ஆடி மாத பூஜைக்காக சபரிமலையில் இன்று நடை திறப்பு

ஆடி மாத பூஜைக்காக சபரிமலையில் இன்று நடை திறப்பு

ஆடி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. 21 ஆம் தேதி வரை பூஜைகள் நடைபெறும். ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் தினசரி 5000 பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என தேவசம்போர்டு அறிவித்துள்ளது. ஐயப்பனை தரிசிக்க விரும்பும் பக்தர்கள் இன்று முதல் முன்பதிவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

  • Share this:
    கொரோனா வைரஸ் பரவலை தொடர்ந்து கேரளாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. மாதாந்திர பூஜைகள் கூட பக்தர்கள் இன்றி நடைபெற்றது. அதன் பின்னர் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு ஐப்பசி மாத பூஜையில் பங்கேற்க பக்தர்கள் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் அனுமதிக்கப்பட்டனர். ஆன்- லைனில் முன்பதிவு செய்த 1000 பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

    அதன் பிறகு கார்த்திகை மாதம் மண்டல பூஜை காலத்தில் தினமும் 3000 பக்தர்களுக்கும், மகர விளக்கு பூஜை காலத்தில் 5000 பக்தர்களுக்கும் சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது. அதிலும் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளுடந்தான் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். அதனால் பக்தர்களின் வருகை குறைவாக இருந்தது.

    இந்நிலையில் தற்போது 2வது அலை கொரோனாவால் நாடு முழுவதும் கட்டுப்படுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆனால்
    கேரளாவில் கொரோனா பரவல் விகிதம் படிப்படியாக குறைந்து வருவதால் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. வழிபாட்டு தலங்களை திறக்க கேரள அரசு அனுமதி அளித்துள்ளது. அதனால் கோவில்கள், ஆலயங்கள், மசூதிகள் உள்பட வழிபாட்டு தலங்கள் திறக்கப்பட்டன.

    இந்நிலையில் நாளை ஆடி மாதம் பிறக்க போவதையொட்டி இன்று மாலை 5 மணி முதல் நடை திறக்கப்படுகிறது. 21ஆம் தேதி வரை பூஜைகள் நடைபெறும். ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் தினசரி 5000 பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என தேவசம்போர்டு அறிவித்துள்ளது. ஐயப்பனை தரிசிக்க விரும்பும் பக்தர்கள் இன்று முதல் முன்பதிவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    மேலும் படிக்க... ஆடி மாதம் வருது.. கோவில்களில் திருவிழா நடத்த அனுமதிக்கப்படுமா...?

    6 நாட்கள் பூஜைகள் நடைபெறும் விவரம்:

    அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், உஷபூஜை, உச்ச பூஜைக்கு பின்பு மதியம் 1 மணிக்கு நடை அடைக்கப்படும். பின்னர் மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு 6 மணிக்கு தீபாராதனை, அபிஷேகம், இரவு 8.30 மணிக்கு அரிவராசனம் பாடி நடை அடைக்கப்படும்.

    பக்கதர்களுக்கு கட்டுபாடுகள் விதிப்பு:

    தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் 48 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட ஆர்டிபிசிஆர் நெகட்டிவ் சான்றிதழ் அல்லது கொரோனா தடுப்பூசி 2 டோஸ் போட்டதற்கான ஆன்லைன் சான்றிதழ் கண்டிப்பாக கொண்டு வர வேண்டும். இந்த சான்றிதழ்கள் அல்லாத பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
    Published by:Vaijayanthi S
    First published: