Home /News /spiritual /

சமயபுரம் மாரியம்மன் கோவில் சித்திரை தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது... திரளான பக்தர்கள் தரிசனம்...

சமயபுரம் மாரியம்மன் கோவில் சித்திரை தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது... திரளான பக்தர்கள் தரிசனம்...

சமயபுரம்

சமயபுரம்

வருகிற 18ஆம் தேதி அம்மன் வெள்ளி குதிரைவாகனத்தில் புறப்பாடாகி கோவிலின் இரண்டாம் பிரகாரத்தை வலம் வருகிறார்

    சக்தி தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது சமயபுரம் மாரியம்மன்கோவில் ஆகும். இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை தேரோட்டம் வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த தேர்திருவிழாவில் திருச்சி மாவட்டம் மட்டுமன்றி, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சமயபுரம் வந்து தேர்திருவிழாவில் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்துவிட்டுச் செல்வார்கள்.

    கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா வைரஸ் பரவல் காரணமாக சித்திரை தேர் திருவிழா நடைபெறவில்லை. இந்நிலையில் நடப்பாண்டு வைரஸ் தொற்று பாதிப்பு வெகுவாக குறைந்தநிலையில் தளர்வுகள் விதிக்கப்பட்டு திருவிழாக்கள் நடைபெற்று வருகிறது.

    இதைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை காலை  கொடியேற்றத்துடன் சித்திரை தேர்த்திருவிழா தொடங்கியது. முதல்நாளான அன்று மேஷ லக்னத்தில் சிவாச்சாரியர்களைக் கொண்டு வேதமந்திரங்கள் முழங்க கோயிலின் பிரகாரத்தில் உள்ள தங்க கொடிமரத்திற்கும், அஸ்திரதேவருக்கும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு சமயபுரம் அம்மன் படம் தாங்கிய சித்திரை திருவிழா கொடியானது மந்திரங்கள், மேளதாளங்கள் முழங்க ஏற்றப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துக் கொண்டிருந்தனர்.

    கொடியேற்றம்


    அதனை தொடர்ந்து நேற்று இரவு வசந்த மண்டபத்தில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் கேடயத்தில் புறப்பாடாகி கோவிலின் இரண்டாம் பிரகாரத்தை வலம் வந்து அபிஷேக மண்டபம் சென்றடைந்தார்.

    மேலும் படிக்க... மலேசிய சிலையைவிட பெரிது.. உலகிலேயே மிக உயரமான முத்துமலை முருகன் கோவில்

    இதேபோன்று ஒவ்வொரு நாளும் காலையில் அம்மன் கேடயத்தில் எழுந்தருளி கோவிலை வலம் வருகிறார். தொடர்ந்து ஒவ்வொரு நாளும் இரவு 7 மணிக்கு சிம்மவாகனம், பூதவாகனம், அன்னவாகனம், ரிஷபவாகனம், யானைவாகனம், சேஷவாகனம், மர குதிரை வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் கோவிலை வலம் வந்து அபிஷேக மண்டபம் சென்றடைகிறார்.

    மேலும் படிக்க... சித்ரா பெளர்ணமி எப்போது? தேதி, நேரம் குறித்த தகவல்கள்...

    வருகிற 18ஆம் தேதி அம்மன் வெள்ளி குதிரைவாகனத்தில் புறப்பாடாகி கோவிலின் இரண்டாம் பிரகாரத்தை வலம் வருகிறார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சித்திரை தேரோட்டம் வருகிற 19ஆம்தேதி நடைபெறுகிறது. மேலும் விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் திருமதி.கல்யாணி தலைமையில் கோவில் பணியாளர்கள் மற்றும் அர்ச்சகர்கள் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது...

    செய்தியாளர் : கதிரவன்
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Trichy

    அடுத்த செய்தி