ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

மண்டல மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை நடை நவம்பர் 16ம் தேதி திறப்பு!

மண்டல மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை நடை நவம்பர் 16ம் தேதி திறப்பு!

சபரிமலை ஐயப்பன் கோயில்

சபரிமலை ஐயப்பன் கோயில்

Sabarimalai Ayyappan Kovil | சபரிமலை வரும் அனைத்து பக்தர்களுக்கும் ஆன்லைன் புக்கிங் அவசியம்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Kerala, India

  மண்டல மகர விளக்கு பூஜைக்காக நவம்பர் 16-ம் தேதி மாலை சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்படும் என தேவசம்போர்டு தலைவர் அனந்தகோபன் தெரிவித்துள்ளார்.

  இதுகுறித்து நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், “கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக சபரிமலையில் பக்தர்கள் தரிசனம் செய்வதில் சிரமம் இருந்தது. இந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாடுகள் முற்றிலும் தளர்த்தப்பட்டதால் சபரிமலை மண்டல கால மகரவிளக்கு பூஜைக்கு அதிக அளவில் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கிறோம்.

  கடந்த மாத பூஜைக்கு சபரிமலை நடை திறக்கப்பட்டபோது தென் மாநிலங்களில் இருந்து அதிக அளவில் பக்தர்கள் வந்தனர். சபரிமலைக்கு தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா மற்றும் கேரள பக்தர்கள் அதிக அளவு வருவார்கள். இந்த ஆண்டு மண்டல கால மகரவிளக்கு பூஜைக்காக நவம்பர் 16-ம் தேதி மாலை நடை திறக்கப்படும்.

  இதையும் படிங்க : Panchangam | இன்றைய நல்ல நேரம்.. ராகு காலம்... (நவம்பர் 04, 2022)

  அன்று மாலையிலேயே பக்தர்கள் சன்னிதானத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள். மலையாள மாதமான விருட்சிகம் 1-ம் தேதியான நவம்பர் 17-ம் தேதி அதிகாலை முதல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள். மண்டலகால பூஜைக்காக டிசம்பர் 27-ம் தேதி வரை நடை திறந்திருக்கும்.

  அதன்பிறகு மகரவிளக்கு பூஜைக்காக டிசம்பர் 30-ம் தேதி மீண்டும் சபரிமலை நடை திறக்கப்படும். மகரவிளக்கு ஜோதி வழிபாடு ஜனவரி 14-ம் தேதி  நடைபெறும். ஜனவரி 20-ம் தேதி வரை நடை திறந்திருக்கும்.

  கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால் இந்த ஆண்டு அதிக அளவு பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கிறோம். சபரிமலை வரும் அனைத்து பக்தர்களுக்கும் ஆன்லைன் புக்கிங் அவசியம். கடந்த காலங்களில் ஆன்லைன் முன்பதிவு கேரள போலீஸ் கவனித்து வந்தது.

  இதையும் படிங்க : இந்த 5 ராசிகளுக்கு பெயரும் புகழும் ரொம்ப பிடிக்குமாம் - உங்க கதை என்ன?

  இப்போது, ஆன்லைன் புக்கிங் தேவசம்போர்டு கட்டுப்பாட்டில் நடந்து வருகிறது. ஆன்லைனில் புக்கிங் செய்ய தவறியவர்களுக்காக சபரிமலையில் 12 இடங்களில் ஸ்பார்ட் புக்கிங் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுள்ளன” என்றார்.

  இந்த பேட்டியின்போது தேவசம்போர்டு உறுப்பினர் தங்கப்பன் மற்றும் செய்தி மக்கள் தொடர்பு அதிகாரி சுனில் ஆகியோர் உடனிருந்தனர்.

  Published by:Karthi K
  First published:

  Tags: Ayyappan temple in Sabarimala, Kerala. Sabarimala