ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

சபரிமலை : நீலி என்ற பெண் புனித பம்பா நதியாக மாறிய புராண வரலாறு!

சபரிமலை : நீலி என்ற பெண் புனித பம்பா நதியாக மாறிய புராண வரலாறு!

சபரிமலை

சபரிமலை

Sabarimalai | ஐயப்பனின் திருத்தலம் சபரிமலை. இந்தப் புண்ணியத் தலத்துக்கு பெருமை சேர்ப்பது பம்பா நதி. கங்கைக்கு நிகரான பம்பா நதி பக்தர்களின் பாவத்தை நீக்கி வரும் ஒரு பாவநாசினி. தட்சிணகங்கை என்று போற்றப்படும் பம்பா நதிக்கரையில்தான் ஸ்ரீஐயப்ப ஸ்வாமி பூவுலகில் குழந்தையாகத் தோன்றினார்.

மேலும் படிக்கவும் ...
 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  சபரிமலை எழில் மிகுந்த புனித பூமியாகும். திருத்தலத்திற்கு யாத்திரை சென்று தரிசனம் செய்வதாலும், அங்குள்ள புனிதத் தீர்த்தத்தில் நீராடுவதாலும் அனைத்து பாவங்களும் நீங்கி, கோடி புண்ணியம் கிடைக்கும் என்று சாஸ்திரம் கூறுகிறது.

  பதினெட்டு மலைகள் சூழ்ந்த நிலையில், சுயம்புவாக எழுந்து அனைத்து மலைகளையும் விட உயர்ந்து காணப்படுவது சபரிமலை. இங்கு ஒவ்வொரு வருடமும் மகரசங்கராந்தி அன்று, ஜோதி வடிவில் பொன்னம்பல மேட்டில் ஐயப்பன் காட்சி தருவதாக ஐதீகம்.

  பம்பை நதிக்கரையில் முனிவர்கள், குடில்கள் அமைத்து யாகம் செய்திருக்கிறார்கள் என்பது புராணங்களும், தல வரலாறும் சொல்லும் செய்தி. அதனால் இது மகாயாகம் நடந்த யாக பூமியாக பார்க்கப்படுகிறது.

  சுமார் 176 கி.மீ பாய்ந்து கேரளத்தை செழிப்பாக்கும் இந்த நதி புராண வரலாற்றில் மிகப்பெரிய இடத்தினைப் பெற்றுள்ளது. ஆம், முனிவர்கள் தவமிருந்த யோக பூமியாகவும், யோகிகள் வாழ்ந்த தபோ வனமாகவும் பம்பை நதிக்கரை இருந்து வந்துள்ளது. ஐயப்பன் குழந்தையாகத் தவழ்ந்த இந்தப் புனித பம்பை உருவான புராணக்கதை ஸ்ரீராமர் காலத்தில் இருந்தே தொடங்குகிறது.

  ராமனும், லட்சுமணனும், சீதாதேவியைத் தேடி கானகத்தில் அலைந்தனர். அப்போது வனத்தில் இருந்த மதங்க முனிவர் ஆசிரமத்திற்குச் சென்றனர். அவரது குடிலில் நீலி என்ற பெண் இருந்தாள். அவள் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்தவள் என்பதால் அவளுக்கு ராம, லட்சுமணர்களை வரவேற்பதில் தயக்கம் இருந்தது.

  பம்பா நதி

  இதை உணர்ந்த ராமபிரான், மனிதர்கள் எல்லோரும் இறைவனால் படைக்கப்பட்டவர்கள். அவர்களில் உயர்ந்த இனம், தாழ்ந்த இனம் என்ற பாகுபாடில்லை. உன்னை போற்றிப் புகழும் நிலையை உனக்கு அளிக்கிறேன் என்று சொல்லி அந்தப் பெண்ணை அழகான அருவியாக மாற்றி அருள்புரிந்தார். அதுவே பம்பை நதியாக மாறி, தட்சிண கங்கை என்று பெயர் பெற்றது.

  Also see...  72, 000 பேர் முன்பதிவு.. சபரிமலையில் இன்று அதிகாலை முதல் அலைமோதும் கூட்டம்..!

  மகிஷி என்ற அரக்கியை வதம் செய்ய அவதரித்தவன் ஐயப்பன். மகிஷனின் சகோதரியான மகிஷியை, ஐயப்பன் வதம் செய்தார். இதனால் தேவர்களால் முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட தவ பூமியாகவும் சபரிமலை திகழ்கிறது. இங்குள்ள பம்பை நதிக்கரையில் மகரவிளக்கு பூஜைக்கு முன்னர், விளக்கு உற்சவம் நடைபெறும். இதற்கு ‘பம்பா உற்சவம்’ என்று பெயர்.

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Sabarimalai