ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

சபரிமலையில் இன்று மண்டல பூஜை.. தங்க அங்கி அணிவித்து சாமி ஐயப்பனுக்கு சிறப்பு  தீபாராதனை..!

சபரிமலையில் இன்று மண்டல பூஜை.. தங்க அங்கி அணிவித்து சாமி ஐயப்பனுக்கு சிறப்பு  தீபாராதனை..!

தங்க அங்கி

தங்க அங்கி

Sabarimalai | சபரிமலையில் மண்டல பூஜையை முன்னிட்டு ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவித்து சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Kerala, India

சபரிமலையில் கடந்த 23 ஆம் தேதி ஆரன்முள பார்த்த சாரதி கோவிலில் இருந்து ஊர்வலமாக எடுத்து வரப்பட்ட தங்க அங்கி நேற்று மாலை சன்னிதானத்தில் சரம் குத்தி பகுதியில் கேரளா தேவசம் அமைச்சர் கே. ராதாகிருஷ்ணன், தேவசம் தலைவர் அனந்த கோபன் உட்பட அதிகாரிகள் வரவேற்று பதினெட்டு படி வழியாக சன்னிதானத்திற்கு வந்தடைந்தது. தொடர்ந்து சபரிமலை தந்திரி கண்டரரு மோஹனரு இடம் தங்க அங்கியை ஒப்படைத்தனர். அதனைத் தொடர்ந்து ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவித்து 6.35 மணிக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இதில் தமிழக இந்து அறநிலைய துறை அமைச்சர் சேகர் பாபு பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

அதனை தொடர்ந்து சபரிமலையில் இன்று மண்டல பூஜை கொண்டாடப்படுகிறது.  சபரிமலையில் 41 நாட்கள் நடந்த மண்டல கால பூஜைகளின்  நிறைவாக  இன்று மண்டல பூஜை நடக்கிறது. இன்று (டிசம்பர் 27) அதிகாலை 3 மணிக்கு கோவில்  திறக்கப்பட்டு  தொடர்ந்து அபிஷேகமும், வழக்கமான பூஜைகளும்  நடைபெற்றது. அதை தொடர்ந்து  தங்க அங்கி ஐயப்பனுக்கு அணிவித்து  மண்டல பூஜை 12:30 முதல் 1:00 மணிக்குள் உள்ள சுப முகூர்த்தத்தில் நடக்கும்.

மண்டல பூஜை முடிந்து நடை சாத்திய பின்பு மாலையில் மீண்டும் நடை திறக்கப்படும். ஐயப்ப பக்தர்களுக்கு மண்டல பூஜை தரிசனம் செய்யவும் தங்கயங்கியுடன் கூடிய தீபாராதனை தரிசிக்கவும்  அனைத்து ஏற்பாடுகளையும் தேவசம் போர்டு மற்றும் காவல்துறை இணைந்து ஏற்பாடு செய்துள்ளது. இன்று டிசம்பர் 27ஆம் தேதி இரவு ஹரிவராசனம் பாடலுடன் நடை அடைக்கப்படும்.

தொடர்ந்து  மகரவிளக்கு விழாவையொட்டி டிசம்பர் 30ஆம் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. மகரவிளக்கு பூஜை  ஜனவரி 14, 2023 அன்று நடைபெற உள்ளது.

First published:

Tags: Mandala, Sabarimalai, Sabarimalai Ayyappan temple