchi

    அடுத்த செய்தி