ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

Sabarimalai : சபரிமலை ஐயப்ப பக்தர்களுக்கு ஒரு குட் நியூஸ்... தேவஸ்தானம் அறிவித்தது என்ன தெரியுமா?

Sabarimalai : சபரிமலை ஐயப்ப பக்தர்களுக்கு ஒரு குட் நியூஸ்... தேவஸ்தானம் அறிவித்தது என்ன தெரியுமா?

சபரிமலை

சபரிமலை

Sabarimalai : மாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வரும் 12 ஆம் தேதி திறக்கப்பட உள்ளது. தினமும், 15 ஆயிரம் பக்தர்களை தரிசனத்துக்கு அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது..

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

சபரிமலை ஐயப்பன் கோவில் கேரளாவில் உள்ளது. இந்தக் கோவிலுக்கு, வெளி மாநிலங்களில் இருந்தும், வெளி நாடுகளில் இருந்தும் பக்தர்கள் தரிசனத்திற்கு வந்துச் செல்வர். தற்போது கொரோனாவால் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. இதன் காரணமாக பக்தர்களின் வருகை குறைந்துள்ளது.

தந்திரி கண்டரு மகேஷ் மோகனரு முன்னிலையில், மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி நடையை திறந்து வைத்து பூஜைகளை நிறைவேற்றுவார்.

இந்நிலையில், மாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வருகிற 12-ந்தேதி சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு திறக்கப்படுகிறது. அன்றைய தினம் மற்ற சிறப்பு பூஜைகள் நடைபெறாது. மறுநாள் ஞாயிற்றுக்கிழமை வழக்கம்போல் அதிகாலை 5 மணிக்கு மீண்டும் கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும். தந்திரி கண்டரு மகேஷ் மோகனரு முன்னிலையில், மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி நடையை திறந்து வைத்து பூஜைகளை செய்வார்.

அதனைத் தொடர்ந்து 17 ஆம் தேதி இரவு வரை நடை திறந்திருக்கும். தினமும் 15,000 பக்தர்கள் வீதம் அனுமதிக்க முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. இதற்கான முன்பதிவு ஏற்கனவே தொடங்கிவிட்டது. இரண்டு டோஸ் தடுப்பூசி போட்ட சான்றிதழ் அல்லது 72 மணி நேரத்திற்கு முன்பு எடுக்கப்பட்ட ஆர்டிபிசிஆர் கொரோனா பரிசோதனை செய்த சான்றிதழ் மற்றும் முன்பதிவு கூப்பன் ஆகியவற்றுடன் பக்தர்கள் தரிசனத்துக்கு வர வேண்டும் என சபரிமலை தேவஸ்தானம் அறிவுறுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க... மாசி மாதத்தின் சிறப்புகளும் அதன் முக்கியதுவமும்!

இந்த 5 நாட்கள் நடைபெறும் சிறப்பு பூஜைகள், வழிபாடுகளுக்கு பிறகு 17-ந்தேதி இரவு 8 மணிக்கு அத்தாழ பூஜைக்கு பின்னர் அரிவராசனம் பாடல் இசைக்கப்பட்டு, கோவில் நடை அடைக்கப்படும் என்றும் தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

First published:

Tags: Sabarimalai Ayyappan temple