• HOME
  • »
  • NEWS
  • »
  • spiritual
  • »
  • பெண் எந்தெந்த நட்சத்திரத்தில் ருது வானால் என்னென்ன பலன் கிடைக்கும் ?

பெண் எந்தெந்த நட்சத்திரத்தில் ருது வானால் என்னென்ன பலன் கிடைக்கும் ?

பூரட்டாதி நட்சத்திரம் வரும் தினத்தில் ருது வானால் – பிள்ளை பிறக்க தாமதம் ஆகும்.

  • Share this:
    ருது ஆதல் என்றால் என்ன?

    புஷ்பவதி ஆவது, சடங்காகுதல், பெண் பெரிய பிள்ளை ஆதல், பூப்பு அடைதல் என்று பல பெயர்களில் அழைக்கப் படுகின்ற ஒரு நிகழ்வு. அறிவியல் ரீதியாகப் பார்த்தால் ஒரு பெண்ணுக்கு 12 அல்லது 13 வயதில் ஏற்படுகின்ற முதல் மாத விடாய்.

    1. அசுவினி: அசுவினி நட்சத்திரம் வரும் தினத்தில் ருது வானால்- பழி வாங்கும் குணம் ஏற்படும். துஷ்ட செய்கைகளை செய்து அவப்பெயர் வாங்குவார்கள்.

    2. பரணி : பரணி நட்சத்திரம் வரும் தினத்தில் ருது வானால் – நல்ல சந்ததி உண்டாகும்.

    3. கிருத்திகை: கிருத்திகை  நட்சத்திரம் வரும் தினத்தில் ருது வானால் – குழந்தை பிறக்க தாமதம் ஆகும்.

    4. ரோகிணி நட்சத்திரம் வரும் தினத்தில் ருது வானால் – நன்மைகளை உடையவள்

    5. மிருகசீரிஷம் நட்சத்திரம் வரும் தினத்தில் ருது வானால் – கணவனுக்கு இனியவள்

    6. திருவாதிரை நட்சத்திரம் வரும் தினத்தில் ருது வானால் – பிறரை காலப்போக்கில் வெறுப்பால். எதிர்மறை எண்ணங்கள் அதிகம் ஏற்படும்.

    7. புனர்பூசம் நட்சத்திரம் வரும் தினத்தில் ருது வானால் – சுகத்தை உடையவள்.

    8. பூசம் நட்சத்திரம் வரும் தினத்தில் ருது வானால் – லக்ஷ்மி கடாகஷம் உண்டு.

    9. ஆயில்யம் நட்சத்திரம் வரும் தினத்தில் ருது வானால் – வயிறு சம்மந்தமான பிரச்சனைகள் வரலாம். பிற்காலத்தில் மருத்துவ செலவுகள் கையை கடிக்கும்.

    10. மகம் நட்சத்திரம்  வரும் தினத்தில் ருது வானால் – கணவனுக்கு நல்லவள்

    11. பூரம் நட்சத்திரம் வரும் தினத்தில் ருது வானால் – குழந்தை பிறக்க தாமதம் ஆகும். அவல் கர்ப்ப காலங்களில் கூட கவனமாக இருக்க வேண்டும்.

    12. உத்திரம் நட்சத்திரம் வரும் தினத்தில் ருது வானால் – பிறருக்கு உதவக் கூடியவள்

    13. அஸ்தம் நட்சத்திரம் வரும் தினத்தில் ருது வானால் – நல்லவள்

    14. சித்திரை நட்சத்திரம் வரும் தினத்தில் ருது வானால் – அறிவாளி

    15. சுவாதி நட்சத்திரம் வரும் தினத்தில் ருது வானால் – குடும்பத்தில் அடிக்கடி கலகம் ஏற்படும்.

    16. விசாகம் நட்சத்திரம் வரும் தினத்தில் ருது வானால் – உடல் ரீதியாக மருத்துவ செலவுகள் அதிகம் இருக்கும்.

    17. அனுஷம் நட்சத்திரம் வரும் தினத்தில் ருது வானால் – வியாதியை தரும்

    18. கேட்டை நட்சத்திரம் வரும் தினத்தில் ருது வானால் – கற்புக்கு களங்கம் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

    19. மூலம் நட்சத்திரம்  வரும் தினத்தில் ருது வானால் – நன்மை உடையவள்.

    20. பூராடம் நட்சத்திரம் வரும் தினத்தில் ருது வானால் – பிறருக்கு அடிமையாக இருக்க நேரிடும் அல்லது ஏதேனும் ஒரு விதத்தில் பிறர் வசம் இருக்க நேரிடும்.

    21. உத்திராடம் நட்சத்திரம் வரும் தினத்தில் ருது வானால் – தர்ம, நியாயங்களை அறிந்தவள்.

    22. திருவோணம் நட்சத்திரம் வரும் தினத்தில் ருது வானால் – பாக்கியவதி

    23. அவிட்டம் நட்சத்திரம் வரும் தினத்தில் ருது வானால் – பொருளை உடையவள். வாழ்வின் பிற்பகுதியில் லக்ஷ்மி கடாக்ஷம் உண்டு.

    24. சதயம் நட்சத்திரம் வரும் தினத்தில் ருது வானால் – பொருள்களை இழக்க நேரிடும்.

    25. பூரட்டாதி நட்சத்திரம் வரும் தினத்தில் ருது வானால் – பிள்ளை பிறக்க தாமதம் ஆகும்.

    26. உத்திரட்டாதி நட்சத்திரம் வரும் தினத்தில் ருது வானால் – நிலையற்ற செல்வத்தை தரும். இதனால் அடிக்கடி பணத்தட்டுப்பாடு ஏற்படும்.

    27. ரேவதி நட்சத்திரம் வரும் தினத்தில் ருது வானால் – உடல் ரீதியாக அதிக கவனத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். அதிக மருத்துவ செலவுகள் தரும்.

    மேலும் படிக்க... 

    குரு பகவானின் வியாழக்கிழமை விரதமும் பலன்களும்

    குரு பெயர்ச்சி 2021 | ராஜயோகத்தை பெறபோகும் ராசிகாரர்கள் யார் தெரியுமா?

    குரு பெயர்ச்சி 2021: குரு பெயர்ச்சியின் இறுதி நிலையில் இந்த ராசியினர் பலவித பலன்களை பெறுவர்..

    குரு பெயர்ச்சி 2021 : இந்த ராசிகாரருக்கு இனி ராஜயோகம் தான்!           

    குரு பெயர்ச்சி பலன்கள் 2021: 12 ராசிகளுக்கான பொது பலன்கள்

    அதிசார குரு பெயர்ச்சி காலம் எவ்வளவு? யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம்..

    குரு, சனி வக்ர பெயர்ச்சி பலன்கள் 2021 - கும்ப ராசியினருக்கு எப்படி இருக்கும் தெரியுமா?

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: