சரண கோஷத்துடன் மாலை அணிந்து விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்...!

சரண கோஷத்துடன் மாலை அணிந்து விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்...!
மாலை அணிந்து கொண்ட பக்தர்கள்
  • News18
  • Last Updated: November 17, 2019, 12:31 PM IST
  • Share this:
கார்த்திகை மாதம் தொடங்கிய நிலையில், ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து இன்று விரதத்தை தொடங்கியுள்ளனர்.

இந்துக்களின் புனித மாதமான கார்த்திகை மாதம் முதல் நாளில் சபரிமலை ஐயப்பனுக்கு மாலை அணிந்து 48 நாட்கள் மண்டல விரதம் கடைபிடித்த பிறகு கேரள மாநிலம் சபரிமலையில் அமைந்துள்ள ஐயப்பன் கோவிலுக்கு பக்தர்கள் சென்று வழிபாடு நத்துவர்

அதன் படி கார்த்திகை 1 ஆம் நாளான இன்று அதிகாலை சென்னை கோடம்பாக்கம் மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் மாலை அணிந்து விரதம் துவங்கினர்.


இதனை முன்னிட்டு அதிகாலை, 3:30 மணிக்கு, கோவில் வளாகத்தில், மகா கணபதி ஹோமம் நடைபெற்றது. 4.30  மணிக்கு, நெய், தேன், பஞ்சாமிர்தம், பன்னீர், பால், தயிர், இளநீர், விபூதி, புஷ்பம் கொண்டு அஷ்டாபிஷேகம் நடந்தது.

தொடர்ந்து, ஐயப்பனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பக்தர்களுக்கு சன்னிதானத்தில் வைத்து மாலை அணிவித்தல் நிகழ்ச்சி நடந்தது.

குருசாமி தலைமையில் ' சுவாமியே சரணம் ஐயப்பா' என்ற கோஷ முழக்கங்களுடன், குழந்தைகள், கன்னி சாமிகள் என 500 க்கும் மேற்பட்டவர்கள் மாலை அணிந்து கொண்டனர்.மாலை அணிந்து விரதம் கடைபிடிப்பதால் உணவுக் கட்டுப்பாடு பின்பற்றுவதால் உடல் தூய்மை மனத்தூய்மை அடைந்து நோய் நொடிகள் நீங்கும் என அவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.

 
First published: November 17, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading