Home /News /spiritual /

பூஜை அறையில் இந்த பொருட்களை வைத்தால் அடகு வைத்த நகைகளை மீட்கலாம்...

பூஜை அறையில் இந்த பொருட்களை வைத்தால் அடகு வைத்த நகைகளை மீட்கலாம்...

கல்லுப்பு மகாலட்சுமியின் அம்சம் பொருந்தியதாகும். மஞ்சள் மற்றும் குங்குமம் மங்களகரம் வாய்ந்த மகாலட்சுமியின் அம்சங்களாகும். எனவே இவற்றின் பலனாக அடகு வைத்த நகை விரைவில் வீடு தேடி வரும் என்பது ஐதீகம்.

    நம் வீட்டில் இக்கட்டான சில சூழ்நிலைகளை சமாளிப்பதற்கு முதலில் அனைவரும் செய்யக் கூடிய ஒரு விஷயம் வீட்டில் உள்ள நகைகளை அடகிற்கு எடுத்துச் செல்வது தான். எவரிடமும் கைநீட்டி கடன் வாங்காமல் இருக்கக்கூடிய பிரச்சனைகளை சரிசெய்ய நமது நகைகளை அடகு வைத்து சமாளிப்பது தான் அந்த நேரத்திற்கான சரியான வழியாக இருக்கிறது. இவ்வாறு அவசரத்திற்கு அடகு வைக்கப்படும் நகைகளை கூடிய விரைவில் மீட்டெடுக்க செய்ய வேண்டிய சிறப்பு பரிகாரம் என்ன என்பதை பற்றி தெரிந்துக் கொள்ளலாம். 

    அடகு வைத்த நகைகளை குறிப்பிட்ட நேரத்தில் மீட்டெடுக்க வேண்டும் என்பதுதான் அனைவரின் ஆசையாக இருக்கும். ஆனால் வர வேண்டிய பணம் கைக்கு வராமல் பல தடைகள் ஏற்பட்டு கொண்டிருக்கும். அல்லது வருகின்ற பணத்திற்கு ஏற்ப வீண் செலவுகள் வந்து கொண்டே இருக்கும். எனவே அடகு வைத்த நகையை திருப்ப முடியாத சூழ்நிலை நிலவிக் கொண்டிருக்கும்.

    உப்பு பரிகாரம்

    இதற்காக வீட்டில் எப்பொழுதும் போல பூஜை செய்துவிட்டு, பூஜை அறையின் முன் அமர்ந்து ஒரு கண்ணாடி டம்ளர் அல்லது கிண்ணத்தை எடுத்துக் கொண்டு அதில் புதியதாக வாங்கிய கல்லுப்பை முழுவதுமாக நிறைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதன் மீது சிறிதளவு மஞ்சள் தூளைத் தூவி விட வேண்டும். பின்னர் அதற்கு மேல் சிறிதளவு குங்குமத்தை தூவ வேண்டும். இவை அனைத்தையும் செய்யும் பொழுது மகாலட்சுமி தேவியை மனதார வேண்டிக் கொள்ள வேண்டும்.

    பூஜை செய்யும் நேரம்

    இந்தப் பூஜையை வாரத்தில் எந்த கிழமை வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் இதனை காலை 10 மணிக்கு முன்னதாகவோ அல்லது மாலை 6 மணிக்கு மேற்பட்டோ தான் செய்ய வேண்டும். பின்னர் இந்த கல் உப்பு நிறைந்த கிண்ணத்தை பூஜை அறையில் மகாலட்சுமியின் படத்திற்கு அருகில் வைத்துவிட்டு, ஒரு மணி நேரம் அல்லது இரண்டு மணி நேரம் கழித்து அதனை எடுத்து பீரோவில் நகை வைக்கும் இடத்தில் வைத்துவிட வேண்டும்.

    Must Read : கோவையில் பூனைகளுக்கு வளைகாப்பு... ஆச்சரியப்பட வைக்கும் காரணம்

    இந்தக் கல்லுப்பு மகாலட்சுமியின் அம்சம் பொருந்தியதாகும். மஞ்சள் மற்றும் குங்குமம் மங்களகரம் வாய்ந்த மகாலட்சுமியின் அம்சங்களாகும். எனவே இவற்றின் பலனாக அடகு வைத்த நகை விரைவில் வீடு தேடி வரும் என்பது ஐதீகம். அதற்கான பணம் எந்தவித தடையுமின்றி எப்படியாவது உங்காளை வந்து சேரும்.
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Pariharam | பரிகாரம், Temple

    அடுத்த செய்தி