முகப்பு /செய்தி /ஆன்மிகம் / ஆதியோகியின் அருள் பெற உதவும் ருத்ராக்‌ஷ தீட்சை.. இலவசமாக பெற ஆன்லைனில் பதிவு செய்யலாம்..!

ஆதியோகியின் அருள் பெற உதவும் ருத்ராக்‌ஷ தீட்சை.. இலவசமாக பெற ஆன்லைனில் பதிவு செய்யலாம்..!

ஈஷா சத்குரு

ஈஷா சத்குரு

isha Rudraksha | சக்தியூட்டப்பட்ட இந்த ருத்ராக்‌ஷத்தை இலவசமாக பெற விரும்பும் பக்தர்கள் https://isha.co/rd-ta என்ற இணையதள முகவரியில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

மஹாசிவராத்திரியன்று சத்குரு அவர்களால் பிரதிஷ்டை செய்யப்படும் ருத்ராக்‌ஷத்தை உங்கள் இல்லத்தில் இலவசமாக பெறுவதற்கு ஆன்லைனில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

நம்முடைய பாரத கலாச்சாரத்தில் ஆன்மீக பாதையில் இருப்பவர்கள் ருத்ராக்‌ஷம் அணிவது பன்னெடுங்கால வழக்கமாக உள்ளது. ருத்ராக்‌ஷம் என்ற வார்த்தையின் பொருளே ‘சிவனின் பரவச கண்ணீர் துளி’ என்பதாகும். அதாவது, ருத்ரா என்றால் சிவன், அக்‌ஷா என்றால் கண்ணீர் துளிகள்.

புராண கதைகளின் படி, ‘ஆதியோகியான சிவன் நீண்ட காலம் ஆழ்ந்த தியானத்தில் அமர்ந்து இருந்தார். அவர் பரவசநிலையில் முற்றிலும் அசைவின்றி நிச்சலனமாக அமர்ந்திருந்தார். அவர் சுவாசிப்பதாகக் கூட தெரியவில்லை, அனைவரும் அவர் இறந்துவிட்டதாக நினைத்தனர். ஆனால், அவர் கண்களிலிருந்து வழிந்தோடிய பரவசக் கண்ணீர் துளிகள் மட்டுமே அவர் உயிரோடு இருந்ததற்கு ஒரே ஒரு அறிகுறியாக இருந்தது. அவருடைய கண்ணீர் துளிகள் பூமியில் விழுந்து ருத்ராக்‌ஷமாக மாறியது’ என கூறப்படுகிறது.

இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ருத்ராக்‌ஷத்தை அனைவரும் அணிந்து சிவனின் அருளை பெற வேண்டும் என்ற நோக்கத்தில் சத்குரு அவர்கள் ‘ருத்ராக்‌ஷ தீட்சை’ என்ற வாய்ப்பை ஏற்படுத்தி உள்ளார். இதற்காக, ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த மஹா சிவராத்திரி இரவில் லட்சக்கணக்கான ருத்ராக்‌ஷங்களை சத்குரு அவர்கள் ஆதியோகி முன்னிலையில் பிரதிஷ்டை செய்ய உள்ளார்.

சக்தியூட்டப்பட்ட இந்த ருத்ராக்‌ஷத்தை இலவசமாக பெற விரும்பும் பக்தர்கள் https://isha.co/rd-ta என்ற இணையதள முகவரியில் முன்பதிவு செய்து கொள்ளலாம். குடும்ப வாழ்க்கையில் இருப்பவர்கள் உட்பட ஆண், பெண் வேறுபாடு இன்றி அனைவரும் இந்த ருத்ராக்‌ஷத்தை அணிந்து கொள்ளலாம்.

Also see... மகா சிவராத்திரி 2023 எப்போது? தேதி, நேரம் குறித்த தகவல்கள்...

இந்த ருத்ராக்‌ஷத்தை அணிவது உடல் மற்றும் மனம் சமநிலை பெற உதவும். தியானம் செய்வதற்கும், அணிபவரின் ஒளி வட்டத்தை தூய்மைப்படுத்தவும் உதவிகரமாக இருக்கும். மேலும், எதிர்மறை சக்திகளுக்கு எதிரான கவசமாகவும் இருக்கும்.

Also see... ஈஷாவில் மகா சிவராத்திரி விழா... பிப்ரவரி 18-ம் தேதி கோலாகல கொண்டாட்டம்..!

ஆன்லைனில் பதிவு செய்பவர்களுக்கு, ருத்ராக்‌ஷத்துடன் சேர்த்து, தியானலிங்க விபூதி, அபய சூத்ரா, ஆதியோகி புகைப்படம் ஆகியவை அவர்களின் இல்லத்திற்கே அனுப்பி வைக்கப்படும்.

First published:

Tags: Isha, Maha Shivaratri