சத்குரு: “சத்குரு, நீங்கள் ஏன் மேல்தட்டு மக்கள், பணக்காரர்கள் மற்றும் பிரபலமானவர்களைச் சந்திக்கிறீர்கள்? நீங்கள் ஏன் சேரிகளுக்குள் செல்வது இல்லை?" என்று மக்கள் என்னிடம் எப்பொழுதும் கேட்கிறார்கள். அதற்கு என்னுடைய பதில், “அவர்கள் அன்றாட உணவுக்காகப் போராடும்போது அவர்களிடம் சென்று அவர்களை முக்தியைத் தேடச் சொல்லும் அளவுக்கு நான் மோசமானவன் இல்லை” என்பது தான்.
எந்தவொரு ஆன்மீக செயல்முறைக்கும், முதலில் நாம் உயிர்வாழ வேண்டும். நாம் நம்மைத் தாண்டி ஏதாவது யோசிக்க வேண்டும் என்றால், போதுமான அளவு உண்டு, சௌகரியமாக இருக்க வேண்டும். ஒருவரின் வயிறு காலியாக இருக்கும்போது, முதலில் அதை பூர்த்தி செய்ய வேண்டும். அதைச் செய்தால் போதும், உயிர் வாழ்தல் ஒரு பெரிய விஷயம் இல்லை. அதை கவனிக்காதபோது, அதுதான் எல்லாமே.
உயிர் வாழ்வது மக்களுக்கு மிகவும் எளிதானது என்பதை நீங்கள் உறுதிப்படுத்தவில்லை என்றால், அனைத்து ஆன்மீகமும் இறந்துவிடும். 200-300 ஆண்டுகால வறுமையின் காரணமாக இந்த நாட்டில் ஆன்மீகம் கணிசமாக குறைந்துள்ளது. ஆனால் ஒரு காலத்தில், இந்தியா ஒரு நாகரிகமாக, ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஆன்மீக செயல்முறைகளால் நிரம்பியிருந்தது, ஏனெனில் நாம் ஸ்திரத்தன்மை மற்றும் பொருளாதார நல்வாழ்வைக் கொண்டிருந்தோம். எனவே, மனிதர்கள் இயற்கையாகவே உடல் மற்றும் மனதைத் தாண்டி, உடலைவிட அதிகமான ஒன்றைத் தேடத் துவங்கினர்.
உடல் என்பது ஆன்மீகத்திற்கான ஒரு படிக்கல்
உங்கள் உடலும், மனமும் உங்கள் ஆன்மீக பரிணாமத்திற்கு படிக்கட்டுகளாகவோ அல்லது முழுமையான தடைகளாகவோ இருக்கலாம். நீங்கள் ஒரு இடத்தில் உட்கார்ந்து, உங்கள் உடல் மிகவும் சௌகரியமான நிலையில் இருந்து, அது இருப்பதையே நீங்கள் உணராமல் இருந்தால், இப்போது ஆன்மீக செயல்முறை சாத்தியமாகும். ஆனால் சிலருக்கு உட்காரவோ, நிற்கவோ, படுக்கவோ கூட சௌகரியமாக இல்லாதபோது, ஆன்மீக சாத்தியம் இருக்காது.
உடலையும், மனதையும் உகந்ததாக்கி உங்கள் உடனடித் தேவைகளுக்கு அப்பால் பார்க்கச் செய்ய, உங்களைச் சுற்றி போதுமான ஊட்டச்சத்தும் கரிம சக்தியும் இருப்பது மிகவும் முக்கியம், அதுதான் உங்களை தாங்குகிறது - ஏனென்றால் நீங்கள் சுமக்கும் உடல் முழுமையாக உங்களுடையது அல்ல. உங்கள் உடலில் நாற்பது சதவிகிதம் மட்டுமே உங்கள் பெற்றோரின் மரபியல்; அறுபது சதவீதம் உண்மையில் நுண்ணுயிர்களால் ஆனது.
நுண்ணுயிர் வாழ்விடம் பெரும்பாலும் மேல் மண்ணின் 12-15 அங்குலங்களுக்குள் உள்ளது. இப்படி இருக்கும்போது, உங்களைச் சுற்றியுள்ள நுண்ணுயிரிகளை நன்றாக வைத்திருக்கவில்லை என்றால், அந்த நுண்ணுயிர்கள் உங்களுக்கு உடல்நிலை சரியில்லை என்று உறுதி செய்து கொள்வார்கள். உங்களுக்கு உடல்நிலை சரியில்லாதபோது, நான் உங்களிடம் தியானம் செய்யவோ, யோகா செய்யவோ அல்லது உங்கள் வாழ்வின் நோக்கை தேடவோ சொன்னால், நீங்கள் ஆர்வம் காட்டமாட்டீர்கள்.
நாம் யார் என்பது, மண்ணுக்குள் நடக்கும் வாழ்க்கையின் பிரதிபலிப்பு தான் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டிய நேரம் இது.
மண் காப்போம் - ஒரு ஆன்மீக இயக்கம்
ஒவ்வொரு ஆண்டும், சராசரியாக, 27,000 வகையான நுண்ணுயிரிகள் மண்ணின் வாழ்விடத்தில் அழிந்து வருகின்றன. இந்த கிரகத்தில் இன்னும் 80-100 பயிர்களுக்கு மட்டுமே விவசாய மண் உள்ளது என்று ஐ.நா நிறுவனங்கள் கூறுகின்றன. அதாவது 45-60 வருடங்களில் நம் மண்வளம் அழிந்துவிடும். அது நடந்தால், பூமியில் கடுமையான உணவு தட்டுப்பாடு ஏற்படும்.
மேலும் படிக்க... Sadhguru Tamil : ஏன் கெட்டவர்கள் நன்றாக வாழ்கிறார்கள்? - சத்குரு விளக்கம்
எனவே மண் காப்போம் இயக்கம், சுமார் 40 ஆண்டுகளாக நாம் செய்து வரும் ஆன்மீக இயக்கத்திலிருந்து வேறுபட்டதல்ல. மண்ணை மீண்டும் உருவாக்க, இன்னும் பிறக்காத தலைமுறைகளை உள்ளடக்கியதாக இருக்கும் இந்த முயற்சி, அது தொடர்வதைப் போலவே ஆன்மீகம் நிறைந்தது.
மேலும் படிக்க... கோவில்கள் அழிவதை தடுக்க அவற்றை பக்தர்களிடம் கொடுத்துவிடுங்கள் - சத்குரு வலியுறுத்தல்
ஒவ்வொருவரும் மண்ணைப் பற்றி கற்றுக்கொள்வதில் சிறிது நேரம் செலவிட வேண்டுகிறேன். இது மிகவும் தீவிரமான பிரச்சனை, ஆனால் ஒவ்வொரு தேசத்தின் கொள்கையிலும் மண்ணின் மீதான அக்கறையைப் பதித்தால், அடுத்த 10-15 வருடங்களில் இதை மாற்றுவதற்கான வாய்ப்பு நமக்கு உள்ளது. அதைத்தான் மண் காப்போம் இயக்கம் முயற்சிக்கிறது. உலகெங்கிலும் உள்ள 350 கோடி மக்களையும் தொட்டு, அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் அரசாங்கங்கள் நீண்ட கால மண் மறு உருவாக்கம் கொள்கைகளை எடுக்க நாங்கள் முயற்சி செய்கிறோம். இதை நாம் நிகழச் செய்வோம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.