• HOME
  • »
  • NEWS
  • »
  • spiritual
  • »
  • வைகாசி மாத பூஜைக்காக நாளை சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு...!

வைகாசி மாத பூஜைக்காக நாளை சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு...!

(கோப்புப் படம்)

(கோப்புப் படம்)

ஊரடங்கு காரணமாக பக்தர்கள் நேரடியாக சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது எனவும் அதே நேரத்தில் ஆன்லைன் மூலம் வழிபாடு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

  • Share this:
    வைகாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நாளை திறக்கப்படுகிறது.

    கேரளாவில் உள்ள புகழ் பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் தமிழ் மாதத்தின் தொடக்கத்தில் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி வைகாசி மாத பூஜைக்காக நாளை கோயில் நடை திறக்கப்படுகிறது.

    அன்று மாலை 5 மணிக்கு தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி சுதீர் நம்பூதிரி நடையை திறந்து வைக்கிறார்.

    15ம் தேதி முதல் 19ம் தேதி வரை நடை திறக்கப்பட்டு காலை, மாலை ஆகிய இருவேளையில் பூஜைகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஊரடங்கு காரணமாக பக்தர்கள் நேரடியாக சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது எனவும் அதே நேரத்தில் ஆன்லைன் மூலம் வழிபாடு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.






    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube




    Also see...

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vinothini Aandisamy
    First published: