ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

பங்குனி மாத சிறப்பு பூஜை... இன்று மாலை சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது...

பங்குனி மாத சிறப்பு பூஜை... இன்று மாலை சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது...

சபரிமலை

சபரிமலை

Sabarimalai | பங்குனி மாத சிறப்பு பூஜை மற்றும் 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை 8-ந்தேதியான இன்று மாலை 5.30 மணிக்கு திறக்கப்பட்டது. நாளை முதல் பக்தர்களுக்கு அனுமதி. வரும் 19 ஆம் தேதி வரை நடை திறந்திருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

சபரிமலை கோவிலில் பங்குனி திருவிழா நாளை 9-ந்தேதி தொடங்குகிறது. பங்குனி மாத சிறப்பு பூஜை மற்றும் 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று 8-ந்தேதி மாலை 5.30 மணிக்கு திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி நடையை திறந்து வைத்தார்.

இந்நிலையில் நாளை 9-ந் தேதி ஆராட்டு திருவிழா தொடங்குகிறது. அன்றைய தினம் காலை 10.30 மணிக்கு மேல் 11.30 மணிக்குள் திருவிழா கொடியை தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு ஏற்றி வைக்கிறார். இதையொட்டி 10-ந்தேதி முதல் 17-ந்தேதி வரை தினமும் ஸ்ரீபூதபலி, உத்சவபலி ஆகியவை நடைபெறும். 17-ந் தேதி இரவு சரம்குத்தியில் பள்ளிவேட்டை நடைபெறும்.

மேலும் படிக்க... சபரிமலைக்கு மாலை அணியும் முறைகளும் சொல்ல வேண்டிய ஸ்லோகமும்!

18-ந் தேதி காலை 11 மணிக்கு பம்பையில் ஐயப்பனுக்கு ஆராட்டு நடைபெறும். தொடர்ந்து வழக்கமான பூஜைகளுக்கு பிறகு மாலையில் கொடி இறக்கப்பட்டு 10வது நாள் திருவிழா நிறைவு பெறும்.

மேலும் படிக்க... சபரிமலை ஐயப்பன் கோவிலின் சிறப்புகளும் அதன் 18 படிகளும்...

அதைத்தொடர்ந்து, 19-ந் தேதி இரவு கோவில் நடை அடைக்கப்படும். நாளை முதல் 19 தேதி வரை பக்தர்களுக்கு தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Sabarimalai