Home /News /spiritual /

சனி பெயர்ச்சி 2022: மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினருக்கு எப்படி இருக்கும்?

சனி பெயர்ச்சி 2022: மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினருக்கு எப்படி இருக்கும்?

சனி பகவான்

சனி பகவான்

Sani Peyarchi 2022 | 2022 சனிப்பெயர்ச்சி  மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இதற்கு காரணம், ஏப்ரல் மாத இறுதியில் கும்பத்துக்கு செல்லும் சனி ஜூலை வரை மட்டுமே அங்கு சஞ்சரிக்கிறார்.

    மிகவும் மெதுவாக நகரும் கிரகமான சனியின் பெயர்ச்சி 2.5 முதல் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும். நீண்ட கால பெயர்ச்சியாக, சனி குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும். இந்த ஆண்டு, ஏப்ரல் 29ஆம் தேதி அன்று சனி தனது ஆட்சி வீடான மகர ராசியில் இருந்து மற்றொரு ராசி வீடான கும்ப ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். 12 ராசிக்கட்டத்தில் 11 வது வீடு கும்ப ராசி. இது காற்று ராசி மற்றும் லாபஸ்தானம் என்று அழைக்கப்படுகிறது. இந்த பெயர்ச்சி ஒவ்வொரு ராசிக்கும் என்ன விதமான மாற்றங்களைக் கொண்டு வரப்போகிறது என்று பார்க்கலாம்.

    2022 சனிப்பெயர்ச்சி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இதற்கு காரணம், ஏப்ரல் மாத இறுதியில் கும்பத்துக்கு செல்லும் சனி ஜூலை வரை மட்டுமே அங்கு சஞ்சரிக்கிறார். ஜூலை முதல் அடுத்த ஆண்டு ஜனவரி 2023 வரை மீண்டும் வக்கிரமாகி மகர ராசிக்கு செல்கிறார். எனவே, இந்த மூன்று மாத காலம் அடுத்து வரும் மூன்று ஆண்டுகள் எப்படி இருக்கும் என்ற முன்னோட்டத்தைக் காட்டும்.

    மேஷ ராசிக்கு சனி பெயர்ச்சி 2022 பலன்கள் – நீண்ட கால திட்டங்கள் வெற்றி பெறும்

    மேஷ ராசிக்காரர்களுக்கு, ஆண்டின் தொடக்கத்தில் சனி உங்கள் பத்தாம் வீட்டில் இருக்கிறார். இந்த சனிப்பெயர்ச்சி மேஷ ராசிக்கு மிகவும் சாதகமான காலமாக இருக்கும். 10 மற்றும் 11ஆம் வீடுகளின் அதிபதியான சனி, லாபஸ்தானத்தில் ஆட்சி பெற்று சஞ்சரிப்பது நல்ல பலன்களைத் தரும். நீங்கள் கடினமாக் உழைக்க வேண்டிய காலம், அதே நேரத்தில்உழைப்பிற்கு ஏற்ற பலன்கள் கிடைக்கும். நிர்வாக வேலைகள், சட்ட நிறுவனங்கள், இயந்திரங்கள் சம்மந்தப்பட்ட வேலைகள். பெட்ரோல் துறையில் இருப்பவர்களுக்கு சாதகமான காலம் இருக்கும். நீண்ட கால திட்டங்கள் வெற்றி பெறும். புதியவர்கள் பொருத்தமான வேலையைத் தேடுவதற்கு அல்லது சொந்தமாக வணிகத்தைத் நல்ல வாய்ப்புகள் உள்ளன. குறுக்கு வழிகள் மற்றும் அபாயகரமான முதலீட்டைத் தவிர்க்கவும்.

    மேலும் படிக்க... சனிப்பெயர்ச்சி எப்போது ? யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம் தர போகிறார் சனி பகவான்...

    ரிஷப ராசிக்கு சனி பெயர்ச்சி 2022 பலன்கள் - வேலை மற்றும் தொழில் வாழ்க்கையில் வளர்ச்சி

    ஆண்டின் தொடக்கத்தில் பாக்கிய ஸ்தானம் என்று கூறப்படும் ஒன்பதாம் வீடான மகர ராசியில் ஆட்சி பெற்று சனி சஞ்சரிக்கிறார். தற்போது கர்ம வீடான கும்ப ராசிக்கு பெயர்ச்சியாகிறார். இயல்பாகவே தர்ம கர்மாதிபதி யோகம் என்பது ரிஷப ராசியினருக்கு மட்டுமே பொருந்தும். அந்த யோகத்தின் அடிப்படையில் ஒன்பதாம் மற்றும் பத்தாம் வீட்டுக்கான அதிபதி ஆட்சி பெறுவது மிகவும் சாதகமான காலகட்டம். பத்தாம் வீடு தொழில் மற்றும் வேலை ஆகியவற்றையும் குறிக்கும்.எனவே பத்தில் சனி பெயர்ச்சி அடைவது உங்களுடைய கேரியர் என்று கூறப்படும் தொழில் வாழ்க்கையை பெரிதாக மாற்றக்கூடிய தன்மை கொண்டது. நீங்கள் நீண்ட காலமாக எதிர்பார்த்து காத்திருந்த வளர்ச்சியும் முன்னேற்றமும்,வேலை மற்றும் தொழிலில் காணப்படும். உங்களுக்கான அங்கீகாரம் கிடைக்கும். உங்கள் அதிபதியான சுக்கிரன் சனிக்கு நண்பராக இருப்பதால் உங்கள் தொழிலை மேம்படுத்த பல வாய்ப்புகள் உள்ளன. வேலை தேடுபவர்கள் இந்த வாய்ப்பை மிகவும் கவனமாக பயன்படுத்த வேண்டும்.

    மிதுன ராசிக்கு சனி பெயர்ச்சி 2022 பலன்கள் – மன நிம்மதி உண்டாகும்

    கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக அஷ்டம சனியால் பல்வேறு விதமான பிரச்சனைகளை எதிர்கொண்ட உங்களுக்கு இந்த சனிப்பெயர்ச்சி மிகப்பெரிய நிம்மதியை தரும். வெளிநாட்டு உதவி,ஆன்மீகம், தந்தை, உயர் படிப்பு, ஆகியவற்றைக் குறிக்கும் ஒன்பதாம் வீட்டிற்கு சனிப் பெயர்ச்சியாகிறார். எனவே இதுநாள் வரை தாங்க முடியாத அளவுக்கு உடல்ரீதியான பிரச்சினைகள் மற்றும் மன ரீதியான,துன்பம் மன அழுத்தம் ஆகியவற்றை எதிர்கொண்டு வந்த நீங்கள் அதிலிருந்து விடுபடும் காலம். பண வரவு அதிகரிக்கும், மறைமுக எதிரிகள் விலகுவார்கள், நோய்களில் இருந்து விடுதலை கிடைக்கும், கவலைகள் மற்றும் குழப்பங்கள் தீரும்.

    மேலும் படிக்க... சனி பகவானின் இந்த காயத்திரி மந்திரத்தை சொல்ல கை மேல் பலன் கிடைக்கும்...

    கடக ராசிக்கு சனி பெயர்ச்சி 2022 பலன்கள் – உறவில் நெருக்கடிகள் தோன்றலாம்

    உங்கள் ராசிக்கு ஏழாம் வீடான மகர ராசியில் கண்ட சனியாக இரண்டரை ஆண்டுகளாக சஞ்சரித்துக் கொண்டிருந்த சனி தற்பொழுது அஷ்டம சனியாக கும்ப ராசிக்கு செல்கிறார். அஷ்டம சனி என்றாலே பொதுவாக பலரும் பயப்படுவார்கள். ஆனால் சனி ஆட்சி பெற்று செல்வதால் இந்த காலகட்டத்தில் பெரிதாய் அச்சப்பட வேண்டிய அவசியமில்லை. இருப்பினும், ஏழாம் அதிபதி மற்றும் எட்டாம் அதிபதி இரண்டுமே சனி என்பதால்,உங்கள் உறவு,பார்ட்னர்ஷிப் மற்றும் நண்பர்களிடையே ஏதேனும் சிக்கல் ஏற்படக்கூடும். அதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.பொதுவாக நீங்கள் உறவுகளில் நெருக்கடிகளை இந்த காலகட்டத்தில் எதிர்கொள்வீர்கள். விட்டுக்கொடுப்பது, வீண் விவாதங்களைத் தவிர்ப்பது, மற்றும் அனுசரித்து செல்வதும் அவசியம். அதே போல, நேர்மையாக இருக்க வேண்டும், குறுக்கு வழிகளில் ஈடுபடாமல் தவிர்க்கவும் வேண்டும்.

