ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

சனி பெயர்ச்சி 2022: துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீன ராசியினருக்கு எப்படி இருக்கும்?

சனி பெயர்ச்சி 2022: துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீன ராசியினருக்கு எப்படி இருக்கும்?

சனி பகவான்

சனி பகவான்

Sani Peyarchi 2022 | 2022 சனிப்பெயர்ச்சி  மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இதற்கு காரணம், ஏப்ரல் மாத இறுதியில் கும்பத்துக்கு செல்லும் சனி ஜூலை வரை மட்டுமே  அங்கு சஞ்சரிக்கிறார்.

 • Trending Desk
 • 3 minute read
 • Last Updated :

  மிகவும் மெதுவாக நகரும் கிரகமான சனியின் பெயர்ச்சி 2.5 முதல் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும். நீண்ட கால பெயர்ச்சியாக, சனி குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும். இந்த ஆண்டு, ஏப்ரல் 29 அன்று சனி தனது ஆட்சி வீடான மகர ராசியில் இருந்து மற்றொரு ராசி வீடான கும்ப ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். 12 ராசிக்கட்டத்தில் 11 வது வீடு கும்ப ராசி. இது காற்று ராசி மற்றும் லாபஸ்தானம் என்று அழைக்கப்படுகிறது. இந்த பெயர்ச்சி ஒவ்வொரு ராசிக்கும் என்ன விதமான மாற்றங்களைக் கொண்டு வரப்போகிறது என்று பார்க்கலாம்.

  2022 சனிப்பெயர்ச்சி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இதற்கு காரணம், ஏப்ரல் மாத இறுதியில் கும்பத்துக்கு செல்லும் சனி ஜூலை வரை மட்டுமே அங்கு சஞ்சரிக்கிறார். ஜூலை முதல் அடுத்த ஆண்டு ஜனவரி 2023 வரை மீண்டும் வக்கிரமாகி மகர ராசிக்கு செல்கிறார். எனவே, இந்த மூன்று மாத காலம் அடுத்து வரும் மூன்று ஆண்டுகள் எப்படி இருக்கும் என்ற முன்னோட்டத்தைக் காட்டும்.

  துலாம் ராசிக்கான சனிபெயர்ச்சி 2022 பலன்கள்: வீட்டில் நிம்மதி நிலவும்

  உங்களின் ஐந்தாம் வீட்டில் ஆட்சி பெற்று பெயர்ச்சியாகும் சனி, இது வரை இருந்த மனக்குறை, தடங்கல், ஆகியவற்றில் இருந்து விடுதலை அளிக்கும். இது வரை வீடு, குடும்பம், நிம்மதியைக் கெடுத்த அர்தாஷ்டம சனி, ஐந்தாம் வீடான பூர்வ புண்ணிய ஸ்தானம் மற்றும் குழந்தைகளைக் குறிக்கும் வீட்டுக்குச் செல்கிறது. இது உங்கள் குழந்தைகளின் வாழ்வில் ஒரு முக்கியமான கட்டம் ஆகும். வீடு, வாசல், சொத்து ஆகியவற்றில் இருந்த தடைகள் நீங்கி, காரிய சித்தி உண்டாகும். தாயாரின் உடல் நலம் மேம்படும். வசிப்பிடத்தை விட்டு வேறு இடத்திற்கு வேலை தேடுபவர்களுக்கு சாதகமான காலம்.

  விருச்சிக ராசிக்கான சனிபெயர்ச்சி 2022 பலன்கள்: வீடு மற்றும் குடும்பத்தின் மீது அதிக கவனம்

  உங்களுடைய கேந்திர வீடுகளில் ஒன்றான கும்பத்துக்கு நான்கில் பெயர்ச்சியாகும் சனி, வீடு மற்றும் குடும்பத்துக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று சூழலை ஏற்படுத்தும். குடும்பத்தில் அவ்வபோது பிரச்சனைகள் தலைதூக்கும், எதையும் பெரிது படுத்தாமல் அமைதியாக, பொறுமையாக கையாள வேண்டும். ரியல் எஸ்டேட் சம்மந்தப்பட்ட ஒப்பந்தங்கள் சாதகமாகும். வேலை மற்றும் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். வெற்றி பெற எந்த விதமான குறுக்கு வழிகளையும் முயற்சிக்க வேண்டாம். செலவுகளைக் கட்டுப்படுத்துங்கள்.

