சபரிமலையில் தற்போது படி பூஜை நடக்கும் சமயங்களில் தார்ப்பாய் ஷீட் போடப்பட்டு பூஜை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பதினெட்டாம் படியில் நிரந்தரக் கூரை போடும் விதமாக ஹைட்ராலிக் கூரை ஒன்று அமைக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சபரிமலை ஐயப்ப சுவாமி கோயில் உலக பிரசித்திபெற்றது. ஒவ்வொரு தமிழ் மாத தொடக்கத்தின் போது, கோவில் திறக்கப்பட்டு மாத பூஜை செய்வது வழக்கம். ஐயப்ப பக்தர்களுக்கு பம்பா நதியும், பதினெட்டாம் படியும், மகரவிளக்கும் மிகவும் புனிதமானவை. மலை ஏறி வரும் பக்தர்களின் பாதங்களுக்கு பக்தி உணர்வை கொடுப்பது பதினெட்டாம் படி. இருமுடி தலையில் இருந்தால்தான் சிறப்புமிக்க பதினெட்டாம் படியில் ஏறிச்செல்ல பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
பதினெட்டாம் படிக்கு படி பூஜை செய்ய 75,000 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. படிபூஜை நடக்கும் நேரங்களில் மழை வந்தால் பூஜைக்கு இடையூறு ஏற்பட்டு வந்தது. இதனால் அடை மழை காரணமாக படிபூஜை நடத்த முடியாத நிலையும் இருந்து வந்தது.
ஹைட்ராலிக் மேற்கூரை :
பதினெட்டாம் படிபூஜை நடத்தப்படும் நேரத்தில் மழை பெய்தால் பூஜைக்காக தார்ப்பாய் ஷீட் போடப்பட்டு பூஜை செய்வது வழக்கம். இந்நிலையில் அதற்கு மாற்றாக நிரந்தரமாக ஒரு கண்ணாடி மேற்கூரை அமைக்கப்பட்டது. ஆனால் அந்த கண்ணாடி மேற்கூரையால் நேரடியாக சூரிய ஒளி கொடிமரம் மீது விழுவதில்லை என்ற கூறப்பட்டது.
இதன் காரணமாக ஹைட்ராலிக் மேற்கூரையை அமைக்க கோயில் நிர்வாகம் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக ஐதராபாத்தைத் தலைமையிடமாகக் கொண்ட விஸ்வ சமுத்திரா என்ற கட்டுமான நிறுவனம் சபரிமலை கோயிலுக்கு 70 லட்சம் ரூபாய் காணிக்கையாக வழங்கி உள்ளது.
Also see... சபரிமலை ஐயப்பன் கோவிலின் சிறப்புகளும் அதன் 18 படிகளும்...
இந்த ஹைட்ராலிக் மேற்கூரை, படிபூஜை நேரத்தில் மழை பெய்தால் மூடும் வகையிலும், மற்ற நேரங்களில் இருபுறமும் மடித்து வைக்கும் வகையில் அமைக்கப்பட உள்ளது. மேற்கூரை அமைக்கும் பணி தொடங்க ஐகோர்ட் அனுமதியும் பெறப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது...
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Sabarimala