Sabarimala Makara Jyothi Live: லட்சக்கணக்கான பக்தர்களின் பரவசத்தில் சபரிமலை மகரஜோதி!

Sabarimala Makara Jyothi Live: லட்சக்கணக்கான பக்தர்களின் பரவசத்தில் சபரிமலை மகரஜோதி!
சபரிமலை
  • Share this:
கேரளா மாநிலம் ஐயப்பன் கோயிலில் நடைபெற்றுவரும் மகரஜோதியைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர்.

கேரளமாநிலத்திலுள்ள ஐயப்பன் கோயிலில் இன்று பொன்னம்பல மேட்டில் மாலை 6 மணி அளவில் மகரஜோதி தெரியும். அந்த ஜோதியைக் காண லட்சக்கணக்கான மக்கள் குவியத் தொடங்கியுள்ளனர். பந்தளம் அரண்மனையிலிருந்து ஐயப்பனுக்கு அணிவிக்க கொண்டுவரப்பட்ட ஆபரணங்களால் ஐயப்பனுக்கு அலங்காரம் செய்யப்பட்ட தீபாராதனை தொடங்கியுள்ளது.

அதனைத்தொடர்ந்து ஐயப்பன் கோயில் சன்னிதானத்தில் மகரவிளக்கு பூஜையும் நடைபெறும். மகரஜோதி தரிசனத்தையொட்டி, தேசியப் பேரிடா் மீட்புப் படையினா், அதிரடி படை வீரா்கள் சபரிமலையில் குவிக்கப்பட்டுள்ளனா். இதன்காரணமாக மேலும் 200 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.


மொத்தம் 1,400 காவலா்களும், 15 துணை காவல் துறைக் கண்காணிப்பாளா்களும், 36 காவல் துறை ஆய்வாளா்களும் சந்நிதானத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

Also see: 
First published: January 15, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading