• HOME
  • »
  • NEWS
  • »
  • spiritual
  • »
  • சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடை திறக்கப்பட்டது... பக்தர்களுக்கு அனுமதியில்லை

சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடை திறக்கப்பட்டது... பக்தர்களுக்கு அனுமதியில்லை

கேரளாவில் பெய்து வரும் மழை காரணமாக பக்தர்களுக்கு அனுமதி இல்லை.

  • Share this:
    கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவில் ஒவ்வொரு மாதமும் மலையாள மாதப் பிறப்பையொட்டி மூன்று நாட்கள் திறக்கப்படுவது வழக்கம். இதன்படி மலையாளத்தில் துலா மாதம் என அழைக்கப்படும் ஐப்பசி மாதப் பிறப்பை முன்னிட்டு நேற்று மாலை கோவில் திறக்கப்பட்டது.

    இதனையடுத்து இன்று முதல் வழக்கமாக பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடத்தப்படும் என்று இருந்த நிலையில், கனமழை காரணமாக இரண்டு நாட்களுக்கு பக்தர்களுக்கு தடை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    கேரளாவில் பெய்து வரும் கன மழை காரணமாக பாதுகாப்பு கருதி இரண்டு நாட்களுக்கு சபரிமலை பயணத்தை ஒத்தி வைக்க பக்தர்களுக்கு கேரளா அரசு அறிவுறுத்தி உள்ளது.  கன மழையில் இதுவரை கேரளாவில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். 10 பேர் மாயமாகியுள்ளனர். கோட்டயம் பகுதியில் மீட்பு பணிக்கு கொச்சியில் இருந்து கப்பல் படை விரைந்துள்ளனர்.

    இந்நிலையில் வரும் 19 ஆம் தேதி முதல் பக்தர்க்குக்கு அனுமதி அளிக்கப்படும் என்றும் தேவஸ்தானம் அறிவித்துள்ளது. தற்போது நடைமுறையில் உள்ள தரிசனத்துக்கு ஆன்லைன் முன்பதிவு, கொரோனா தொற்று பாதிப்பு இல்லை என்பதற்கான ஆர்.டி.பி.சி.ஆர். “நெகட்டிவ்’’ சான்றிதழ் அல்லது கொரோனா தடுப்பூசி 2 டோஸ்கள் செலுத்திக் கொண்டதற்காக சான்றிதழ் ஆகியவற்றை பக்தர்கள் வைத்திருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

    மேலும் படிக்க... Panchangam : இன்றைய பஞ்சாங்கம்.. நல்ல நேரம்.. (அக்டோபர் 17, 2021)

    இந்த சான்றிதழ்கள் இல்லாதவர்கள் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்ல அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று கூறப்பட்டுள்ளது. இந்தநிலையில் சபரிமலைக்கான புதிய மேல் சாந்தி இன்று தேர்ந்தெடுக்கப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    மேலும் படிக்க... பயம் நீங்கி பலம் தரும் ஆஞ்சநேயர்!

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: