தமிழகத்தில் சக்தி தலங்களில் முதன்மையாக கருதப்படுவது, திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில். வேண்டுபவருக்கு வேண்டும் வரம் அளிப்பவள் மாரியம்மன் என்பதால், இங்கு தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிகின்றனர். இக்கோயிலில் தினந்தோறும் திருவிழா என்றபோதும், ஆண்டுதோறும் நடைபெறும் மாசி மாத கடைசி ஞாயிற்றுக்கிழமை அன்று துவங்கும் பூச்சொரிதல் விழா மற்றும் பங்குனி மாத கடைசி ஞாயிற்றுக்கிழமை அன்று துவங்கும் சித்திரைத் தேர் பெருவிழா வெகு பிரசித்திப் பெற்றது.
பச்சைப்பட்டினி
பங்குனி மாத கடைசி ஞாயிற்றுக்கிழமை துவங்கி, தொடர்ந்து, 28 நாட்கள், உலக மக்கள் நன்மைக்காக அம்மனே இங்கு பச்சைப் பட்டினி விரதம் இருப்பது தனிப்பெரும் சிறப்புக்குரியது. பச்சைப் பட்டினி விரதம் மேற்கொள்ளும் மாரியம்மனுக்கு தாளிகை நெய்வேத்தியங்கள் படைக்கப்படாது. மாறாக, இளநீர், நீர்மோர், பானகம், கரும்புச்சாறு, துள்ளு மாவு போன்றவை மட்டுமே பிரசாதமாக படைக்கப்படும்.
உலக மக்களுக்காக பச்சைப் பட்டினி விரதம் மேற்கொள்ளும் அம்மனை குளிர்விக்கும் வகையில் உலகில் உள்ள அனைத்து வண்ண மலர்கள், வாசனை மலர்களால் அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்படும்.
Also see... இன்னல்கள் நீங்க.. இன்பங்கள் பெருக.. ஸ்ரீ சமயபுரம் மாரியம்மன் 108 போற்றி!
'பூச்சொரிதல் திருவிழா' என்றழைக்கப்படும் இந்நிகழ்வில், தமிழகம் மட்டுமல்லாது இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் இருந்து, பல ஆயிரம் கிலோ பூக்கள் அம்மனுக்கு சமர்பிக்கப்படும்.
பல மாவட்டங்களில் இருந்து அலங்காரம் செய்யப்பட்ட வாகனங்களில், மேளதாளங்களுடன் பக்தர்கள் ஊர்வலமாக வருவதை காண கண் கோடி வேண்டும். மாரியம்மன் பச்சைப் பட்டினி விரதம் நிறைவுச் செய்யும் நாளில், சித்திரைத் தேர் பெருவிழா தேரோட்ட கொடியேற்றம் நடக்கும்.
Also see... ஆயிரம் கண்ணுடையாள் எங்கள் சமயபுரம் மாரியம்மன்... பெண்களை தாயை போல காப்பவள்...
இத்தகைய சிறப்புமிக்க பூச்சொரிதல் திருவிழா, வரும் 12ம் தேதி ஞாயிற்றுகிழமை காலை 6.30 முதல், 8.00 மணிக்குள் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் கல்யாணி மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Trichy