ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

சபரிமலையில் 10 நாட்களில் 52 கோடி வசூல்.. 5 மடங்கு அதிக வருமானம்.!

சபரிமலையில் 10 நாட்களில் 52 கோடி வசூல்.. 5 மடங்கு அதிக வருமானம்.!

சபரிமலை

சபரிமலை

கொரோனா கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கப்பட்டுள்ளதால் சபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

சபரிமலையில் கடந்த 10 நாட்களில் மட்டும் 52 கோடியே 55 லட்சம் ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது. இது கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் 5 மடங்கு அதிகமாகும்

கடந்த ஆண்டு இதே காலத்தில் 9 கோடியே 92 லட்சம் ரூபாய் வசூலாகி இருந்தது. நாளொன்றுக்கு இரண்டரை லட்சம் கண்டெய்னர் அரவணை பிரசாதம் விற்பனையாகி வருவதாக தேவசம்போர்டு தெரிவித்துள்ளது. விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிற்று கிழமையில் மட்டும் ஒன்றே முக்கால் லட்சம் பேர் தரிசனம் செய்துள்ளனர்.

இந்த ராசியினருக்கு இன்று (நவம்பர் 27, 2022) நேர்காணலில் தேர்வாகுவதற்கான வாய்ப்பு இருக்கிறது..!

மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக கடந்த 16ம் தேதி கோயில் நடை திறக்கப்பட்ட நிலையில், நேற்று வரை 5 லட்சத்து 29 ஆயிரம் பக்தர்கள் வழிபாடு நடத்தியுள்ளனர். வருகிற 30-ந் தேதி வரை தரிசனத்திற்கு 8 லட்சத்து 79 ஆயிரம் பக்தர்கள் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்துள்ளனர்.

உடனடி முன்பதிவையும் சேர்த்தால் 10 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். கொரோனா கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கப்பட்டுள்ளதால் சபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது.

First published:

Tags: Ayyappan temple in Sabarimala