ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு.. ஜனவரி 19 வரை பக்தர்களுக்கு அனுமதி

மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு.. ஜனவரி 19 வரை பக்தர்களுக்கு அனுமதி

சபரிமலை

சபரிமலை

Sabarimala | நாளை முதல் வழக்கம்போல் அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்ட நெய்யபிஷேகம், உச்ச பூஜை, களபாபிஷேகம் உள்ளிடவை நடைபெறும்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Kerala, India

மகர விளக்கு பூஜை மற்றும் மகர ஜோதி தரிசனத்தை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடை திறக்கப்பட்டது.

மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை, நவம்பர் 16 ஆம் தேதி திறக்கப்பட்ட நிலையில், கடந்த 27 ஆம் தேதி மீண்டும் அடைக்கப்பட்டது. இந்த நிலையில், வரும் ஜனவரி 14 ஆம் தேதி மகர விளக்கு பூஜையும் மகர ஜோதி தரிசனமும் நடைபெற உள்ளது. அதற்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை, இன்று மாலை 5 மணிக்கு மீண்டும் திறக்கப்பட்டது.

நாளை முதல் வழக்கம்போல் அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்ட நெய்யபிஷேகம், உச்ச பூஜை, களபாபிஷேகம் உள்ளிடவை நடைபெறும். பிற்பகல் 1.30 மணிக்கு நடை அடைக்கப்பட்டு மீண்டும் மாலை 3 மணிக்கு நடை திறக்கப்படும். தொடர்ந்து தீபாராதனை, புஷ்பாபிஷேகம் உள்பட சிறப்பு வழிபாட்டுடன் இரவு 11.30 மணியளவில் நடை சாத்தப்படும். ஜனவரி 19ஆம் தேதி வரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், 20ஆம் தேதி காலை கோயில் நடை சாத்தப்படும் என்று தேவசம் போர்டு அறிவித்துள்ளது. இந்த நிலையில், சாமி தரிசனம் செய்ய இன்று மட்டும் 32 ஆயிரத்தி 281 பேர் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்திருந்தனர்.

First published:

Tags: Kerala, Sabarimala