    சிம்ம ராசிக்கு சனி பெயர்ச்சி 2022 பலன்கள் – எதிலும் எச்சரிக்கை தேவை

    உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டில் சஞ்சரிக்கும் சனி, திருமணம், கணவன் / மனைவி, கூட்டுத்தொழில் ஆகியவற்றைக் குறிக்கிறது. உங்கள் உறவுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது.தாமதங்கள் மற்றும் தடைகளுக்கு காரகமான சனியால், உறவுகளில் சில சவால்கள் ஏற்படலாம்.வாழ்க்கைத் துணையின் ஆலோசனைகளையும் கேட்க வேண்டும். அதே நேரத்தில், சனி ஆட்சி பெற்று சஞ்சரிப்பதால், உங்கள் உறவுகளை மேம்படுத்த இதுவே சரியான நேரம்.புதிய தொழில் வாய்ப்புகளையும் சனி தருவார்.வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் மற்றும் கூட்டு தொழில் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.இந்த கட்டத்தில் உங்கள் மறைமுக எதிரிகளும் தோன்றுவார்கள். எதிர் பாலினத்தவரிடமிருந்து கொஞ்சம் விலகி இருக்க வேண்டும்; ​​உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க சில மாற்றங்களை சந்திப்பீர்கள்.எதிலும் கொஞ்சம் எச்சரிக்கையாக இருங்கள்.

    மேலும் படிக்க... சனி தசை எப்படிப்பட்ட பலன்களை தருவார் தெரியுமா ...

    கன்னி ராசிக்கு சனி பெயர்ச்சி 2022 பலன்கள் – தடைகள் மற்றும் தாமதங்கள் ஏற்படும்

    சனியின் பெயர்ச்சி உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டில் ஏற்படுத்துவதால் உங்களுக்கு வேலை கிடைக்கும், மறைமுக எதிரிகள் காணாமல் போவார்கள், கடன் மற்றும் நோய் தீரும். அதே நேரத்தில், கடினமாக உழைக்க வேண்டும், நீங்கள் எதிர்பார்க்கும் விஷயங்கள் நடக்கத் தாமதமாகும். பணியிடத்தில் தடைகள் இருப்பதால் அதைச் சமாளிக்க முயற்சி செய்யுங்கள். சக ஊழியர்களுடன் எந்த விதமான தகராறிலும் ஈடுபட வேண்டாம். நிர்வாகம், காமர்ஸ், மற்றும் சட்டம் படிக்கும் மாணவர்களுக்கு மிகவும் சாதகமான காலம். வேலையில் மாற்றம் வேண்டும் என்று விரும்புவவர்கள் அதற்கான முயற்சிகளை மேற்கொள்ளலாம். எதிர்பாராத பண வரவு மற்றும் இலாபம் கிடைக்கும். சின்ன சின்ன தடைகள் ஏற்படலாம். ஆனால், இந்த காலகட்டத்தில் உங்கள் முயற்சிகள் உங்கள் எதிர்காலத்துக்கு அடித்தளமாக அமையும்.

    மேலும் படிக்க... ஏழரை சனி : சனி பகவானின் அருளை பெறும் ராசியினர்

    ஏழரைச் சனி என்றால் என்ன? என்ன செய்யவேண்டும் ...
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Sani Peyarchi

    அடுத்த செய்தி