வாக்கிய பஞ்சாங்கத்தின்படி சனி பெயர்ச்சி சார்வரி ஆண்டு மார்கழி 12ம் தேதி (டிசம்பர் 27) தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு பெயர்ச்சி ஆக உள்ளார். அவர் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு பெயர்ச்சி அடைய எடுத்துக்கொள்ளும் கால அளவு இரண்டரை வருடம் ஆகும். அந்த இரண்டரை வருடம் முழுவதும் சனிதேவர் தான் நின்ற ராசியில் இருந்து தனது சுப மற்றும் அசுப பலன்களை அளிக்கக்கூடியவர் ஆவார்.
ரிஷப ராசி : பாக்கிய சனி
சனி நிற்கும் ஸ்தானம் : 9ம் இடமான பாக்கிய ஸ்தானம்
அஷ்டமம் சனி முடிவடைகிறது
மத்திம சனி
ராசிக்கு ஒன்பதாம் இடத்தில் சனி சஞ்சாரம் செய்வது மத்திம சனியாகும்.
அஷ்டம சனி அளவிற்கு மத்திம சனி பாதிப்புகளை ஏற்படுத்தாது.
ஓரளவு வருமானம் கிடைக்கும். ஒப்பந்த தொழிலில் மேன்மை உண்டாகும்.
தந்தையுடனான உறவில் மனக்கசப்புகள் உண்டாகும்.
பூர்விகச் சொத்துகள் இருந்தும் பயன்படுத்த முடியாத நிலை உண்டாகும்.
சனிப்பெயர்ச்சி என்றால் என்ன?
நவகிரகங்களில் அவரவர்களின் கர்மவினைக்கு ஏற்ப சுப மற்றும் அசுப பலன்களை அளிக்கக்கூடிய கிரகமாக கருதப்படக்கூடியவர் சனிதேவர் ஆவார். அவர் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு பெயர்ச்சி அடைய எடுத்துக்கொள்ளும் கால அளவு இரண்டரை வருடம் ஆகும். அந்த இரண்டரை வருடம் முழுவதும் சனிதேவர் தான் நின்ற ராசியில் இருந்து தனது சுப மற்றும் அசுப பலன்களை அளிக்கக்கூடியவர் ஆவார்.
சனிப்பெயர்ச்சி எப்பொழுது?
வாக்கிய பஞ்சாங்கத்தின்படி சனி பெயர்ச்சி சார்வரி ஆண்டு மார்கழி 12ம் தேதி (டிசம்பர் 27) தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு பெயர்ச்சி ஆக உள்ளார்.
சனிப்பெயர்ச்சி பலன்கள்
எல்லா உயிர்களையும் ஒன்றாக எண்ணி தர்ம நீதிகளுக்கு கட்டுப்பட்டு உயிர்களை தேவ மற்றும் நரக லோகத்திற்கு அழைத்து செல்லும் எமதர்மராஜவின் சகோரன் என்பதுடன், உலகிற்கு ஒளி அளித்து இருளை நீக்கி வரும் உலகில் பிறந்த அனைத்து உயிர்களின் ஆத்ம காரகன் என அழைக்கப்படும் சூரிய பகவானின் புதல்வன் நம் சனிபகாவன் ஆவார்.
நவகிரகங்களில் நம் கர்மவினைக்கு ஏற்ப தன் தசா காலங்களில் அதற்கான பலன்களை அளிக்கக்கூடிய நீதிமான் என எல்லோராலும் அழைக்கப்படுபவர் சனிபகவான் ஆவார். அவர் கொடுக்க நினைத்தால் எவராலும் தடுக்க முடியாது. கெடுக்க நினைத்தாலும் எவராலும் தடுக்க முடியாது.
சனிபகவான் இருக்கும் இடத்தை மட்டும் கெடுக்காமல், அவர் பார்வைப்படும் இடங்களையும் கெடுப்பார். இவர் துன்பத்தை மட்டும் கொடுக்காமல், இன்பத்தையும் ஒருவரின் கர்மவினைக்கு ஏற்ப கொடுப்பார்.
எதிலும் அளவற்ற நிலையை கொண்டவர் சனிபகவான். இன்பமானாலும், துன்பமானாலும் அளவு என்பது இல்லை. எந்த அளவிற்கு அவரால் துன்பம் ஏற்படுகிறதோ அதே அளவிற்கு எதுவாயினும் சரிசமமாக அனுபவிக்க வேண்டும். இத்தொழிலை சனிபகாவன் நல்ல முறையில் செய்கிறார்.
சனிபகாவன் ஒரு ராசியிலிருந்து அடுத்த ராசிக்கும் செல்லும் காலம் 2 1/2 ஆண்டுகள் ஆகும். ஒருவரது ராசியில் சனி திசை 19 வருடங்கள் நடக்கும். சனி இருக்கும் இடத்தை பொறுத்தே சுப பலன்களோ அல்லது அசுப பலன்களோ உண்டாகும்.
சனிபகவான் ஜோதிடத்தில் ராசி கட்டத்தில் நிற்கும் இடத்திற்கு தகுந்தாற் போல் தன் பலனை செயல்படுத்துகிறார்.
Published by:Vijay R
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.