தினமும் சாயிபாபாவை ஒரு பத்துநிமிடம் வணங்கிவிட்டு, அன்றாடப் பணிகளைச் செய்யும் போது, அவர்களின் எல்லா காரியங்களிலும் பாபா உடனிருந்து நிறைவேற்றித் தந்தருள்கிறார் என்பது ஐதீகம். தினமும் பாபாவின் படத்துக்கோ சிலைக்கோ பூஜை செய்யுங்கள். தீப ஆரத்தி காட்டுங்கள். முன்னதாக, அவருக்கு எதிரே ஒரு பத்துநிமிடமேனும் அமர்ந்து, பாபாவின் மூல மந்திரத்தைச் சொல்லுங்கள்.
அந்த மூல மந்திரம்;
ஓம் ஸாயி ஸாயி ஜெயஜெய ஸாயி.
இந்த ஒற்றை வரி கொண்ட மூல மந்திரத்தை, கண்கள் மூடி ஜபியுங்கள். தினமும் 108 முறை சொல்லுங்கள். முடிந்ததும் தீபாராதனை காட்டி வழிபடுங்கள். தினமும் சர்க்கரைப் பொங்கல், பாயசம், கேசரி என்று நைவேத்தியம் செய்ய வேண்டும் என்கிற அவசியமெல்லாமில்லை. நம்மிடம் இருப்பதை பாபாவுக்குக் கொடுத்தாலே போதும்... அதை ஏற்றுக் கொள்வார். நாம் பக்தியுடன் கொடுப்பதை, அன்புடன் ஏற்றுக் கொண்டு நம்மை ஆசீர்வதித்து அருளுவார். நம்மையும் நம் குடும்பத்தாரையும் காத்தருள்வார்.
எனவே, இரண்டே இரண்டு பிஸ்கட் வைத்தும் வேண்டிக்கொள்ளலாம். இரண்டு சாக்லெட் வைத்தும் வழிபடலாம். ஒரு சிறிய கிண்ணத்தில் கொஞ்சம் சர்க்கரை வைத்து பூஜிக்கலாம். நாம் பாபாவுக்கு என்ன கொடுக்கிறோம் என்பது முக்கியமில்லை. நாம் எது கொடுத்தாலும் அவரின் அன்பையும் ஆசியையும் பேரருளையும் பெருவோம் என்பதில் மாற்றமுமில்லை. வியாழக்கிழமைகளில் இந்த பாடல்களை கேட்டு மகிழுங்கள்...சாய் பாபாவின் அருளை பெருங்கள்...
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம், அனுராதா ஸ்ரீராம், ஸ்ரீஹரி, பவித்ரா பாலாஜி பாடிய சிறந்த சாய்பாபா பக்தி பாடல்கள்
இசை: தீனா, அரவிந்த், கே.எஸ்.ரகுநாதன், வீரமணிகண்ணன்
பாடல்கள்: சாய் சோமு, குருநாத சித்தர், கணேஷ் சுந்தரேசன் தயாரிப்பு மேற்பார்வை: ஸ்ரீஹரி
தயாரிப்பு: சிம்போனி ரிகார்டிங் கம்பெனி
நன்றி: சிம்போனி
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.