ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை நடை திறப்பு (வீடியோ)

நாளை முதல் ஐந்து நாட்களுக்கு ஒவ்வொரு நாளும் 250 பேர் அனுமதிக்கப்படுகின்றனர். இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை கேரள அரசு வெளியிட்டுள்ளது.

ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை நடை  திறப்பு (வீடியோ)
சபரிமலை
  • Share this:
ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று திறக்கப்பட்டது. கொரோனா ஊரடங்கு தளர்வை அறிவித்த மத்திய அரசு, வழிபாட்டு தலங்களை திறக்க கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலையில், கேரளாவில் புகழ் பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் நடை, ஐப்பசி மாத பூஜைக்காக இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது.

7 மாத இடைவெளிக்குப் பிறகு தரிசனத்துக்காக பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். நாளை முதல் ஐந்து நாட்களுக்கு ஒவ்வொரு நாளும் 250 பேர் அனுமதிக்கப்படுகின்றனர். இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை கேரள அரசு வெளியிட்டுள்ளது. தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் கட்டாயம் கொரோனா தொற்று இல்லை என்ற சான்றும், மலையேறுவதற்கு தகுதியானவர் என மருத்துவர் அளிக்கும் சான்றும் வைத்திருந்தால் மட்டுமே அனுமதி என அறிவித்துள்ளது. மேலும், இணையதளத்தில் முன்பதிவு செய்வது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.


கொரொனா சோதனை மேற்கொண்டு நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் கொண்டு வர வேண்டும். பம்பை ஆற்றில் குளிக்க பக்தர்களுக்கு அனுமதி இல்லை. மாஸ்க், சமூக இடைவெளி பின் பற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பட்டுகள் உள்ளன. நாளை சபரிமலை சன்னிதானம் மற்றும் மாளிகை புறம் கோயில்களுக்கு அடுத்த சீசனுக்கான மேல் சாந்திகளை குலுக்கல் மூலம் தேர்வு செய்யப்படும். தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் தற்போதைய மேல்சாந்தி சுதீர் நம்பூதிரி நடை திறந்து தீபாராதனை மற்றும் பூஜைகள் நடைபெற்று வருகிறது.
ஐபிஎல் போட்டிகள் குறித்த செய்திகளுக்கு நியூஸ்18 உடன் இணைந்திருங்கள்

First published: October 16, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading