ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

Sabarimalai | சபரிமலை: மண்டல பூஜைக்காக இன்று காலை தங்க அங்கி பவனி புறப்பாடு சிறப்பாக தொடங்கியது...

Sabarimalai | சபரிமலை: மண்டல பூஜைக்காக இன்று காலை தங்க அங்கி பவனி புறப்பாடு சிறப்பாக தொடங்கியது...

சபரிமலை

சபரிமலை

சபரிமலையில் வரும் 26 அன்று நடைபெற உள்ள மண்டல பூஜைக்கு ஐயப்பனுக்கு அணிவிக்கும் தங்க அங்கி ஊரவலம் இன்று காலை  ஸ்ரீ பார்த்தசாரதி கோவிலில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  சபரிமலையில், கார்த்திகை ஒன்றாம் தேதி தொடங்கிய மண்டல பூஜைக்கான காலம் நிறைவு கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. கொரோனா பரவலை தடுக்க ஆரம்பத்தில் விதிக்கப்பட்டிருந்த பெரும்பாலான கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டு விட்டன. இதனால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தற்போது தினமும் ஐயப்பனை தரிசிக்க நீண்ட கியூ காணப்படுகிறது.

  இந்நிலையில் இன்று நடக்கும் தங்க அங்கி ஊர்வலத்தை முன்னிட்டு  அதிகாலை 5 மணி முதல் காலை 7 மணி வரை ஆறன்முள ஸ்ரீ பார்த்தசாரதி கோவிலில் தங்க அங்கி  தரிசனத்திற்கு  பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். இதனை தொடர்ந்து ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்ட தங்க அங்கிக்கு வழி நெடுவே வரவேற்பு அளிக்கப்பட்டு வருகிறது.

  வரும் 25ஆம் தேதி அன்று மதியம் 1.30 மணிக்கு இந்த ஊர்வலம் பம்பை சென்றடையும். அங்கிருந்து சன்னிதானம் நோக்கி ஊர்வலமாக சென்று 25 ஆம் தேதி மாலை 5:30 மணிக்கு சரங்குத்தியையும் வந்தடையும். அன்று மாலை 6:30 மணிக்கு ஐயப்பன் விக்ரகத்தில் அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடைபெறும்.

  மேலும் படிக்க... சகல சங்கடங்களையும் நீக்கும் சங்கடஹர சதுர்த்தி விரதம் இன்று...

  தொடர்ந்து அடுத்தநாள் காலை 26ஆம் தேதி அன்று பகல் 11.50 மணிக்கும் 1.15  மணிக்கும் இடையே உள்ள சுப முகூர்த்தத்தில் மண்டல பூஜை நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

  செய்தியாளார் : சஜயக் குமார், கன்னியாகுமரி

  மேலும் படிக்க... யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம் வர போகுது...

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Makaravilakku, Sabarimala Ayyappan, Sabarimalai Ayyappan temple