சபரிமலையில் புரட்டாசி பூஜைக்காக ஆன்லைன் முன்பதிவு தொடங்கியது...

சபரிமலை ஐயப்பன்

புரட்டாசி மாத பூஜையையொட்டி, சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வருகிற 16-ந்தேதி திறக்கப்படுகிறது. ஆன்லைன் முன்பதிவு நேற்று தொடங்கியது.

 • Share this:
  கேரளாவில் கொரோனா பரவல் காரணமாக ஆன்லைன் முன்பதிவு மூலம் தினசரி 15000 பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். புரட்டாசி மாத பூஜைக்காக சபரிமலை நடை செப்டம்பர் 16ஆம் தேதி  மாலை 5:00 மணிக்கு திறக்கிறது. செப்டம்பர் 17 ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை தினமும் 15000 பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். இதற்கான ஆன்லைன் முன்பதிவு நேற்று மாலை 5:00 மணிக்கு தொடங்கியது.

  வருகிற 16-ந் தேதி வியாழக்கிழமை மாலை 5 மணிக்கு ஐயப்பன் கோவில், தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி ஜெயராஜ் போற்றி நடையை திறந்து வைப்பார். 21-ந் தேதி வரை பூஜைகள் 5 நாட்கள் நடைபெறும். இந்த நாட்களில் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு, நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், உஷபூஜை, உச்ச பூஜைக்கு பின் மதியம் 1 மணிக்கு நடை அடைக்கப்படும்.

  பின்னர் மாலை 5 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்பட்டு தீபாராதனை, அபிஷேகம் நடைபெறும். அதை தொடர்ந்து இரவு 8.30 மணிக்கு அரிவராசனம் பாடி நடை அடைக்கப்படும். மேலும் தினசரி நெய்யபிஷேகம், உதயாஸ்தமன பூஜை, படி பூஜை உள்பட சிறப்பு பூஜைகளும் நடைபெறும்.

  ஐயப்பன் மலைக்கு தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் 48 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட ஆர்டிபிசிஆர் நெகட்டிவ் சான்றிதழ் அல்லது கொரோனா தடுப்பூசி 2 டோஸ் போட்டதற்கான சான்றிதழ் கண்டிப்பாக கொண்டு வர வேண்டும் என திருவிதாங்கூர் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

  மேலும் படிக்க... விநாயகர் சதுர்த்தி 2021 எப்போது, பூஜைக்கான சரியான நேரம் இதோ!

  விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் வாழ்த்து அட்டைகள்!

  எந்தெந்த திதியில் எந்தெந்த விநாயகரை வணங்குதல்   

  விநாயகர் சதுர்த்தி அன்று சொல்ல வேண்டிய 12 முக்கிய ஸ்லோகங்கள்...

  விநாயகரின் 32 வடிவங்கள் என்னென்ன தெரியுமா? 

  தோஷங்கள் நீக்கும் விநாயகர்... 12 ராசிக்காரர்களும் வழிபட வேண்டிய பிள்ளையார்கள்...                 

  விநாயகர் சிலைகளை இயற்கை மூலப் பொருட்களை கொண்டு தயாரிக்க வேண்டும் – சத்குரு வேண்டுகோள்

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Vaijayanthi S
  First published: