ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

சபரிமலையில் முதல் நாளில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்... கொட்டும் மழையிலும் காத்திருந்து தரிசனம்..!

சபரிமலையில் முதல் நாளில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்... கொட்டும் மழையிலும் காத்திருந்து தரிசனம்..!

கொட்டும் மழையில் பக்தர்கள் ஐயப்பன் தரிசனம்

கொட்டும் மழையில் பக்தர்கள் ஐயப்பன் தரிசனம்

மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை கோயில் நடை திறக்கப்பட்ட நிலையில், முதல் நாளில் கொட்டும் மழையிலும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Kerala, India

    சபரிமலை ஐயப்பன் கோயிலில் பிரசித்தி பெற்ற மண்டல பூஜை வியாழக்கிழமை முதல் 41 நாட்கள் கடைப்பிடிக்கப்படுகிறது. இதற்காக புதன் கிழமை மாலை கோயில் நடை திறக்கப்பட்டது. மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி கருவறையில் தீபம் ஏற்றிய பின்னர், கோயில் முன் உள்ள ஆழி குண்டம் ஏற்றப்பட்டது. அபிஷேகங்களுக்கு பின் இரவு 10 மணியளவில் கோயில் நடை அடைக்கப்பட்டது.

    Also see... சபரிமலை மண்டல பூஜை.. முன்பதிவு செய்வது எப்படி? ஸ்டெப் பை ஸ்டெப் விளக்கம்!

    இதையடுத்து வியாழக்கிழமை அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து இருமுடி கட்டி வந்த பக்தர்கள் 18-ம் படி ஏற அனுமதிக்கப்பட்டனர். மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்ட நிலையில் கார்த்திகை முதல் நாளில் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. அதிகாலை 4 மணி முதல் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்து நின்று தரிசனம் செய்தனர்.

    முதல் நாள் தமிழகம் , கர்நாடக, ஆந்திர மாநிலங்களில் இருந்து அதிக அளவில் பக்தர்கள் வந்தனர். பகலில் விட்டு விட்டு சாரல் மழை பெய்தது. இந்நிலையில் மதியம் 1 மணிக்கு நடை சாத்தப்பட்டு மாலை 4 மணிக்கு நடை திறந்து பக்தர்களை தரிசனத்துக்கு அனுமதித்தனர். மாலை 6.30 மணிக்கு தீபாராதனை நடைபெற்றது.

    பின்னர் மீண்டும் கன மழை பெய்த நிலையில் கொட்டும் மழையில் தரிசனம் செய்ய வரிசையில் நீண்ட தூரம் காத்திருந்த பக்தர்கள் மழையில் நனைந்த படி ஐயப்ப பக்தர்கள் சரண கோஷங்கள் எழுப்பிகாத்திருந்து தரிசனம் செய்தனர். தீபாராதனையை தொடர்ந்து 7 மணிக்கு புஷ்பாபிஷேகம் நடைபெற்றது. இரவு 9 மணிக்கு அத்தாழ பூஜை அதனை தொடர்ந்து இரவு 10.50 மணிக்கு ஹரிவராசனம் பாடலுடன் 11 மணிக்கு நடை சாத்தப்பட்டது.

    Also see... சபரிமலைக்கு 'மாலை' போட்டாச்சா? கண்டிப்பாக பக்தர்கள் கடைபிடிக்கவேண்டிய விரத முறைகள் இதுதான்!

    டிசம்பர் 27-ம் தேதி வரை மண்டல பூஜை நடைபெறுகிறது. தினசரி அதிகாலை 4 மணி முதல் பகல் ஒரு மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 11 மணி வரையும் ஐயப்பனை தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்படுவர்.

    கார்த்திகை மாதம் பிறந்துள்ளதை அடுத்து சபரிமலை செல்வதற்காக தமிழ் நாட்டிலும் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Ayyappan temple in Sabarimala, Heavy Rainfall, Rain, Sabarimala