ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

72, 000 பேர் முன்பதிவு.. சபரிமலையில் இன்று அதிகாலை முதல் அலைமோதும் கூட்டம்..!

72, 000 பேர் முன்பதிவு.. சபரிமலையில் இன்று அதிகாலை முதல் அலைமோதும் கூட்டம்..!

சபரிமலை ஐயப்பன் கோயில்

சபரிமலை ஐயப்பன் கோயில்

Sabarimalai | வார இறுதி நாட்கள் என்பதால் சபரிமலை ஐயப்பன் கோவிலில் சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் பக்தர்கள் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Kerala, India

  கேரளாவில் உள்ள பிரசித்திபெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜைக்காக கடந்த வாரதம் புதன்கிழமை மாலை நடை திறக்கப்பட்டது. இதையடுத்து, தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்த பக்தர்கள் கொட்டும் மழைக்கு இடையே வந்து தரிசனம் செய்தனர். இந்நிலையில் கடந்த சனிக்கிழமை அதிகாலை முதல் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு 4 மணி முதல் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வந்தனர்.

  ஆனால் ஞாற்றுகிழமையான நேற்று பக்தர்களின் எண்ணிக்கை குறைந்தே காணப்பட்டது. இந்நிலையில் மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்டு இன்று 6 வது நாள், கார்த்திகை மாதத்திற்கு 5 ஆம் நாளாகும். இன்று தற்போதுவரை பக்தர்களின் கூட்டம் சற்று அதிகமாக உள்ளது.

  இன்று அதிகாலை 3 மணிக்கு பள்ளி உணர்தலுடன் நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம், அபிஷேகம் முடிந்தது 4 மணி முதல் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று அதிகாலை முதல் அலை மோதுகிறது பக்தர்களின் கூட்டம்.

  Also see... சபரிமலை ஐயப்பன் கோவிலின் சிறப்புகளும் அதன் 18 படிகளும்...

  காலை 6 மணி வரை 10,000 பேர் தரிசனம் செய்தனர். நேற்று வார இறுதி நாளில் 47, 000 பேர் தரிசனம் செய்தனர். மற்ற நாட்களை ஒப்பீடும் போது நேற்று கூட்டம் குறைவாகவே காணப்பட்டது. இன்று ஆன்லைன் மூலம் இதுவரை 72, 000 பேர் முன் பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Sabarimalai, Sabarimalai Ayyappan temple