ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

சபரிமலை மண்டல பூஜை: இன்று மட்டும் 50,000 பேர்.. விரதத்தை தொடங்கிய பக்தர்கள்!

சபரிமலை மண்டல பூஜை: இன்று மட்டும் 50,000 பேர்.. விரதத்தை தொடங்கிய பக்தர்கள்!

சபரிமலை

சபரிமலை

Sabarimala | சபரிமலையில் வருகிற டிசம்பர் மாதம் 27ஆம் தேதி மண்டல அபிஷேகம் நடைபெறும். இதையடுத்து, கோயில் நடை மூடப்படும். அதன் பின்னர், மகர விளக்கு பூஜைக்காக டிசம்பர் 30ஆம் தேதி மீண்டும் நடை திறக்கப்படும்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Kerala, India

  கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை, மார்கழி மாதங்களில் மண்டல பூஜை, மகர விளக்கு பூஜை நடைபெறும். அந்த வகையில், நடப்பாண்டுக்கான மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நேற்று மாலை திறக்கப்பட்டது.

  அதன்படி, சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை நேற்று முதல் 41 நாட்கள் கடைப்பிடிக்கப்படுகிறது. இதற்காக மேல் சாந்தி ஜெயராமன் நம்பூதிரி கோயில் நடையை திறந்து வைத்து கருவறையில் தீபம் ஏற்றினார். அதன்பின் கோயில் முன் உள்ள ஆழி குண்டம் ஏற்றப்பட்டது. மாலை 6 மணியளவில் அபிஷேகம் நடத்தப்பட்டு இரவு 10 மணியளவில் கோயில் நடை அடைக்கப்பட்டது.

  Also see... சபரிமலை ஐயப்பன் கோவிலின் சிறப்புகளும் அதன் 18 படிகளும்...

  இதையடுத்து இன்று அதிகாலை நடை திறக்கப்பட்டு தீபம் ஏற்றப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். கடந்த இரு ஆண்டுகளாக பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அவை தற்போது தளர்த்தப்பட்டுள்ள நிலையில், இன்று மட்டும் 50,000 பக்தர்கள் சபரிமலைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

  இந்நிலையில் சபரிமலை ஐயப்பனுக்கு மாலை அணிவித்து பக்தர்கள் விரதத்தை துவங்கினர். தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியில் அமைந்துள்ள குற்றால அருவியில் புனித நீராடி கார்த்திகை மாதப்பிறப்பை முன்னிட்டு சபரிமலை ஐயப்பனுக்கு மாலை அணிவித்து ஏராளமான ஐயப்ப பக்தர்கள் விரதத்தை தொடங்கினர்.

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Ayyappan temple in Sabarimala, Makaravilakku, Sabarimala