மகரவிளக்கு மற்றும் மகரஜோதி தரிசனத்துக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் சீராகவும், பாதுகாப்பாகவும், கட்டுப்பாட்டுடன் நடத்தவும் கேரள காவல்துறையின் புதிய குழு நியமிக்கப்பட்டுள்ளது. நிலக்கல், பம்பை, சன்னிதானம் ஆகிய இடங்களில் புதிய குழு பொறுப்பேற்றுள்ளன. மூன்று இடங்களிலும் அதிகாரிகள் உட்பட 2958 பேர் பாதுகாப்பு சேவையில் உள்ளனர். மகரஜோதி நாளில் மேலும் கூடுதலாக 5 டி.எஸ்.பி.க்கள் பணியமர்த்தப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த குழுவினர் மகரவிளக்கு உற்சவம் முடிந்து நடை சாத்தும் வரை சன்னிதானம் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். . பொது பாதுகாப்பு, கருவூல பாதுகாப்பு,உளவுத்துறை, தொலைத்தொடர்பு போன்றவற்றுக்கு தனியாக சிறப்பு குழுக்கள் உள்ளன. இது தவிர, இந்த சேவையில் NDRF, RAF, பிற மாநில போலீசார் மற்றும் பல்வேறு பாதுகாப்பு படைகளின் பணியாளர்களும் உள்ளனர்.
ஜனவரி 14-ம் தேதி மகரவிளக்கு பூஜைகள் மற்றும் மகர ஜோதி தரிசனம் நடைபெறுகிறது. இந்த ஆண்டுக்கான எருமேலி பேட்டை துள்ளல் ஜனவரி 11ம் தேதி காலை 11 மணிக்கு நடக்கிறது. இதில் அம்பலப்புழ குழு மற்றும் ஆலங்காட்டுகுழு ஆகிய குழுக்கள் பேட்டை துள்ளலில் பங்கேற்கும். 12ம் தேதி மகரவிளக்கு நாளில் ஐயப்பனுக்கு அணிவிக்கும் திருவாபரண ஊர்வலம் பந்தளத்தில் இருந்து புறப்படுகிறது.
மேலும், 13ம் தேதி பம்பை தீபம் மற்றும் பம்பா சத்யா நடைபெறும். மகரவிளக்கு கால நெய்யபிஷேகம் வரும் 18ம் தேதியுடன் நிறைவடைகிறது. 19ம் தேதியுடன் இவ்வாண்டு மகரவிளக்கு புனித யாத்திரை நிறைவடைந்து மாளிகபுறத்தில் இறுதி நிகழ்வாக குருதி பூஜை நடைபெறும். 20ம் தேதி காலை 7 மணிக்கு நடை அடைக்கப்படுகிறது.
இத்துடன் மகரவிளக்கு சீசன் நிறைவு பெறும்.
லட்சக்கணக்கான பக்தர்கள் குவியும் மகர ஜோதி தரிசனத்துக்கான ஏற்பாடுகள் பல்வேறு துறைகள் தலைமையில் நிறைவடைந்துள்ளதாக தேவசம்போர்டு தெரிவித்துள்ளது.
எருமேலி என்றால் என்ன?
சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் எருமேலியில் காட்டுவாசிகள் போல வேடமிட்டு சுவாமி திந்தக தோம் ஐயப்பன் திந்தக தோம் என்று கோஷமிட்டு தெய்வீக ஆட்டம் ஆடுவது வழக்கம்.
எருமேலியில் மண்டல சீசன் துவக்கம் முதல் பேட்டை துள்ளல் நடந்தாலும் மகரஜோதிக்கு 3 நாட்களுக்கு முன்னதாக நடக்கும் பேட்டை துள்ளல் பிரசித்தி பெற்றது. அம்பலக்குழா, ஆலங்காடு என இரண்டு பக்தர்கள் குழுவினர் நடத்தும் பேட்டை துள்ளலுக்கு பின் இங்கு பேட்டை துள்ளல் இருக்காது. இதையொட்டி நாளை காலை சுமார் 11 மணியளவில் எருமேலியில் பேட்டை துள்ளல் நடைபெற்றயுள்ளது.
ஐயப்ப பக்தர்கள் உடலில் வர்ணங்களைப் பூசிக்கொண்டு சாமி திந்தகத் தோம் தோம் ஐயப்ப திந்தகத் தோம் தோம் என்று ஆடிப்பாடி மகிழ்வர். முதன் முதலாக சபரிமலை செல்லும் கன்னிசாமிகள் எருமேலி வந்து செல்வது வழக்கம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Magaravilakku, Sabarimala, Sabarimalai Ayyappan temple