  தனுசு ராசிக்கான சனிபெயர்ச்சி 2022 பலன்கள்: சோதனைக் காலம் முடிவடைந்தது

  ஒரு வழியாக ஏழரைச் சனியின் பிடியில் இருந்து பல ஆண்டுகளுக்குப் பின்பு விடுபடப் போகிறீர்கள். ஏழரை சனி சோதிக்கும் என்றாலும், ஏழரை சனியின் இறுதி காலகட்டத்தில் உங்களுக்கு வேண்டியதைக் கொடுத்து விட்டு செல்லும். மூன்றாம் வீட்டுக்கு பெயர்ச்சி ஆகும் சனி, உங்களுக்குத் தைரியம் கொடுக்கும். உங்கள் உடன் பிறந்தோருக்கு உங்கள் உதவி தேவைப்படும். வேலையில் பணிச்சுமை அதிகரிக்கலாம். கழுத்து மற்றும் தோள்பட்டை பகுதிகளில் குறைபாடுகள் ஏற்படலாம், எச்சரிக்கை தேவை. பயணங்கள் மூலம் சாதகமான பலன்களைப் பெறுவீர்கள்.

  மேலும் படிக்க... சனி பெயர்ச்சி 2022: மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினருக்கு எப்படி இருக்கும்?

  மகர ராசிக்கான சனிபெயர்ச்சி 2022 பலன்கள்: பொருளாதாரத்தில் கவனம் தேவை

  உங்கள் ராசிக்கு கடைசி கட்ட 2.5 ஆண்டுகள் ஏழரை சனியாக கும்பத்துக்கு பெயர்ச்சி ஆகிறார் சனி. இரண்டாம் வீடு, குடும்பம், தனம், வாக்கு ஆகியவற்றைக் குறிப்பதால், இவற்றில் கவனம் தேவை. செலவுகள், நிதி மேலாண்மை மற்றும் பொருளாதரத்தில் கூடுதல் கவனமும் திட்டமிடுதலும் தேவை. தேவையற்ற செலவுகளைக் குறைக்க வேண்டும். அதே போல, கடினமான வார்த்தைகளை பேசிவிடக் கூடாது. நிதானத்தைக் கடைபிடிக்க வேண்டும். திருமணம் கைகூடும் வாய்ப்புள்ளது.

  கும்ப ராசிக்கான சனிபெயர்ச்சி 2022 பலன்கள்: மாற்றத்துக்கான காலம்

  ஏழரைச் சனியின் இரண்டாம் கட்டமாக, அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு உங்கள் ராசியிலியே ஜென்ம சனியாக சஞ்சரிக்கப் போகிறார் சனி. ஒட்டு மொத்த மாற்றத்துக்கான காலகட்டமாக இருக்கும். உங்கள் தனிப்பட்ட வாழ்வில் மிகப்பெரிய மாற்றங்களை எதிர்கொள்ள தயாராகுங்கள். திருமண வாழ்வில் பிரச்சனைகள் ஏற்படலாம். சின்ன சின்ன உடல் உபாதைகள் தோன்றி மறையும். உடல் நலம் மீது கொஞ்சம் அக்கறை செலுத்துங்கள். புதிய முயற்சிகளைத் தள்ளிப் போடுங்கள்.

  மீன ராசிக்கான சனிபெயர்ச்சி 2022 பலன்கள்: ஏழரைச் சனி தொடக்கம்

  விரையச் சனியாக, ஏழரைச் சனி தொடங்க இருக்கிறது. இது உங்களை உணர்ச்சிபூர்வமாக சோதிக்கும் காலமாக இருக்கும். மீன ராசி என்றாலே, ஆன்மீகம், தியானம், வழிபாடு என்பதைக் குறிக்கும். ஆன்மீக ரீதியாக உங்கள் கவனத்தை செலுத்துவதும், தானம் செய்வதும் மன அமைதியைத் தரும், செலவுகளைக் குறைக்க வேண்டும், அல்லது சுபச் செலவுகளாக மாற்றினால் விரயம் குறையும். வெளிநாடு அல்லது வெளிமாநில பயணங்கள் சாத்தியமாகும். கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருக்கவும்.

  மேலும் படிக்க... சனி பெயர்ச்சி 2022 : இனி இந்த ராசிக்கு அற்புதமான காலம்தான்!

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Sani Peyarchi