Sabarimalai Makaravilakku : சபரிமலை மகரஜோதி தரிசனம்
மகர ஜோதிக்கு முன்னர் நடைபெறும் பேட்டை துள்ளல் மற்றும் திருவாபரண ஊர்வலத்தில், 50 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சபரிமலை கோவில் (கோப்பு படம்)
- News18 Tamil
- Last Updated: January 14, 2021, 6:21 PM IST
சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகரஜோதி தரிசனம் நடைபெறுகிறது. பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில், மகர விளக்கு பூஜை நடைபெற்று வருகிறது. இதன் ஒருபகுதியாக இன்று மாலை 6.30 மணிக்கு, மகரஜோதி தரிசனம் நடைபெறுகிறது.
பொன்னம்பல மேட்டில் ஜோதி வடிவில் சுவாமி ஐயப்பன் காட்சி அளிப்பார் என்பது பக்தர்களின் நம்பிக்கை ஆகும். இதனை காண வழக்கமாக சபரிமலையில் பக்தர்கள் லட்சக்கணக்கில் திரள்வார்கள். ஆனால், கொரோனா முன்னெச்சரிக்கையாக தற்போது, நாள் ஒன்றிற்கு ஐயாயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என, திருவிதாங்கூர் தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.
மகர ஜோதிக்கு முன்னர் நடைபெறும் பேட்டை துள்ளல் மற்றும் திருவாபரண ஊர்வலத்தில், 50 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இன்று காலை சிறப்பு பூஜைகள் முடிந்து மதியம் 12 .30 மணிக்கு உச்ச பூஜை யுடன் 1 மணிக்கு நடை சாத்தப்பட்டது. தொடர்ந்து நடை திறக்கப்பட்டு மகரவிளக்கு சிறப்பு பூஜைகளுக்கு முன் ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. சரம் குத்தி யில் இருந்து திருவாபரண ஊர்வலத்தை தேவசம் தலைவர் வாசு தலைமையில் வரவேற்பு அளித்து சன்னிதானத்தில் தந்திரி கண்டரரு ராஜீவரு மற்றும் மேல் சாந்தி ஜெயராஜ் போற்றி இடம் திருவாபரண பெட்டகம் அடைக்கப்படும். தொடர்ந்து 6.30 மணிக்கு திருவாபரணம் ஐயனுக்கு அணிவித்து சிறப்பு தீபாராதனை. தொடர்ந்து 6.40 மணிக்கு பொன்னம்பல மேட்டில் மகர ஜோதி தரிசனம் நடைப்பெறும்.